Saturday, July 27, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -18-கிரக பார்வைகள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -18-கிரக பார்வைகள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கிரக பார்வைகள்

ஒவ்வொரு கிரகத்திருக்கும் பல பார்வைகள் உண்டு. 9 கிரகங்கள் பார்வையிலே நன்மை தீமைகளை செய்யக் கூடியவை ஆகும். எல்லாக் கிரகங்களுக்கும்  7ம் பார்வை என்பதும் உண்டு , சிறப்புப் பார்வைகளும் உண்டு.

குருவுக்கு 7ம் பார்வை தவிர 5ம் பார்வை மற்றும் 9ம் பார்வைகள் உண்டு.

செவ்வாய்க்கு 4ம் பார்வை தவிர 7ம் மற்றும் 8ம் பார்வைகள் உண்டு.

சனிக்கு 3ம் பார்வை மற்றும் தவிர 7ம் மற்றும் 10ம் பார்வை உண்டு.

3 கிரகங்களான குரு, செவ்வாய், சனி கிரகங்களுக்கு மட்டும் தான் சிறப்பு பார்வை உண்டு.

2 நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கும் பார்வைகள் கிடையாது.

4 கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகள் கிடையாது.

9 கிரகங்கள் பார்வையிலே பலம் வாழவும் வைக்கும், வீழவும் வைக்கும்.

ஒருவருடைய சாதக கட்டத்தில் பணிரெண்டு ராசிகளில் தந்தைக்காரகன் எனப்படும் சூரியனும் ,சூரிய பகவானின் மைந்தனான சனி பகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் சாதக அமைப்பை பெற்றவர்களின் தந்தை, மகன் உறவுநிலை சரியாக அமையாது.அவர்களுக்கிடைய சிறிய வெறுப்புணர்வு இருக்கும்.சில நேரங்களில் சுபரின் பார்வை மற்றும் ஓன்பதாமிட அதிபதியின் வலு ஆகியவற்றைப்பொறுத்து மேற்கண்ட பலன் மாறுபடலாம்.

இதேபோல சனி பகவானை குரு பகவான் பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் சனியின் ஆதிக்க பண்பு குறைந்து  குருவின் ஆதிக்கப்பண்பை  பெற்றுவிடுவார்கள்.நல்ல குணங்களே மேலோங்கி இருக்கும்.

மாறாக சனி பகவான் குரு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் குரு ஆதிக்கப்பண்பு குறைந்து சனி பகவானின் ஆதிக்கப்பண்பே மேலோங்கி நிற்கும்.

இதேபோல குருவும் ,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமலே இருத்தல் நலம்.

அடுத்து “சனி பகவானும் ,செவ்வாய் பகவானும் சேர்ந்து ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது அந்த ஸ்தானத்திற்குரிய ஆதிபத்திய பலனை மாற்றி பாதிக்கவைத்துவிடும்.

future 956144 640 அடிப்படை ஜோதிடம் -பகுதி -18-கிரக பார்வைகள்

உதாரணமாக “சனியும் செவ்வாயும் சேர்ந்து நான்காமிடத்தை பார்க்கும்போது அவனை காம எண்ணம் மிகுந்தவனாக மாற்றிவிடும்.

இதேபோல இரண்டாமிடத்தில் பார்த்தால் அவனது பேச்சில் சுத்தம் இருக்காது.ஏழாமிட பார்வை மனைவி அமைவது கால தாமதமாக்கிவிடுவதோடு மனைவியின் குணநலத்தையே(காம எண்ணம் மிகுந்தவளாக) மாற்றிவிடும்.இப்படியாக பார்க்கப்படும் ஸ்தான மற்றும் பார்க்கப்படும் கிரக குணநலன்களையே மாற்றிவிடும்.

இதேபோல சனியும் செவ்வாயும் சமசப்தமாகவும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.இவ்வாறு பார்த்துக்கொள்ளும்போது வாகன விபத்துக்களை தந்து இரத்தம் கசிந்து எலும்பு முறிவு போன்றவற்றை செவ்வாய் திசை சனி புத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ நிகழ வாய்ப்புண்டு.எச்சரிக்கையாக இருத்தல் நலம்.

அடுத்து சனி பகவானும் ,புதன் பகவானும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் புதன் பகவான் தரக்கூடிய கணிதம்,எழுத்து ,கவிதை ,ஜோதிடம் போன்ற நுணுக்க விஷயங்களை தரவிடாமல் செய்துவிடுகிறது.

அதிலும் புதன் மற்றும் சனி பகவான் இருவரும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது சாதகரை அலித்தன்மை உடையவராக ஆக்கிவிடுகிறது.

குரு பகவானும்,சந்திர பகவானும் பார்த்துக்கொள்ளும்போது “குரு-சந்திர யோகத்தை தருகிறது.இந்த யோகம் தர இரு கிரகங்கள் சேர்ந்து இருக்கும் வீட்டின் அதிபதி மறைவு,நீசம் ,அஸ்தனம் போன்ற பலவீனமான அமைப்பை பெறக்கூடாது.

மேலும் ராசியை பொறுத்து இரண்டில் ஒன்று பாதாகாதிபதியாகவோ ,மாரகாதிபதியாக இருக்ககூடாது.

அடுத்தபடியாக ” காம கிரகம் மற்றும் ஆண்,பெண் இருபாலருக்கும் களஸ்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருவரும் பார்த்துக்கொள்ளும்போது காம எண்ணம் மிகுதியாக்கிவிடுகிறது.

மனதுக்காரகன் எனப்படும் சந்திர பகவானை  ,சுக்கிர பகவான் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது காமம் சம்பந்தப்பட்ட கற்பனை மிகுதியாக இருக்கும்.ஒரு சிலர் காம கதை ,கவிதை ,சினிமா மற்றும் பாடல்கள் அமைப்பதற்கும் இவையே காரணம்.சுக்கிரன் உச்சம் ஆட்சி போன்ற பலம் பெற்றிருக்க வேண்டும்.

ஒருவரது சாதகத்தில் சூரியனும்,சந்திரனும் சமசப்தமாக 180  பாகையில் சந்தித்துக்கொள்ளும்போது  “பெளர்ணமி யோகத்தை “வழங்குகிறது.இவர்கள் பொளர்ணமி நாளில் பிறந்திருப்பார்கள்.சில நேரங்களில் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காம எண்ணம் குறைவாகவே பெற்றிருப்பார்கள்.

குரு பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கே அதிக பலன்களை தருவார்.பொதுவாக இருக்கும் இடத்திற்கு அதிக அளவு நன்மைகளை செய்யமாட்டார்.அதிலும் குறிப்பாக குரு தனித்து நின்றால் அந்த இடத்தை பாதிப்பார் என்பதால்தான் “அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசம் என்பார்கள்”.

சனி பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கப்படும் இடத்தை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்.

ராகு பகவான் ,கேது பகவான்  மற்றும் செவ்வாய் பகவான்,சனி பகவான், தேய்பிறைச்சந்திரன் மற்றும் பாவியோடு சேராத புதன்  பகவான் போன்ற இயற்கை பாவிகளால் பார்க்கப்படும் அந்த ஸ்தானமும்  அதில் உள்ள கிரகங்களின் தன்மையை எதிர்மறையாக மாற்றி  கெடுதல் செய்ய வைத்துவிடுகிறார்கள்.

அதே நேரத்தில் இயற்கை சுபரான குரு பகவான்,சுக்கிர பகவான்,வளர்பிறைச்சந்திரன்,பாவியோடு சேராத புதன் பகவான் ஆகிய கிரகங்கள் பார்க்கப்படும் ஸ்தானமும் ,கிரகங்களும் பாவ கிரகங்களாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பாதிப்பை இல்லாமலோ அல்லது குறைத்தோ அதன் பலனை மாற்றி நேர்மறையாக மாற்றிவிடுகிறார்கள்.

எனவேதான் மேலோட்டமாக ஒரு சோதிட பதிவை படித்துவிட்டு ஆகா எனது சாதகத்திலும் இதுபோன்ற அமைப்பு இருக்கிறதே என வருத்தப்படுவதோ அல்லது அவ்வாறு நடக்காமல் போகும்போது நீங்கள் கூறியது போல எனக்கு அந்த அமைப்பிருந்தும் கெடுதலான பலனை தரவில்லை ? என கேள்வி கேட்டு எதிர்வாதம் செய்வது தவறு.

அது என்னவெனில் சேர்ந்திருக்கும் இரு கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் நீசம் போன்ற பலவீனம் அடைந்திருருக்கலாம் அல்லது இரு கிரகங்களும் சுப நட்சத்திர காலில் நின்றிருக்கலாம் அல்லது குரு பகவான் போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருக்கலாம் அல்லது நான்காமாதிபதி ஆட்சி உச்சம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருக்கலாம்.இதுபோன்ற அமைப்புகளில் ஏதேனும் ஒரு அமைப்பை பெற்றிருந்தாலும்  அந்த பெண் நாலில் சனி செவ்வாய் சேர்ந்திருந்தாலும் நல்ல குணநலவாதியாக இருப்பாள்.

பார்வைகள் தொடரும் ….

நன்றியுடன்! 

சிவா.சி  

✆9362555266

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular