மேஷம்

உடல் நிலையில் சோர்வும்,  மந்தமும் உண்டாகும்.  ஆரோக்கியத்துக்காக சிறு  தொகைசெலவிட நேரிடும்.

ரிஷபம் 

குடும்பத்தில் பொருளாதார  ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும்.  உற்றார் உறவினர்களால்  மனசங்கடங்கள் நிலவும்.

மிதுனம் 

கடினமான காரியத்தை கூட  துணிவுடன் செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

கடகம் 

நண்பர்கள் மூலம் சுபசெய்திகள்  கிடைக்கும். பிள்ளைகளுடன்  இருந்த மனஸ்தாபம்  நீங்கும்.

சிம்மம் 

நினைத்த காரியம் எளிதில்  நிறைவேறும். பிள்ளைகளால்  மகிழ்ச்சி தரும் செய்திகள்  கிடைக்கும். ஆடை ஆபரணம்  சேர்க்கை ஏற்படும்.

கன்னி 

வரவை காட்டிலும் அதிக செலவுகள்ஏற்படலாம். தொழில்  வியாபாரத்தில் மறைமுக  எதிரிகளால் பிரச்சினைகளை  சந்திக்க நேரிடும்.

துலாம் 

குடும்பத்தில் இருந்த  பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். சுப  செய்திகளால்  மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம் 

உறவினர்களால் குடும்பத்தில்  மகிழ்ச்சியான சூழ்நிலை  உருவாகும். பிள்ளைகளின்   படிப்பில் நல்ல முன்னேற்றம்  ஏற்படும்.

தனுசு 

பணவரவு சுமாராக இருக்கும்.  சுபமுயற்சிகளில் தாமத நிலை  உண்டாகும்.  வேலையில் சக ஊழியர்களை  அனுசரித்து செல்வது நல்லது.

மகரம் 

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்   இருப்பதால் தேவையற்ற மன  குழப்பம் ஏற்படும்.  குடும்பத்தினரிடம் வீண்  வாக்குவாதம் செய்யாமல்  இருப்பது நல்லது.

கும்பம் 

சுபசெலவுகள் ஏற்படும். உடல்  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள்  வருகையால் மகிழ்ச்சி தரும்  நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 மீனம் 

பிள்ளைகளால் குடும்பத்தில்  பொருளாதார முன்னேற்றம்  ஏற்படும். புதிய பொருட்கள்  வாங்கி மகிழ்வீர்கள்.