Friday, March 29, 2024
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-2023ராகு-கேது பெயர்ச்சி-2022-2023-மிதுனம்-பலன்கள்-பரிகாரங்கள்

ராகு-கேது பெயர்ச்சி-2022-2023-மிதுனம்-பலன்கள்-பரிகாரங்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மிதுனம்

(மிருகசீரிஷம்3 ,4 -ஆம் பாதங்கள்,திருவாதிரை,புனர்பூசம்1,2 ,3 – ஆம் பாதங்கள்)

நல்ல தீர்க்கமான சிந்தனையும் , அறிவாற்றலும் , நினைவாற்ற லும் கொண்ட மிதுனராசி நேயர்களே!!!

உங்கள் ராசிக்கு இது நாள் வரை 6 , 12 – ல் சஞ்சரித்த ராகு கேது தற்போது ஏற்பட பெயர்ச்சியால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி உள்ள வரும் 12-4-2022 முதல் 30-10-2023 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 11 – ஆம் வீட்டிலும் , கேது பகவான் 5 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள்.

ராகு 11 – ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும்.பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.தேவையற்ற செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்கமுடியும்.

ராகு-கேது பெயர்ச்சி-2022-2023-மிதுனம்

கேது 5 – ல் இருப்பதால் வயிறு பாதிப்பு , உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடு , பூர்வீகச் சொத்துரீதியாக பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் நிம்மதி குறைவு ஏற்படலாம்.உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செய்து முடிக்கமுடியும் .குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும்.புத்திரவழியில் தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும்.பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும்.திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் தீவிர முயற்சிக்கு பின்பு நல்லது நடக்கும். உற்றார் , உறவினர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படவும்.பூர்வீக சொத்துக்கள் ரீதியாக சிறிது மன நிம்மதி குறைவு ஏற்படும்.

ராகு-கேது பெயர்ச்சி-2022-2023-மிதுனம்
ராகு-கேது பெயர்ச்சி-2022-2023-மிதுனம்-பலன்கள்-பரிகாரங்கள்

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் உங்களது உடல் நிலை ஒத்துழைக்காது.எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும் , ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிட்டும்.பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துக்கொண்டால் வேலைப்பளு குறையும்.புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொண்டால் 2023 & ல் மிகவும் உயர்வான நிலையை அடைய முடியும்.

செய்யும் தொழில் , வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் உங்களது உழைப்பு சற்று அதிகமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும்.போட்டி, பொறாமைகளால் மனநிம்மதி குறையும்.நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும்.அதிக முதலீடு விஷயத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது . தற்போது சற்று பொறுமையுடன் இருந்தால் 2023 – ல் தொழிலில் நல்ல முன்னேற்றங்களை அடையலாம்.

பரிகாரம் :

ஒருமுறை காணிப்பாக்கம் தலம் சென்று கணபதியை வணங்குங்கள். திருவனந்தபுரம் சென்று தரிசனம் செய்யுங்கள்.புதன்கிழமையில் பெருமாள் , தாயாரை வணங்குங்கள்.ஏழை மாணவர்கள் படிப்புக்கு உதவுங்கள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular