LATEST ARTICLES

கார்த்திகை நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

கார்த்திகை

இது அடுக்கு தீபம் போல் பிரகாசமாக தோன்றும். கார்த்திகை
நட்சத்திரம் இரண்டு ராசியில் சம்மந்தப்பட்டது. பரணி, கார்த்திகை
என்பதை வானில் மேலிருந்து கிழக்காகப் பார்த்தால் தெரியும்.
இதன் சமீபமாகவே சந்திரன் தெற்கில் ஊர்ந்து செல்லும்.

கார்த்திகை
அனைத்து நட்சத்திரத்தையும் வசிய படுத்தும் யந்திரம்

1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – செயல் திறன் உள்ளவர்கள்.
எதையும் சாதிப்பவர்கள்.
2) இந்த நட்சத்திரம்-கால் அற்றது.
3) இந்த நட்சத்திரம்-கீழ்நோக்கு நாள் ஆகும்.
4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யக்கூடாது.
5) இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள் – அ, இ, உ எ.
6) இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள் – ஆ. ஈ.
7) இந்த நட்சத்திர கணம் – ராட்க்ஷச கணம்.
8) இந்த நட்சத்திர மிருகம் – பெண் ஆடு
9) இந்த நட்சத்திர தாவரம் – அத்தி.
10) இந்த நட்சத்திர பட்சி – மயில்

யந்திரம்

கார்த்திகை

இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்

எப்படி பூஜை செய்ய வேண்டும் ?

 • தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
 • கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
 • முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
 • பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
 • பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.

வசிய மந்திரம்

1) கார்த்திகையே வந்தருள்கவே !
2) ஏழைக்கு சீர்தரவே வருகவே !
3) கனத்த மழையுடன் கார்த்திகையே வருகவே !
4) என் மீது கருணையை வைத்து அருள்கவே !
5) அருட்பெருஞ்ஜோதியை என் கையில் தந்தருள்கவே !
6) வா துரையே வந்தருள்கவே !
7) வா சிவமே வா வந்தருள்கவே !
8) வந்தெமக்கருள்கவே !

மகாலட்சுமி யார் வீட்டில் குடியிருப்பாள் ?

மகாலட்சுமி

நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்தால் போதும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம். ஆலயத்தில் செல்வந்தர் ஒருவர் அம்மனுக்கு எல்லா அபிஷேகமும் செய்து, தனது வீட்டுக்கு மகாலட்சுமி குடி வர வேண்டும் என்று வேண்டுவார். அவருடன் வந்த ஊர்தி ஓட்டுநரும் தனக்கு செல்வம் வர வேண்டும் என்று வேண்டுவார்.

மகாலட்சுமி யார் வீட்டுக்கு செல்வாள்? ஏழை-எளியவர்கள், பணக்காரர்கள் அனைவருக்கும் மகாலட்சுமி துணைக்கு வர தயாராக இருக்கிறாள். ஆனால் ஏன் அவள் எல்லா இல்லங்களுக்கும் வருவதில்லை என்றாள், பொதுவாக நமது எண்ணம் கடலளவு ஆசை கொண்டதாக உள்ளது. பணத்தின் மேல் மட்டுமே பற்று உள்ளது. உற்றார், உறவினர்கள் மீது பற்று இருப்பதில்லை. நமது குழந்தைகள் மீது மட்டும் அதிக பற்றிருக்கும்.மற்ற குழந்தைகளின் மீது இருக்காது. நமது தேவைக்காக மட்டுமே எதையும் செய்கிறோம்.

மகாலட்சுமி

பெரும் தனவந்தர் ஒருவர் இருந்தார் .அவரிடம் பல தலைமுறைகளாக சேர்த்து வைத்த பெரும் செல்வம் இருந்தது. மகாலட்சுமி அவரது கனவில் தோன்றி “தனவந்தரே,உமது முன்னோர்கள் செய்த புண்ணியங்களால் உங்கள் வீட்டில் நான் குடிகொண்டு வறுமை என்பதை அறியாமல் வயது முதிர்ந்த இந்த காலம் வரை உமக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தேன். உமது முன்னோர்கள் செய்த புண்ணியம் அனைத்தும் நாளையுடன் தீர்ந்துவிடும். நீ புண்ணியம் எதுவும் செய்யாமல் வாழ்ந்து வருவதால் நான் உமது வீட்டை விட்டுப் போய் விடுவேன். அதற்கு முன் ஒரு வரம் மட்டும் நீ கேட்கலாம் என்று சொன்னாள்.உடனே தனவந்தர் ,”தாயே பொன்னும் பொருளும் வேண்டும்” என்று கேட்டார். அத்தனையும் மகாலட்சுமி கொடுத்தாள்.

மறுநாள் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டாள் மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியவுடன் அவள் வழங்கிய செல்வங்கள் அனைத்தும் நிலைக்காமல் போய்விட்டன. இது கதை போன்று தோன்றினாலும் பணக்காரர்களாக இருந்து ஏழைகளாக மாறிய பல குடும்பங்களை இன்றும் நாம் காண முடிகிறது. எனவே மகாலட்சுமி நம் வீட்டில் குடியேற வேண்டும் என்றால் அதிக செலவில் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை. எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ்கின்றார்களோ, எந்த குடும்பத்தில் சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக மகாலட்சுமி குடியிருப்பாள். வறுமையற்ற வாழ்வு அமையும்.

பரிகாரம்

மகாலட்சுமி வீட்டில் தங்கிட நாம் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை பழக்கங்கள் போதும் அதையே பரிகாரமாக கொள்ளலாம்.

குருக்களை(ஆசிரியர்களை) வழிபட வேண்டும். அனைவரிடமும் நாகரிகமான முறையில் மரியாதையுடன் பழக வேண்டும். மற்றவர்களின் செய்கையால் நமக்கு கோபம் ஏற்பட்டாலும் சண்டை எதுவும் போடக்கூடாது. மனைவி,மக்களை நேசிக்க வேண்டும். அதுபோல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். பிறருக்கு உதவ வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுபவர்களின் வீட்டில் எப்போதும் மகாலட்சுமி குடியிருக்கிறாள்; குடியேறுவாள்.

பரணி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

பரணி

இது மூன்று நட்சத்திரங்களால் அடுப்புக்கட்டி போல் இருக்கும்.இம்மூன்றும் மங்கலாகவே தெரியும் .சந்திரன் இவற்றினுக்கு தெற்காக ஊர்ந்து கிழக்கே செல்வதை பார்க்கலாம்.

பரணி
அனைத்து நட்சத்திரத்தையும் வசிய படுத்தும் யந்திரம்
 • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்- தரணியை ஆள்வார்கள் -பெற்றோருக்கு உகந்தவர்கள்
 • இந்த நட்சத்திரம்- பூரண உடல் பெற்றது
 • இந்த நட்சத்திரம் -கீழ் நோக்கு நாள் ஆகும்.
 • இந்த நட்சத்திரத்தில் -சுபகாரியம் செய்ய கூடாது.
 • இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள்- லி,லு,லெ,லே
 • இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள்- சௌ,சொ
 • இந்த நட்சத்திர கணம்- மனித கணம்
 • இந்த நட்சத்திரம் மிருகம்- ஆண் யானை
 • இந்த நட்சத்திர தாவரம்- நெல்லி
 • இந்த நட்சத்திர பட்சி – காக்கை

யந்திரம்

பரணி

இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்

எப்படி பூஜை செய்ய வேண்டும் ?

 • தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
 • கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
 • முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
 • பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
 • பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.

வசிய மந்திரம்

பரணி உடுவே வந்தருள்கவே !
பரணி பூரணியே வருகவே !
என்னை மேல் நிலைக்கு உயர்த்தவே வா !
என் புருவ நடுவில் நின்று அருள்கவே !
இங்கு அற்புத பணியை கொடுத்தருள்கவே !
வா தவசியே வந்தருள்கவே !
வந்தே எமக்கு அருள்கவே !
கருணையுடன் வந்தருள்கவே !

அஸ்வினி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

அஸ்வினி

இது இரண்டு குதிரை தலையை போல் காண்பதை படத்தில் பாருங்கள். இதில் பெரிய நட்சத்திரங்கள் பிரகாசமாயும், சிறிய நட்சத்திரங்களால் குதிரை தலைகளும் நமக்கு தெரிகிறது. ஒன்றின் தலை வடக்கு பார்த்தும் மற்றது கிழக்கு நோக்கியும் நம் தலைக்கு வடக்கே இவைகள் தோன்றும். ஜனவரி 20ஆம் தேதி வரை இரவில் நம் தலைக்கு வடக்கே தெரிவதை பார்க்கலாம்.

அஸ்வினி
அனைத்து நட்சத்திரத்தையும் வசிய படுத்தும் யந்திரம்

சந்திரன் அசுவதியில் ஊர்ந்து வரும்போது தெற்கே தெரியும்

 • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களை பூர்த்தி செய்பவர்
 • இந்த நட்சத்திரம் பூரண உடல் பெற்றது
 • இந்த நட்சத்திரம் சமநோக்கு நாளாகும்
 • இந்த நட்சத்திரத்தில் யாரும் சுபகாரியம் செய்யலாம்
 • இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள்- சு, சோ, சே, ல
 • இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள்- செ ,சை
 • இந்த நட்சத்திர கணம்- தேவ கணம்
 • இந்த நட்சத்திரம் மிருகம்- ஆண் குதிரை
 • இந்த நட்சத்திர தாவரம்- எட்டி
 • இந்த நட்சத்திர பட்சி – ராஜாளி

யந்திரம்

அஸ்வினி

இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்

எப்படி பூஜை செய்ய வேண்டும் ?

 • தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
 • கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
 • முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
 • பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
 • பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.

வசிய மந்திரம்

அசுவதியே வந்தருள்கவே!
வீசுக நின் கடைக்கண் அருளை !
வீசிட துனி (துன்பம்) இனி இல்லை!
ஜோதிதான் யேகஏகம்!
அதுவே வகாரரமும் ஆச்சுதே!
நீ அருட் பெருஞ்ஜோதியுடன் வருகவே!
வந்தெனக்கு நீ பெற்ற சுகத்தை தந்தருள்க!
வேண்டினேன் நின்னருள் தருகவே!

புஷ்கார நவாம்ச அட்டவணை

புஷ்கார நவாம்ச அட்டவணை

புஷ்கார நவாம்ச அட்டவணை

லக்னம் புஷ்கார நவாம்ச பாதத்தில் அமைந்துவிட்டால் ஜாதகருக்கு யோகம் அமைந்து கொண்டே இருக்கும்.லக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று விட்டால் ஜாதகர் உலக புகழ் பெரும் வாய்ப்பு உண்டாகும்.

ஜாதகத்தில் 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட கிரகங்கள் புஷ்கார நவாம்ச நட்சத்திர பாதத்தில் அமர்த்துவிட்டால்,ஜாதகர் மதிப்பு மிக்கவர் ,அதிஷ்டம் உடையவர்,கடவுள் அருள் பெற்றவராக இருப்பார்.

ஜாதகனின் அந்தஸ்து மற்றும் உயர் நிலையை புஷ்கார நவாம்சத்தின் மூலம் அறியலாம்.

நாடாளும் யோகம் உள்ள ஜாதகம் எப்படி இருக்கும் ?

நாடாளும் யோகம்

ஒவ்வொரு ஜாதகமும் பலவித பரிணாமங்களை உள்ளடக்கியதாகவே உள்ளன. தோஷம், யோகம், பாபம், சுபம் என மாறி மாறி கலந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜாதக வலுவுக்கு ஏற்றவாறு மனிதனை பண்படுத்துகின்றன. அந்த வழியில் பண்படுத்தப்பட்ட மனிதர்களின் மனநிலையும் மாறுபட்டுக் கொண்டே வருகிறது. மனமாற்றம் மூலம் உந்துதல் சக்தி தருவது தசா புத்தி காலங்களே ஆகும்.

நேற்று வரை நாத்திகம் பேசியவர்கள் திடீரென்று கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்வதன் காரணமும் தசா புத்திகளே! அடிப்படையில் ஜாதகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.யோக ஜாதகம்

2.சாதாரண ஜாதகம்

3.தோஷ ஜாதகம்

சாதாரண ஜாதகம்; என்பது சகடயோகம் போன்றது. குறிப்பிட்ட சில வருடங்கள் அபரிவிதமான செல்வாக்கு, புகழ் தரும். மீண்டும் சரிவை நோக்கி செல்லும். கண்ணுக்கு புலனாகாத தோஷங்கள் ஜாதகங்களில் கலந்து இருக்கவே செய்யும்.

தோஷ ஜாதகம்; என்பது தோல்வி அடைந்த நிலையை காட்டும். என்ன பரிகாரம் செய்தாலும் குறைகளை அகற்ற முடியாது (அல்லது) அகற்றுவதற்கு வழி இல்லாமல் தான் இருக்கும். தோஷம் கூடிய ஜாதகங்கள் சாதாரண வேலையாட்கள், அடிமைக்கூலிகள், அன்றாட சாப்பாட்டுக்கே திண்டாடும் ஏழைகள் என பலரை காணலாம்.

யோக ஜாதகம்; என்பது ஒரு மனிதனை சிறப்பான அந்தஸ்தில் வைக்கும். உயரிய யோகங்கள் அமையும் போது அந்த ஜாதகரை கோபுரத்தின் உச்சியில் உயர்த்தும். இதுதான் ‘நாடாளும் யோகம்’ என்பது. பண்டைய காலத்திலும் சரி இன்றைய காலகட்டங்களிலும் சரி அரசியலமைப்பு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. மாறாக பதவிகளும், பொறுப்புகளும் மாறி உள்ளன. மன்னராட்சி என்பது மக்களாட்சி என்றும் மாறியுள்ளது.

This image has an empty alt attribute; its file name is Designer-29.png

நாடாளும் வழிமுறைக்கு கிரகங்கள் எந்த வழியில் உந்துதல் சக்தி அளிக்கிறது?அதன் பரிணாமம் எப்படி இருக்கும்? ஜாதக கிரக நிலையில் எந்த விதத்தில் அமைந்தால் நாட்டை ஆளும் தகுதியை பெற முடியும்? என்பதை இனி காணலாம்.

பதவி என்பது பொதுநல சிந்தனையே. பதவிக்கு வருபவர்களுக்கு தன்னலமற்ற சமூக சிந்தனை வேண்டும். சிலருக்கு சுயநலம் என்று இருந்தாலும் பெரும்பாலான விஷயங்களில் பொதுநலனையே பெற்றிருப்பார்கள். பொதுநலம் சார்ந்த எண்ணங்களை தருவது சர லக்னம் எனலாம்.

சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்கள் நாடு ஆள முடியும் என்பதற்கு பலரின் உதாரணங்களைக் கண்டு இருப்போம்.

ஸ்திர,உபய லக்னங்களில் பிறந்த ஜாதகர்கள் நாட்டை ஆளும் தகுதியை பெறுவது சற்று சிரமம்தான். மேற்கண்டது போல்50% ஸ்திர லக்கினங்கள் ஆளும் வைப்பை ஏற்படுத்தினாலும், அது நீடித்த யோகத்தை தருவதில்லை. உதாரணமாக முன்னாள் பாரத பிரதமர் உயர்திரு ராஜீவ் காந்தி அவர்கள் சிம்ம லக்கினம், சிம்ம ராசியில் பிறந்துள்ளார். 12-ஆம் இடம் கடக ராகு அவருக்கு ஆட்சி பீடத்தை வழங்கினார்.

லக்னத்தில் இருக்கும் யோகர்களால் ராஜ யோகமாக்கப்பட்டு நமது இந்திய தேசத்தை ஆண்ட பெருமை அவரைச் சாரும். ஆனாலும் அது நீடித்து நிலைக்கவில்லை.

கேந்திரங்களும் திரிகோணங்களும் மற்றும் அதன் அதிபதிகளும் நல்ல பலன் கொடுக்கும் நிலையில் அமைய வேண்டும். கேந்திராதிபதி கேந்திர பலமும், திரிகோணாதிபதி திரிகோண பலமும் பெறவேண்டும். பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்று, மற்றும் ராஜ யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், அமலா யோகம், கஜகேசரி யோகம், சந்திர மங்கள யோகம் போன்ற முக்கிய யோகங்கள் அமைய வேண்டும்.

நாடாளும் தகுதி படைத்த ஒருவருக்கு அல்லது அவரின் பேச்சுக்கு வழிகாட்டுதலுக்கு பல கோடி மக்கள் தலையை ஆட்டிட 2ம் இடம் வலுக்க வேண்டும். சனியும் ராகுவும் பத்தாமிடம் மற்றும் அதன் அதிபதியுடன் சம்பந்தப்பட வேண்டும். சனியோ அல்லது ராகுவோ இல்லாமல் அரசியல் என்னம் ஏற்படாது.

3,6,8,10,11 போன்ற இடங்களில் சூரியன் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். 8ம் இடத்தில் சூரியன் புதன் இணைவு நாடாளும் யோகம் என்கிறது மூல நூல்கள். 3க்கு உடையவனும் பலம் பெற்றால் ஆளும் தகுதி தானாக வந்துவிடும்.

பூர்வ புண்ணியம் (5ம் இடம்) வலுக்க வேண்டும். புகழ் ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாம் இடத்து அதிபதி மறைவிடங்களில் நிற்பது அரசியல் யோகத்தை தராது. சரியான யோகமான தசா புத்திகளில் குறிப்பிட்ட காலத்தில் நடக்க வேண்டும்.

குறிப்பு: பாவ கிரகங்கள் ஆட்சி பீடத்தை அலங்கரிக்கும். அதிலும் சனி, ராகு, சூரியன், செவ்வாய் போன்ற தசா புத்தி காலங்களில் ஒருவரை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும். மற்ற கிரகங்கள் ஒவ்வொரு வகையிலும் ஒரு யோகத்தை தருமேயன்றி ஆட்சி பீடத்தை தராது. ஆக மேற்கூறிய அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள ஜாதகம் ஒரு தேசத்தை ஆளும் என்பது தான் ஜோதிடம் கூறும் உண்மை.

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தானமும் அற்கான பலன்களும் !

அட்சய திருதியை

பொதுவாக தானம் கொடுத்தால் மிகப் புண்ணியம் சேரும். அதுவும் வளமை தரக்கூடிய அட்சய திருதியில் தானம் கொடுத்தால், நாம் நிறைய நிறைய தானம் செய்யும் தகுதி உண்டாகும். இதன் உள்ளீடான கருத்து நமக்கு செல்வம், தனம், இவற்றின் வளம் பெருகும் என்பதுதான்.

 • மலர் ,செடி தானம்- மங்கலம் பெருகும்.
 • அன்னதானம் மோட்சம் கிட்டும்.
 • பசுவுக்கு புல், கீரை கொடுத்தால்- பிள்ளை வரம் கிடைக்கும்.
 • கோவில் திருப்பணி செய்தால்- மேன்மை கிட்டும்
 • பானகம், மோர் தானம் செய்தால் -சன்னதி ஷேமம் உண்டாகும்.
 • தொழு நோயாளிக்கு விருந்து படைத்தால்- கர்மம் அகலும்.
 • அந்தணருக்கு விருந்து கொடுத்தால்- ஆபத்து விலகும்.

தானம் கொடுக்கும் போது தங்கம், பசு, நிலம் இவைகளை தானம் கொடுத்தால் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும் தான். ஆனால் ‘ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க’ என்ற கதையில் வாழ்க்கை வண்டி தட்டுப்பாடுடன் ஓடினால் என்ன செய்வது?

அட்சய திருதியை

எனவே இம்மாதிரி மனிதர்களுக்காக அதற்கு ஈடான மாற்று வழிகள் கூறப்பட்டுள்ளது. தங்கம் கொடுக்க ஆசைப்பட்டு அதற்கு காசு இல்லை என்றால் உழவாரப்பணி செய்தால் தங்கம் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

பசு தானம் செய்ய விரும்பி அதற்குரிய பணமில்லை எனில் மட்டையுடன் தேங்காய் தானம் செய்வது பல மடங்கு புண்ணியம் சேரும்.

நில தானம் செய்ய விரும்பி பண வசதி தோது படாவிட்டால் ஒரு சந்தன கட்டையை தானம் செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்ளவும். தான தர்மம் செய்ய மனசு தான் முக்கியம். செய்யும் தர்மத்தை விளம்பரப்படுத்தாமல் செய்வது அதைவிட முக்கியம் உங்களின் தர்ம கணக்கை இறைவன் அறிந்தால் போதுமானது.

அட்சய திருதியை -2024

அட்சய திருதியை -2024

2024 ஆம் வருடம், சித்திரை 27ஆம் தேதி, மே 10ஆம் தேதி வருகிறது ‘அட்சய திருதியை’. இது வெள்ளிக்கிழமை. ரோகிணி நட்சத்திரத்தில் அமைகிறது. ரோகிணியில் சந்திரன் உச்சம் அடைவார். அன்று ரோகிணி நட்சத்திரம் மதியம் 01.09 மணி வரை உள்ளது. ஆனால் அன்றைக்கு திதி தான் முக்கியம். ‘அட்சய திருதியை’ அன்று காலையில் ஆரம்பித்து இரவு வரை நீள்கிறது. எனவே வெள்ளிக்கிழமை 10:30 முதல் 12.00 மணி வரை ராகு காலம் தவிர்த்து தங்கம் போன்ற பொருள்களை வாங்கலாம்.

அட்சய திருதியை

தங்க மட்டுமல்ல நீங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான எச்செயலையும் இன்று ஆரம்பித்து ஒரு பிள்ளையார் சுழி போட்டு விடுங்கள். வீடு, மனை, வாகனம் வாங்க பெரு விருப்பம் உள்ளவர்கள் அது சம்பந்தமான நிறுவனத்திடம் ஃபோன் போட்டு விலை விசாரிக்கவாவது முயற்சி செய்யுங்கள்.

இன்னாளில் எதைச் செய்தாலும் அது பன்மடங்காக பெருகும். வளம் பெரும் முன்னேற்றம் கிட்டும். எனவே உங்கள் வாழ்வில் எந்த விஷயங்கள் பல்கிப் பெருக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அவர்கள் இந்த அட்சய திருதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விரும்பியதை கொடுக்கும் பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர்

பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர்

தக்ஷன், விஷ்ணு, பிரம்மாதிகளுக்கு அகங்காரம் மேலிட்ட காலத்து அவர்களை சிவாக்கையால் சிக்ஷித்து அனுக்கிரகித்த சிவனின் வடிவமே பைரவர். இவருக்கு வேத உருவமாய் நாய் வாகனம் இவருடைய திருநாமத்தில் அமைந்த ( படைத்தல், ரட்சித்தல், வதைத்தல்) படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் உணர்த்தும்.

கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு கால பைரவர் சோழ மன்னர்களால் போற்றி வழிபட்டவர். இவருக்கு தேய்பிறை அஷ்டமி தோறும் (பைரவாஷ்டமி ) சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வடைமாலை சாற்றி தயிர் பள்ளயம் இட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர்

நோயுற்றோர், கடன் சுமையில், அழுந்துவோர், துஷ்ட கிரகப்பிடியில் அகப்பட்டோர், குற்றம் சுமத்தப்பட்டோர் பைரவரை பூஜித்தால் நலம் பயக்கும்.

நவகிரக தோஷங்கள் நீங்கிட: கால பைரவருக்கு செவ்வரளி பூவால் ஒன்பது வாரங்கள் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய நவகிரக தோஷம் நீங்கும்.

குழந்தை பேரு கிட்ட: தம்பதியர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் சிகப்பு நிற பூக்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய குழந்தை பேரு கிட்டும்.

வறுமை நீங்க : வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ அல்லது சகஸ்ர நாம அர்ச்சனையோ செய்து 11 வைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். 11 அஷ்டமிகள் தொடர்ந்து வழிபட்டால் இஷ்ட சித்தி கைகூடும்.

இழந்த சொத்துக்கள் திரும்ப பெற: 11 அஷ்டமிகள் வைரவ தீபம் ஏற்ற வேண்டும்.

சனி தோஷம் நீங்க: 9 சனிக்கிழமைகள் செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து நான்கு வைரவத் தீபங்கள் ஏற்றி வழிபட சனி தோஷம் நீங்கும்.

திருமண தடை நீங்க: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கும்.

பகை அச்சம் நீங்க :9 அஷ்டமிகள் பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கேற்ப நிவேதனங்கள் செய்ய வியாபார தொடர்பான பகை, அச்சம், நஷ்டம் நீங்கும். எல்லாவிதமான தொல்லைகளும் அகலும்.

பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர்

தீராத நோய்கள் தீர: பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும்.அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள நோய்கள் நீங்கும்.

செல்வம் செழிக்க: வளர்பிறை அஷ்டமிகளில் கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசினை அலுவலகம் அல்லது வீட்டில் பணப்பெட்டியில் வைக்க செல்வம் கொழிக்கும்.

தினம்தோறும் “ஓம் ஸ்ரீ சொர்ணா கர்ஷன பைரவாய நமஹ” என்று 108 முறை ஜெபிப்பதும் நல்லது.

பைரவ தீபம் என்பது மிளகினை சிறு மூட்டைகளாக கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் எட்டு தீபம் ஏற்றுவதாகும்.

ஸ்ரீ பைரவர் உபய அபிஷேக நேரம் :காலை 9 மணி, பகல் 12 மணி, இரவு 8 மணி, இரண்டாம் காலத்தில் அபிஷேகம் செய்வதே சால சிறந்தது.

மே மாத ராசிபலன்கள் -2024

மே மாத ராசிபலன்கள் -2024

மேஷம் -Mesham

உங்கள் ராசிக்கு 2ல் குரு, 11 சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஆகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். 12ல் செவ்வாய் மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்படுவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 மே மாத ராசிபலன்கள் -2024

தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்பால் நல்ல செய்தி கிடைக்கும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும்.

பரிகாரம் : சிவனையும் முருகரையும் வழிபடுவது நல்லது.

ரிஷபம் -Rishbam

மாதம் முற்பாதியில் சூரியன் 12ல் சஞ்சரித்தாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள சங்கடங்கள் சற்று குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களை பெறுவீர்கள். பண வரவுகளில் இருந்து இடையூறுகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளினால் நற்பலனை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : சிவ வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்வது நல்லது

மிதுனம் -Mithunam

உங்கள் ராசிக்கு செவ்வாய் 10ல் மாத முற்பாதியில் சூரியன், சுக்கிரன், 11ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைத்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஒரு சிலருக்கு விரும்பி இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.

கடகம் -Kadagam

சூரியன் 10, 11ல் சஞ்சரிப்பதாலும், குரு 11ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விலகி அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பணம் வரவிலிருந்த தேக்க நிலை விலகி தாராள தன வரவு ஏற்படும். சனி 8ல் உள்ளதால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதிவு உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும்.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : பெருமாள் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம் -Simmam

சூரியன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 9 ,10ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 8ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனி 7ல் உள்ளதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும்.

தொழில், வியாபார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும், எதையும் எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது சிறப்பு.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

கன்னி – Kanni

உங்கள் ராசிக்கு 7ல் செவ்வாய், மாத முற்பாதியில் 8ல் சூரியன் சஞ்சரிப்பது குடும்பத்தில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 6ல் சனி, 9ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகள் வகையில் சுபச் செலவுகளை சந்திக்க நேரிடும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உழைப்பிற்கான ஆதாயம் கிடைக்கும்.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : முருக வழிபாடு செய்வது நல்லது.

துலாம் -Thulam

உங்கள் ராசிக்கு 5ல் சனி, 6ல் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிவோடு செயல்படுவீர்கள். உங்களுக்கு உள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். இம்மாதத்தில் சூரியன் 7,8ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இடத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும், பணியில் கவுரவமான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : சிவனையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.

விருச்சிகம் -Viruchigam

உங்கள் ராசிக்கு மாத பிற்பாதியில் 6ல் சூரியன், 7ல் குரு, 11ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தடைபட்ட சுப காரியங்கள் குடும்பத்தில் கைகூடும். பணவரவுகள் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும்.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவதும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.

தனுசு – Dhanusu

உங்கள் ராசிக்கு 3ல் சனி, 4,5ல் புதன் மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும்-அசையா சொத்துகளும் சேரும். செவ்வாய் 4ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் தொடர்புகள் மூலம் தொழில் வளர்ச்சிக்கான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : அம்மனையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது உத்தமம்.

மகரம் -Magaram

உங்கள் ராசிக்கு 3ல் செவ்வாய், ராகு, 5ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. சுக்கிரன் 4 ,5ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பண பிரச்சனைகள் எல்லாம் குறையும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கவுரவமான பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். அதிகாரிகளிடம் பேச்சை குறைப்பது நல்லது.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : ஆஞ்சநேயர், பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.

கும்பம் -Kumbam

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். செவ்வாய் ராகு 2ல் இருப்பதால், பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் இலக்கை அடைவீர்கள். வெளிவட்டார தொடர்புகளில் சாதக பலன் ஏற்படும்.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

மீனம் -Meenam

உங்கள் ராசிக்கு 2ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, முடிந்தவரை பிற விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

 மே மாத ராசிபலன்கள் -2024

பரிகாரம் : அஞ்சநேயர், பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.