- Advertisement -
பரிவர்த்தனை யோகங்கள்
சூரியன் -செவ்வாய்
- சூரியன் இல்லத்தில் செவ்வாயும், செவ்வாய் இல்லத்தில் சூரியனும் இல்லம் மாறி பரிவர்த்தனை எனும் நிலை பெற்றிந்தால் அரசு வகையில் ராணுவம் ,காவல் துறை ,மருத்துவ துறை நூதனமான கருவிகளை இயக்கம் துறையில் புகழ் பெறுவார்.
- அவ்வகை தொழில் தொடர்புகளில் ஜீவனம் அமையும்.
- இவர்களுக்கு கல்,மண்,பூமி ,கிரய விக்கிரய விவசாய தொடர்பு,தந்தை வகை ரத்த பந்த உறவு உடலில் நல்ல திடகாத்திரமான தைரிய வீரிய பராக்கிரமமான பலம் ஏற்படும்.
- இவர்களுக்கு நுண் அறிவு உண்டு.
- ஆன்ம பலம் மிக்க பெற்ற இவர்கள் எதையும் துணிந்து செயல் படுத்துவர்.
- இப்பரிவர்த்தனமானதுமேஷம் ,மிதுனம் ,கடகம் ,சிம்மம் ,விருச்சிகம் ,தனுசு,மீனம் போன்ற லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல பலனை தரும்.
- இதில்மிதுனம் ,விருச்சிகம் ,மீனம் ,தனுசு,இந்த லக்கினத்திற்கு இப்பரிவர்த்தனையானது கடுமையான உழைப்பு ,பல வகையான எதிர்ப்பு போட்டிகளிடையே நற்பலனை தரும்.
- இப்பரிவர்த்தனை 1,4,2,10,1,20,5,9 போன்ற இடமாக அமைந்து நட்சத்திர சாதக நிலையில் இருந்து விட்டாலும் லக்கினமோ மற்ற கிரகங்களோ ஐராவதாம்சம் பெற்றாலோ மிகுந்த செல்வாக்கை தருகிறது …
தொடரும்…
- Advertisement -