LATEST ARTICLES

தர்ப்பை புல்லின் சிறப்புகள்!!

தர்ப்பை புல்லின் சிறப்புகள்

தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள்.

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரகங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விடதர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள்.

தர்ப்பை புல்

கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடாமல் தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.

திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும்.

பிரம்மஹத்தி தோஷம் அகற்றும் குச்சனூர் சனீஸ்வரன் கோவில் !இந்தியாவிலேயே தனி தலம் !

குச்சனூர் சனீஸ்வரன்

சனி பகவான் கெடு பலன்களையே அதிகம் தரக்கூடியவர் என நம்பப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் கிடையாது என ஆன்மிக அன்பர்கள் கூறுவார்கள். அந்தவகையில் சனிபகவானை வழிபட அனைத்து கெடுபலன்களும் நீங்கும்.

தமிழகத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதானம் கொண்டு தனிக் கோயிலாக இருக்கும் ஒரே கோயில் குச்சனூர் சனீஸ்வரன் கோயில் ஆகும். குச்சனூர் சனி பகவான் நன்மைகளையும், நல்ல பல யோகங்களையும் தன்னை வந்து வழிபடும் பக்தர்களுக்கு வழங்குகிறார்.

குச்சனூர் சனீஸ்வரன்

ஏழரை சனி முதல் எந்த சனி திசை நடந்தாலும் அவர்களின் முன்வினை கர்மாக்களை அழித்து கஷ்டங்களை போக்கி, நன்மைகள் பலவற்றை இந்த சனீஸ்வரர் அருள்வதாக சொல்லப்படுகிறது.

நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக போற்றப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகமும் சனீஸ்வரன் தான். சனி பகவானுக்கு எத்தனையோ பரிகார தலங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்திலும் உப தெய்வமாக, தனி சன்னதியிலோ அல்லது நவகிரகங்களில் ஒருவராகவோதான் காட்சி அளிப்பார்.

ஆனால் சனி பகவான் மூலவராகவும், அதுவும் சுயம்புவாக அருள் செய்யும் ஒரே கோவில் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில்தான்.

குச்சனூர் சனீஸ்வரன்

திருநள்ளாறு தலத்திற்கு பிறகு அதிகமான பக்தர்கள் சனி தோஷ நிவர்த்திக்காக சென்று வழிபடக் கூடிய தலம் குச்சனூர்.சனி பகவானுக்கு என்று இந்தியாவிலேயே தனியாக கோவில் இருக்கும் ஒரே தலம் குச்சனூர் மட்டும் தான்.

திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர்தான் மூலவராக கருதப்படுகிறார். ஆனால் இங்கு சனீஸ்வரனே மூலவராக தனி சன்னதியில் காட்சி தருகிறார். இங்குள்ள சனீஸ்வரன் சுயம்புவாக லிங்க வடிவில் காட்சி தருகிறார். இவர் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்கள் ஒருங்கிணைந்த வடிவமாக கருதப்படுவதால் இவர் & கண்கள், நான்குகைகள், இரண்டு பாதங்களுடன் காட்சி தருகிறார். கையில் சக்தி ஆயுதம், வில், அபய ஹஸ்தம் ஆகியவற்றை காட்டி அருள் செய்கிறார்.

சனிதோஷத்தால் பலவிதமான துன்பங்களை சந்தித்த தன்னுடைய வளர்ப்பு தந்தை தினகரன் என்னும் மன்னனுக்காக சந்திரவதனன் என்னும் மன்னன் சுரபி நதிக்கரை இரும்பால் சனி உருவத்தை செய்து சனியின் அருளை பெறுவதற்காக வேண்டி வந்தார். பகவான் அவனின் துன்பங்களை போக்கினார். சுயம்புவாக சனீஸ்வர பகவான் தோன்றிய இடத்தில் ஒரு குடில் அமைத்து, சனி தோஷத்தால் துன்பப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இங்கு சிறிய கோயிலை அமைத்தார்.

ஆரம்பத்தில் செண்பக நல்லூர் என அழைக்கப்பட்ட இந்த தலமே இன்று குச்சனூர் என அழைக்கப்படுகிறது. சனி பகவானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் அனைத்து கிரகங்களின் தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.

குச்சனூர் சனீஸ்வரன்

மற்ற சனி பகவான் தலங்களில் வணங்கினால் சனியின் தாக்கம் மட்டும் தான் குறையும். ஆனால் இந்த தலத்தில் வந்து வழிபட்டால் சனி நன்மைகளை அதிகம் வழங்குவார். ஆடி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் இங்கு விழா எடுத்து
கொண்டாடப்படுகிறது.

இது தவிர சனிப்பெயர்ச்சி விழாவும் இக்கோவிலில் சிறப்பாக நடத்தப்படுகிறது. புராணங்களில் சுரபி என போற்றப்படும் சுருளி ஆற்றின் கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. சனிக்கிழமைகளில் அதிகமான பக்தர்கள் வந்து எள் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டாலும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி
தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இத்தலத்தில் உள்ள சனீஸ்வரர் அரூபியாக லிங்க வடிவத்தில் வளர்ந்து கொண்டே இருப்பதால் அதை கட்டுப்படுத்த மஞ்சள் காப்பிட்டு வழிபடுகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சுரபி நதியில் நீராடி எள் தீபம் ஏற்றி காக வாகனத்தைத் தலையைச் சுற்றி காக மண்டபத்தில் வைத்து அர்ச்சனை செய்து
பகவானை வழிபடுகின்றனர்.

குச்சனூர் சனீஸ்வரன்

சனிதோஷம் உடையவர்கள் இந்த கோயிலுக்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

செல்வம் கடாட்சம் அருளும் திருஞானசம்பந்தர் துதிப்பாடல்!!

திருஞானசம்பந்தர்

‘செல்வம்’ என்ற சொல் ஏழு முறை வரும்படி திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இது. அனுதினமும் இப்பாடலைப் பாடி, சிவனாரை வழிபட்டு வந்தால் பொன் – பொருள் மட்டுமின்றி சகல செல்வங்களும் ஸித்திக்கும். நீங்களும் படித்துப் பயன்பெறுங்களேன்.

திருஞானசம்பந்தர்

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்

செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!

சந்திரன்-குரு-சனி இணைவு எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன் ?

சந்திரன்-குரு-சனி

சந்திரன், குரு, சனி லக்னத்தில் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் சாதுரியமான மனிதராக இருப்பார். பெரிய பதவியில் இருப்பார். குடும்பத்தில் சந்தோஷமிருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திரன், குரு, சனி 2-ம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சிறந்த பேச்சாற்றல் உள்ளவராக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சகோதரர்களுடன் உள்ள உறவில் சில பிரச்சனைகள் இருக்கும். பணவசதி இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும். ஜாதகர் பயணங்கள் மேற்கொண்டு பணம் சம்பாதிப்பார்.

சந்திரன், குரு, சனி 3-ம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார. இளம் வயதில் படிப்பிற்காக வெளியூர் செல்ல வேண்டியதாயிருக்கும். சீதளம் பிடிக்கும். சகோதரர்களில் ஒருவரால் எப்போதும் பிரச்சனை இருக்கும்.

சந்திரன்

சந்திரன், குரு, சனி 4-ம் பாவத்தில் இருந்தால், பண வசதி இருக்கும். நல்ல வீடு இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலரின் அன்னைகள் குடும்பத்தை நிர்வாகம் செய்வார். தந்தை பயனற்றவராக  இருப்பார். சிலர் பண முதலீடு சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள்.

சந்திரன், குரு, சனி 5-ம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.

சந்திரன், குரு, சனி 6-ம் பாவத்தில் இருந்தால் சிலருக்கு காலில் பிரச்சனை இருக்கும். பண வசதி இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும்.

சந்திரன், குரு, சனி 7-ம் பாவத்தில் இருந்தால் அழகான மனைவி அமைவாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகருக்கு சகோதரர்களுடன் உள்ள உறவு நன்றாக இருக்கும். சிலர் தொழிலதிபராக இருப்பார்கள்.

சந்திரன், குரு, சனி 8-ம் பாவத்தில் இருந்தால் சிலருக்கு மனநோய் இருக்கும். சிலர் பயணங்கள் செய்து பணத்தை சம்பாதிப்பார்கள். சிலருக்கு இளம் வயதில் உடல் நல பாதிப்பு இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், குரு, சனி 9-ம் பாவத்தில் இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். சொத்துக்கள் இருக்கும். ஜாதகர் புனித பயணம் மேற்கொள்வார். தர்ம காரியங்களைச் செய்வார். மனைவி நல்லவளாக இருப்பாள். இல்வாழ்க்கை  சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், குரு, சனி 10-ம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசியலில் நல்ல பதவியில் இருப்பார்கள். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். சிலர் குருநாதராகவோ-ஞானியாகவோ இருப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். சிலர் இளம் வயதில் பல கஷ்டங்களை கடந்திருப்பார்கள்.

சந்திரன், குரு, சனி 11-ம் பாவத்தில் இருந்தால் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். வீடு, மனை, வாகனம் இருக்கும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகர் நல்ல படிப்பாளியாக இருப்பார். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். தைரிய குணம் இருக்கும்.

சந்திரன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால் சுபச் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் அதிகமாக பேசுவார். இளமையில் சிரமங்கள் இருக்கும். ஜாதகர் நன்கு சாப்பிடுவார். தலைமுடி உதிரும். சிலர் அதிகமாக சிந்திப்பார்கள். தூக்கம் சரியாக வராது. 

வாஸ்து தோஷம் போக்கும் கால பைரவர்

கால பைரவர்

மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சேத்திரபாலபுரம். இங்கே தனிக்கோயில் கொண்டிருக்கும் கால பைரவர் ‘வாஸ்து தோஷங்கள்’ நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் அருளும் தெய்வமாக திகழ்கிறார்.

சிவபெருமானின் அம்சமாய் தோன்றிய பைரவர். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்ந்து அவரின் ஆணவத்தை அடக்கினார் என்கின்றன புராணங்கள். இதனால் பைரவருக்கு தோஷம் உண்டானதை தொடர்ந்து திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரின் வழிகாட்டுதலின்படி காலபைரவர் தோஷம் நீங்க பெற்ற இடம் தான் இந்த ஷேத்திரபாலபுரம்.

கால பைரவர்

இங்கே சூலை நோய், கை, கால் பிடிப்பு, மூட்டு வலி உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்கி அருளும் சஞ்சீவியாக திகழ்கிறாராம் கால பைரவர். இங்கு வந்து இந்த பைரவருக்கு தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ‘வாஸ்து தோஷம்’ உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி விடுவதாக ஐதீகம். அதேபோல் 11 மிளகுகளை சிவப்பு துணியில் சுற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த பொருளை திரும்ப பெறுவதுடன் வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 54 முந்திரி கொட்டைகளை மாலையாக தொடுத்து காலபைரவருக்கு அணிவித்து தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கின்றார்கள் பக்தர்கள்.

கால பைரவர்

இதுபோன்ற பிரார்த்தனைகளை அஷ்டமி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் செய்வது விசேஷம். அதாவது 11 அஷ்டமி தினங்கள் உள்ளது 11 ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட வேண்டும். ஒவ்வொரு முறையில் அப்படி வழிபட்டு கால பைரவரை 11 முறை வலம் வந்து வழங்கினால் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!

விநாயகர்

ஆன்மீக அன்பர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நின்று, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத வழிபாடாக திகழ்வது விநாயகர் பெருமான் வழிபாடு.

எந்த செயலை தொடங்கினாலும் அந்த செயல் தடையின்றி துரிதமாக நடைபெற, பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது இன்றைக்கும் நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. கோயில்களிலும் நம் இல்லங்களிலும் எந்த பூஜை அல்லது ஹோமம் என்றாலும் முதலில் வழிபடு கனங்களின் தலைவனான கணபதிக்கு தான்.

‘நாயகன்’ என்றால் தலைவன். ‘விநாயகன்’ என்றால் இவருக்கு மிஞ்சிய தலைவன் எவருமில்லை என்பது பொருள். ‘அம்மையப்பனே உலகம்; உலகம்தான் அம்மையப்பன்’ என்று தன் சமயோசிதத்தால் ஞானக்கனியை பெற்ற இந்த கற்பகக் கனியை வணங்கினால் நமது அறிவுத்திறன் மேலோங்கும். வித்தைகள் சிறக்கும்,புத்திர சம்பத்தும், சக்தியும் பெருகும். செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். ஆனை முகத்தோனின் தும்பிக்கை நமக்கு நம்பிக்கை அளிக்கும்.

அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கீழ் காணும் கணபதி துதியை சொல்லி விநாயகரை மனதார நினைத்து வணங்கினால் எல்லா நன்மைகளும் நம்மை நாடி வந்து சேரும்.

விநாயகர்

ஞாயிறு –சூரிய ரூப வக்ரதுண்ட கணபதயே நம :

திங்கள் – சந்த்ர ஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம :

செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதியே நம :

புதன் – புத ஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதியே நம :

வியாழன் – குரு ஸ்வரூப ஸந்தன கணபதியே நம :

வெள்ளி – சுக்ர ஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதியே நம :

சனி – சனீ ஸ்வரூப அபயப்ரத கணபதியே நம :

ராகு ,கேது வழிபாட்டு காலங்களில் கீழ்காணும் துதியை சொல்லி வழிபடலாம்.

ராகு –ராகு ஸ்வரூப துர்கா கணபதியே நம :

கேது – கேது ஸ்வரூப ஞான கணபதியே நம :

அதேபோல் எல்லா நாட்களிலும் கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபடுவது விசேஷம்.

‘நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ

ஸ்வரூபகம் கணபதியே நம :’

மதுரையின் ஆன்மிக பெருமைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

மதுரை

 • 108 திவ்ய தேசத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டுமே நவகிரகங்கள் உள்ளது.
 • பஞ்சபூத தலங்கள் மதுரை மாநகரிலேயே உள்ளது.
 • சிவபெருமானுக்கு மற்றும் அம்பாளுக்கு பட்டாபிஷேகம் இங்கு மட்டுமே செய்யப்படுகிறது.
 • அறுபடை வீட்டில் மதுரை திருப்பரங்குன்றமும் முருகனுக்கு மட்டுமே பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.
 • வேற்று வர்ணத்தவர்களும் அறநிலைத்துறை கோவில்களில் அர்ச்சகர் ஆனது முதன் முதலில் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவிலில் தான்.
 • சிவபெருமானுக்கு மனித உருவம் மதுரையில் இரண்டு இடத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் இம்மையில் நன்மை தருவார்.
 • ஆதீன மடம் முதன் முதலில் உருவானது மதுரையில் தான்.
 • சொக்கநாதர், கள்ளழகர் கிட்ட மட்டும் தான் இடுப்பில் கத்தி இருக்கும். வேறு எந்த சிவபெருமானிடமும், பெருமாளிடமும் இருக்காது.
 • நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தது மதுரை திருவாதவூர்.
 • 278 தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் மூன்று மதுரையில் உள்ளது.
 • மகாத்மா காந்தி மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார்.
மதுரை
 • மகாகவி சுப்ரமணிய பாரதியார் மதுரை சேதுபதி பள்ளியில் பணிபுரிந்தார்.
 • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படித்தது மதுரை திருநகர் முக்குலத்தோர் பள்ளி மதுரை பெரியார் யூனியன் கிறிஸ்டியன் பள்ளி.
 • ரமண மகரிஷி படித்தது மதுரை ஸ்காட் பள்ளி.
 • மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு.
 • பல்லவ நாடு போதிதர்மர் போல் பாண்டியநாடு போதி சேனா பற்றி யாருக்கும் தெரியாது. இவர் மதுரையில் பிறந்தவர். போதிதர்மர் போல புத்த மதத்தை சீனா மற்றும் ஜப்பானில் பரப்பினார்.
 • சாம்ராஜ் மாறினாலும் தலைநகராக மதுரையே இருந்துள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த ஊரும் இப்படி இருந்ததில்லை.
 • மதுரையில் இரண்டு முறை திரு தாண்டவம் ஆடியுள்ளார் நடராசர்.வலது கால் மாற்றி ஆடியதும் இங்கு மட்டுமே.
 • மதுரை பிறக்க, வாழ, இறக்க, தரிசிக்க, நினைக்க, கேட்க, சொல்ல முக்தி தரும் திருத்தலம்.
 • இந்து மதத்தின் 6ல் நான்கு உட்பிரிவுகளுக்கு (சைவம், வைணவம், சாக்தம் கௌமாரம்) முக்கியத்துவம் தந்த ஊர் மதுரை.
 • சுதந்திரம் பெற்றபின் மாநகராட்சியானது மதுரை தான்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

மிருகசீரிடம்

இது மூன்று நட்சத்திரங்களால் ஆனது. ஒரு சமயம் மான்தலைபோலும் சில சமயம், தேங்காய் கண் போலவும் தோற்றம்அளிக்கும். அவைகள் ரிஷபத்தின் தலைப்போலவும் தெரியும். சந்திரன் மிருக சீரிடத்தின் வடக்கே ஊர்ந்து செல்லும்.

கார்த்திகை
அனைத்து நட்சத்திரத்தையும் வசிய படுத்தும் யந்திரம்

1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – முன் கோபியாகவும் ,சுறுசுறுப்பாகவும் இருப்பர்.

2) இந்த நட்சத்திரம்- உடல் அற்றது

3) இந்த நட்சத்திரம்- சம நோக்கு நாள் ஆகும்.

4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யலாம்.

5) இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள் – வே ,வோ ,கா ,கி

6) இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள் – வை,வொ

7)இந்த நட்சத்திர கணம் – தேவ கணம்.

8)இந்த நட்சத்திர மிருகம் – வெண்சாரை

9) இந்த நட்சத்திர தாவரம் – கருங்காலி

10) இந்த நட்சத்திர பட்சி – கோழி

யந்திரம்

image மிருகசீரிடம் நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்

எப்படி பூஜை செய்ய வேண்டும் ?

 • தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
 • கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
 • முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
 • பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
 • பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.

வசிய மந்திரம்

1)மிருக சீரிடமே வந்தருள்கவே !

  2) வந்தென் மனக்கதவை தருள்கவே !

  3) உடன் அருட்சீரை தந்தருள்கவே !

  4) நானினி யாரிடமும் போக மாட்டேன் !

  5) எனக்கு ஜோதியை உடனே தந்தருள்கவே !

  6) சிவமே நீதான் அருள்கவே !

  7) சிவ சிவா வந்தருள்கவே”!

  8) நல் வாழ்வையே எமச்கருள்கவே !

  மகா மேருவின் மகிமை தெரியுமா?

  மகா மேரு

  சக்திதேவிக்கு எந்திர வடிவம் தேவை என்று ‘மகாமேரு’ எந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்ப டுத்தினர்.‘ஸ்ரீவித்யை னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள் சொல்கின்றன.

  குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.ஸ்ரீசக்கரத்தின் மகிமைகள் குறித்து பல்வேறு வகையான தகவல்கள் நம்மை வியக்க வைக்கிறது.

  மகா மேரு

  மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கவுடபாதர் தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.

  மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும் விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம் மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் ‘அம்பிகையின் அழகு அலை’ என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார்.

  ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல் யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர். சவுக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம்.

  அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இரு பத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதி னாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மகா மேரு

  மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சி புரிந்து வருகி றார். லலிதா சகஸ்ரநாமத் தின் 996-வது நாமாவளி யான, ‘ஸ்ரீசக்ர ராஜநிலயாயை’ என்ற நாமாவளி யினால் அறியலாம்..

  அந்நிய தேசத்தவர் வியந்த ஸ்ரீசக்கரம்:-

  சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர் ஸ்ரீசக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார். மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்துச் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார்.இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப் பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று பத்திரிகையில் செய்தி வெளியிட அனைவரும் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர்.

  முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளகோயில்களில் மக்கள் ஈர்ப்புத்தன்மை ஏற்பட்டு புகழ் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சவுந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.

  ஸ்ரீசக்கர வழிபாட்டு முறை:

  ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிர தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம். ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்கவேண்டும்.
  ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறை யின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும்.

  மகா மேரு

  பசு, சிம்மம், சங்கு,சக்கரம்,தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.

  வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட் சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்தி ரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.

  வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.

  ரோகிணி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

  ரோகிணி

  இது பதினோரு நட்சத்திர தொகுப்பைச் கொண்டது. இது
  மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் போல தோன்றும். திடீர் என
  பார்த்தால் நாக்கைப்போலவும் தோன்றும், சிலர் இதை நட்சத்திர ஊற்று
  என்றும் கூறுவர். இதில் ஒன்றுதான் அதிப்பிரகாசமாக இருககும்.
  இவைகளுக்கு வடக்கே சந்திரன் ஊர்ந்து கிழக்கே செல்லும்.

  கார்த்திகை
  அனைத்து நட்சத்திரத்தையும் வசிய படுத்தும் யந்திரம்

  1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – பரோபகாரி
  இரக்கம், அன்புடன் வாழ்வார்.

  2) இந்த நட்சத்திரம்-பூரண உடல் பெற்றது.

  3) இந்த நட்சத்திரம்-மேல்நோக்கு நாள் ஆகும்.

  4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யலாம்.

  5) இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள் – ஓ, வி, வ,வு,

  6) இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள் – வா, வீ.

  7)இந்த நட்சத்திர கணம் – மனித கணம்.

  8)இந்த நட்சத்திர மிருகம் – ஆண் நாகம்

  9) இந்த நட்சத்திர தாவரம் – நாவல்

  10) இந்த நட்சத்திர பட்சி – ஆந்தை

  யந்திரம்

  ரோகிணி

  இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்

  எப்படி பூஜை செய்ய வேண்டும் ?

  • தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
  • கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
  • முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
  • பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
  • பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.

  வசிய மந்திரம்

  1) உருரோகிணியே வந்தருள்கவே !

  2) அற்புத தேர் ஏறி வந்தருள்கவே !

  3) எனக்குற்ற துன்பங்களை சீச்கிரம் நீக்கி

  4) தவமணியே வந்தருள்கவே !

  5) அற்புத சிவமணியே வந்தருள்கவே!

  6) சிவமே வந்தருள்கவே !

  7) நீ கருணையை தந்தருள்கவே !

  8) சுகம் வேண்டும் வந்தெமச்கருள்கவே !