Thursday, April 18, 2024
Homeஆன்மிக தகவல்கருட புராணம்ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் என்னென்ன நிகழும்-கருட புராணம்

ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் என்னென்ன நிகழும்-கருட புராணம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கருட புராணம்

ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் என்னென்ன நிகழும் என்றால் ,

  • மரிப்பவனின் உடல் அங்கங்கள் தன் சக்தியையும் உணர்வையும் இழக்கத் தொடங்கும்.எமதூதர்கள் அவன் அருகில் வந்து நிற்க , அவனது சுவாசம் உடலைவிட்டு வெளியேறுகிறது . அவ்வாறு வெளியேறிய ஆத்மா , தெய்வீகப் பார்வைத் திறனைப் பெற்று , பிரபஞ்சம் முழுவதையும் ஒரே நேரத்தில் கண்டுணரும் ஆற்றலைப் பெறுகிறது.
  • மரண விளிம்பில் ஒருவன் மிகவும் பயங்கரமான தோற்றத்தைக் கொண்ட எமனை நேரில் காண்கிறான். சில உயிர்களை எம தூதர்கள் தடியால் அடிப்பதையும் , சில உயிர்களை விஷ்ணுவின் உதவியாளர்கள் நல்ல முறையில் அழைத்துச் செல்வதையும் காண்கிறான்.
  • மரணம் நிகழ்ந்த பின் , கட்டைவிரலின் அளவு உடைய ஜீவனானது ஸ்தூல உடலிலிருந்து எம தூதுவர்களால் வெளியே பறிக்கப்படுகிறது.அவ்வாறு வெளியேறிய ஜீவன் , தான் இதுவரை தங்கியிருந்த உடலைப் பார்த்து கதறி அழுகிறது. சுவாசமும் வாழ்வும் இல்லாமல் போன -தன் மனைவி,புத்திரன் மற்றும் உறவினர்களாலும்கூட தீண்டத்தகாதபடி வெறுப்புற வைக்கும் ஜடமாய் மாறிப்போன தன் உடலைப் பார்த்து அது தேம்பி அழுகிறது.
  • இதுவரை நான் தங்கியிருந்த இந்த உடலை இனி புழுக்கள் தின்னுமோ , அல்லது அழுகி மலக்குப்பையாக மாறுமோ . அல்லது எரிந்து சாம்பலாய்ப் போகுமோ என்று அந்த ஜீவன் பரிதவிக்கிறது.
கருட புராணம்
  • கருடா ! மரணம் வந்த மறுகணமே மனித உடல் அழிவை எதிர்கொண்டாக வேண்டும் . இதுவே விதி ! அத்தகைய நிலையற்ற உடலைப் பற்றி மனிதன் பெருமை பேசிக் கொள்வது சரியா?
  • ஒருவன் செல்வத்தைப் பெறுவதன் காரணமே அவன் பிற உயிர்களுக்கு உதவுவதற்குத்தான் ; அவன் பேசும் சக்தியைப் பெற்றிருப்பதே உண்மையைப் பேசுவதற்குத்தான் ; அவன் பெற்ற வாழ்வே இறைஞானம் பெற்று நீங்காப் புகழை அடைவதற்குத்தான் ; அவன் உடலைப் பெற்றிருப்பதே பிறர் மீதான கருணையுடன் நற்செயல்களைச் செய்வதற்குத்தான் . இந்த வழியில் நடந்தே . ஒருவன் நிலையற்ற உடலுக்கு நிலையான நற்கதியைப் பெற்றுத்தர முடியும் . ஆனால் உலகில் வாழும் காலத்தில் இதனை மனிதன் நினைத்துப் பார்க்கிறானா ?
  • வாழும் காலத்தில் அளவில்லாத தீமைகளைச் செய்யும் ஒருவனின் உயிரைப் பறித்துச் செல்லும் எமதூதர்கள் . அவன் நரகத்தில் அடையப் போகும் துன்பங்களை வழிநெடுக விவரித்துச் செல்கிறார்கள் . ‘ ‘ ஓ ! ஜீவனே ! நீ விரைவிலேயே நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுவாய் . அங்கே கும்பிபாகம் முதலிய கொடிய தண்டனைக்கு உள்ளாக்கப்படுவாய் . அவற்றை எதிர்கொள்ளத் தயாராயிரு ! ” என்று எமதூதர்கள் கூறுவதையும் , தன் உடலைப் பார்த்து தன் உறவினர்கள் துக்கத்தோடு நிற்பதையும் கண்ட ஜீவன் , தன் நிலையை நினைத்து கேவி அழுகிறது .

தொடரும்…..

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular