நட்சத்திர பொருத்தம் -அட்டவணை

நட்சத்திர பொருத்தம்

முதலில் நட்சத்திரம் பொருந்தினாலே மற்றவை பொருந்தி விடும். முதலில் பெண் நட்சத்திரம் எதுவென்று அறிந்தபின், அந்த நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரம் என அறியவேண்டும். அவ்விதம் பார்க்கையில் பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் இரட்டைப் படையாக வந்தால், அதாவது பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம், 2 ஆவது, 4 ஆவது, 6 ஆவது. 8 ஆவது நட்சத்திரமானால், (2, 4, 6, 8) பொருத்தம் உண்டு.

9 ஆம் எண் வந்தால் மற்றப் பொருத்தங்களைப் பார்த்தே சொல்ல வேண்டும். பெண் நட்சத்திரம் முதல் 2, 11, 20, 4, 13, 22, 6, 15, 24, 8, 17, 26 ஆகிய விரிவு எண்களும் பொருந்தும், 22 ஆம் எண் யோசித்துச் செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, அசுபதிக்குத் திருவோணம், பரணிக்கு அவிட்டம், கார்த்திகைக்குச் சதயம் என்று எண்ணிப்பார்த்தால் 22 ஆவது நட்சத்திரமாக வரும். இதைத் தவிர்ப்பது நல்லது.

பெண் நட்சத்திரத்திற்கு 1, 3, 5, 7 ஆகிய நட்சத்திரங்கள் சேராது. அதன் விரிவு 1, 10, 19, 3, 12, 21, 5, 14, 23, 7, 16, 25 நட்சத்திரங்கள் சேராது. ஆனால், 7 மற்றும் 25 ஆம் எண் மகேந்திரப் பொருத்தத்தைக் காட்டுவதால் சில இடங்களில் சேரும்.

சுருங்கச் சொன்னால் பெண் நட்சத்திரமும், ஆண் நட்சத்திரமும் இரட்டைப் படையானால் (2.4.6. 8) சேரும் ஒற்றைப் படையானால் (1.3. 5) சேராது. இந்த முதல் படியில் 9 ஆம் எண் (9, 18, 27) ஆகிய நட்சத்திரங்களைச் சிறப்புப் பார்வை கொண்டு பார்க்க வேண்டும். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 9 இல் வந்தால் சேரும் என்று அவசரப்பட்டுவிடக் கூடாது. கேட்டைக்கு உத்திரட்டாதி 9 ஆம் எண். ஆனால் பெரும்பாலான கேட்டை-உத்திரட்டாதி தம்பதிகள் சுகமாய் இருப்பதில்லை.

இன்றைய கால சூழலில் திருமணத்திற்கு நட்சத்திரம் பொருத்தம் பார்பதற்கு பல ஜோதிடர்களை மக்கள் நாடி செல்கின்றார்.அவர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு ஜாதக பொருத்த நட்சத்திர அட்டவணையை மிக எளிமையாக புரியும் வண்ணம் கீழே கொடுத்துள்ளேன்.

மேலும் தெளிவாக வேண்டும் என்போர் கீழே கொடுக்கபட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து அட்டவணையை Download செய்து கொள்ளலாம் .

நட்சத்திர பொருத்தம் -அட்டவணை