மேஷம்

உற்றார் உறவினர்களால் மன அமைதி குறையும். உடல்  ஆரோக்கியத்தில் கவனம்  தேவை.

ரிஷபம் 

தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில்  தடைகள் ஏற்படலாம்.

மிதுனம் 

குடும்பத்தில் இருந்த கருத்து  வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை  கூடும். உற்றார்  உறவினர்கள் வருகையால்  மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள்  நடைபெறும்.

கடகம் 

பிள்ளைகளால் குடும்பத்தில்  அமைதியற்ற சூழ்நிலை  உருவாகலாம். ஆடம்பர  செலவுகளால் சேமிப்பு குறையும்.

சிம்மம் 

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம்  ஏற்படும்.  பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

கன்னி 

பிள்ளைகளால் குடும்பத்தில்  தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில்  உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும்.

துலாம் 

எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தினரின் அன்பும்  ஆதரவும் கிட்டும்.

விருச்சிகம் 

பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும்.  உறவினர்களால் உதவி  கிடைக்கும்.

தனுசு 

உடல் ஆரோக்கியத்தில் சிறு  பாதிப்புகள் ஏற்படலாம்.  தேவையற்ற  செலவுகளை  சமாளிக்க கடன்கள் வாங்க  நேரிடும்.

மகரம் 

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால்  அறிமுகம் இல்லாதவர்களிடம்  அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு.

கும்பம் 

உத்தியோகஸ்தர்களுக்கு  வேலையில் புதிய மாற்றங்கள்  உண்டாகும். குடும்பத்தில்  உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

 மீனம் 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி  நடந்து கொள்வார்கள்.