Friday, December 1, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022

குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022

குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022
குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022

கும்ப குருவின் பொது பலன்கள்

கால புருஷ தத்துவப்படி கும்ப ராசி என்பது பதினோராவது இடமாகும். இது கால புருஷனின் லாபம் மற்றும் பாதக ஸ்தானம் ஆகும். அதாவது ஒரு நன்மை கிடைக்கும் பொழுது நங்கென்று ஒரு குட்டும் கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சியின் போது மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அது வரும் வழி சற்று நெருடலாக அமையும். அரசியல்வாதிகளில் பலர் வழக்கமான குறுக்குவழிகளை பின்பற்றுவர்.

 • பொன் வகைகளில் அதிக அளவு செம்புகலக்கப்படும். பல மடாதிபதிகள் குறிப்பாக செல்வம் நிறைந்த மதத்தலைவர்கள் ஒன்று நோயின் பிடியில் சிக்குவார் அல்லது ஏதேனும் விபத்தை சந்திக்க கூடும்.
 • நிலம் விஷயமாக பல ரகசியங்கள் வெளிப்படும். சமையல் சம்பந்தமான ஏதாவது ஒரு விஷயம் வெளிவந்து மக்களை கலவர படுத்தக் கூடும். நிறைய திருமணங்கள் நடக்கும். எல்லாவற்றிலும் ஒருவித கலப்புத் தன்மை இருக்கும். மறு மணங்கள் நடக்கும்.
 • பதினோராம் இடம் என்பது பல ஆட்கள் கூடியிருக்கும் செயல், தொழிலை குறிக்கும். அதனால்தான் பதினோராம் இடத்தை கூட்டமான செயலை குறிப்பதாகக் கூறப்படுகிறது. குரு 11ல் இருக்கும்போது இவ்வித செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும். அவர் இருக்கும்
 • கும்ப ராசியில் உள்ள அவிட்ட நட்சத்திர சார செவ்வாய், இளம் வயதினரை கூடி நின்று வேலை செய்ய தூண்டுவார்.
 • சதய நட்சத்திர ராகு வேற்றின மக்களை சேர்த்து சேவை செய்ய கூறுவார்.
 • பூரட்டாதி நட்சத்திர குரு ஆன்மீகவாதிகளை அணைத்து செல்ல செய்வார்.

எனவே கும்ப குரு நிறைய மக்களின் சேர்ந்த ஆதரவோடு ஆசைகளை நிறைவேற்றுவார்.

இனி குருவின் பார்வை பலன்களை காணலாம்:

குருவின் ஐந்தாம் பார்வை

குரு தனது ஐந்தாம் பார்வையால் கால புருஷனின் மூன்றாம் இடத்தைப் பார்க்கிறார். அதனால்

 • மக்களுக்கு வாழ்வின் மீது ஒரு பிடிப்பு ஏற்படும்.
 • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
 • குழந்தைகளின் படிப்பில் சிறு சிறு இடைவெளி ஏற்படும்.
 • பல இளைய சகோதரர்களுக்கு திருமணம் நடக்கும்.
 • நிறைய மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகி வேலை கிடைக்கும். இதனால் மக்களுக்கு மனதில் ஒரு சக்தி பிறக்கும்.
 • சிறு தூர வாகன வசதி மேம்படும்.
 • பல ஜாதகர்கள் ஒப்பந்தம் குத்தகை எடுப்பார்கள். வீட்டு முதலீடு அதிகரிக்கும்.

குருவின் ஏழாம் பார்வை

குரு குரு தனது ஏழாம் பார்வையால் கால புருஷனின் ஐந்தாம் வீட்டைப் பார்க்கிறார். இது பூர்வபுண்ணிய வீடு எனவே

 • பூர்வீகத் தொழில் செய்பவர்களின் நிலை மேன்மை பெறும்.
 • பல ஜாதகர்கள் குழந்தை பாக்கியம் பெறுவர்.
 • கலைத்தொழில் பரிமளிக்கும்.
 • காதல் வெற்றி பெறும்.
 • பங்கு வர்த்தகம் ஓங்கும்.
 • தந்தையின் பூர்வீக வீடு கிடைக்கும்,
 • 5-ஆம் இடம் என்பது ஆரோக்கிய ஸ்தானம் இதனை குரு பார்ப்பதால் மக்களின் ஆரோக்கியம் அதிகம் மேன்மையடையும்.
 • இதுவரையில் இருந்து வந்த நோய் தொந்தரவுகள் விலகும்.
 • குருபார்வை ஆட்சி செய்வோருக்கு பழமையான விஷயங்களில் இருந்து வந்து நெருக்கடிகளை, கெட்ட பெயர்களை நீக்கி நல்ல பெயர் தந்து நல்லாட்சி செய்ய வைக்கும்.
 • குரு சூரியன் வீட்டை பார்க்கும் பொழுது ஆட்சியில் இருப்போரை மேன்மை அடையச் செய்வார்.

குருவின் 9-ஆம் பார்வை

குரு கும்ப குரு தனது 9ம் பார்வையால் கால புருஷனின் ஏழாம் வீட்டைபார்வையிடுகிறார்.

 • பல திருமணங்களை நடத்தி வைப்பார்.
 • வியாபாரம் பெருகும்.
 • வியாபாரத்தில் வேற்றுமதத்தவர் வெளிநாட்டினர் என அனைவரும் கூட்டு சேர்ந்து வணிகம் வளம் பெறும். இந்த கூட்டு செயலில் சற்று கள்ளத்தனம் கலந்திருக்கும்.
 • ஆன்மீக சுற்றுலா முன்னேறும்.
 • தொழில்கள் விருத்தியாகி மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
 • விவாகரத்து வழக்குகள் ரத்தாகி மணவாழ்வு தொடரும்.
குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022
குரு பெயர்ச்சி பலன்கள் -2021-2022

பொதுப்பலன்கள்

குரு பகவான் கும்பம் எனும் காற்று ராசியில் உள்ளார். அவர் மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார். மிதுனம் என்பது காற்று ராசி, சிம்மம் நெருப்பு ராசி, துலாம் காற்று ராசி. இதில் சிம்ம சூரியனுக்கும், குருவுக்கும் நன்றாக இணங்கி போய்விடும். சூரியனார் கோவிலில் சூரியன், சாயாதேவி ,உஷாதேவி எதிரில் குருபகவான் அருள் பாலித்துக் கொண்டிருப்பார். எனவே குரு பார்வை பட்டவுடன் சூரிய நெருப்பு அடக்கி வாசிக்கும். அதனால் சிம்ம ராசியை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். அரசு மூலம் மக்களுக்கு நன்மையே தருவார்.

 • இந்த மிதுனம் துலாம் ராசியை பார்ப்பதுதான் சற்று யோசிக்க வைக்கிறது. இரண்டும் காற்று ராசிகள், அதுமட்டுமல்லாது இரண்டிலும் உள்ள நட்சத்திர சாரங்கள் ஒன்று போலவே உள்ளது
 • மிதுன ராசியில் மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்கள் உள்ளன. அவை செவ்வாய், ராகு, குரு சாரம் வாங்கியுள்ளனர்.
 • துலாம் ராசியில் சித்திரை,சுவாதி, விசாகம், இவை செவ்வாய், ராகு, குரு சார நட்சத்திரங்கள் உள்ளன. குருவுக்கு பெருக்கும் குணமும் உண்டு இவர் பார்க்கும் காற்று ராசியில் உள்ள செவ்வாய் எனும் அசுப காரகத்தையும், ராகு என்னும் விஷ கிருமி காரகத்தையும் பெருக்குவார் என தெரிகிறது. ஆயினும் குரு சாரமும் உடன் இருப்பதால் மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதும் புரிகிறது. மேலும் குரு கால புருஷனின் 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஆரோக்கிய மேன்மை அடையும் என்பது நிச்சயம்.
 • குரு இருக்கும் வீட்டிலும் செவ்வாய், ராகு, குரு சாரம் நட்சத்திரங்களான அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகியவை இருப்பது கவனிக்கத்தக்கது.

எனவே இந்த குருப்பெயர்ச்சியில் குருபகவான் 3ம் இட ராகுவோடு அதுவும் காற்று ராசியோடு சம்பந்தம் பெறுகிறார் என்பதை கவனியுங்கள். இதனால் பெருக்கத்துக்குரிய குரு விஷப்பூச்சிகளை குறிக்கும். ராகுவின் காரத்தன்மையை பெருக்குவார் என்று அறியலாம். அதுவும் காற்றின் மூலம் பெருகும் என்று தெரிகிறது. ஆனால் முன்பு போல இது அதிக தீவிரம் இருக்காது ஏனெனில் குரு சாரம் நட்சத்திரங்கள் உடன் இருப்பதால் இந்த காற்று பரவல் கட்டுக்குள் இருக்கும்.

பொது பரிகாரங்கள்:

 • சிவபெருமான், தர்மசாஸ்தாவை வணங்கவும்.
 • குரு ராகு நட்சத்திரங்களை பார்ப்பதால் அவரவர் ஊரில் உள்ள காளி-துர்க்கையை வணங்கவும்.
 • சரபேஸ்வரரை விளக்கேற்றி வழிபடவும்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular