Friday, July 19, 2024
Homeசக்தி தரும் மந்திரங்கள்மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்:

நேரம் : தினந்தோறும் நாம் குறிப்பிட்ட நேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் ஜபம் செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும் ஏற்படுகின்றன ; நமது மனதுக்கும் . உடலுக்குமிடையே ஒரு சரியான நல்ல இணைப்பு ஏற்படுகிறது.

அது எது போன்றதென்றால் , நாம் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திலேயே உணவு உட்கொள்ளுகிறோமென்றால் , அந்த நேரம் வந்தவுடன் நமக்குப் பசியும் தானாகவே தோன்றுகிறதல்லவா ? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தூங்கச் செல்கிறோமென்றால் , அந்த நேரம் வந்தவுடன் நமக்குத் தூக்கமும் வந்துவிடுகிறதல்லவா ? அது போன்றுதான் நாம் குறிப்பிட்ட நேரங்களில் ஜபம் செய்வதென்பதுமாகும். அந்த நேரம் வந்தவுடன் நமது மனமும் ஜபம் செய்ய நம்மைத் தூண்டும்.

இவ்விதம் குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் ஜபம் பழகுவதால் நமது மனதின் ஆற்றல்கள் வளர்ந்து வலுப்பெற்று – நாம் நல்ல ஆன்மிக முன்னேற்றமும் காண முடிகிறது.

விடியற்காலை , நண்பகல் , மாலை சந்தியாகாலம்,நடு இரவு ஆகியவை ஜபம் செய்வதற்குரிய மிகவும் விசேஷமான காலங்கள்.

அந்த நேரங்களில் இயற்கையானது சலனமின்றி , அமைதியாக இருப்பதால் , நாம் ஜபம் செய்வதற்குச் சாதகமாக நமது மனதிலும் அமைதியும் , சாந்தமும் நிலவுகிறது.

இவற்றைத் தவிர பௌர்ணமி , அமாவாசை , அஷ்டமி , ஏகாதசி திதிகளோடு கூடிய நாட்கள் , மற்ற விசேஷ பூஜை தினங்கள் ஆகியவை ஜபம் செய்வதற்கு மிகவும் சிறந்தவையாகும்.

மந்திரத்தை உச்சரிப்பதில் மூன்று நிலைகள் இருக்கின்றன.

முதல் நிலையில் மந்திரம் நமது தொண்டை, நாக்கு, உதடுகள் ஆகியவற்றால் சற்று உரக்கவே சொல்லப்படுகிறது.

இரண்டாவது நிலையில் நமது தொண்டையும் , நாவும் , உதடுகளும் சிறிதளவு லேசாக அசைய மனதினால் பிரதானமாக ஜபம் செய்கிறோம்.

மூன்றாவது நிலையில் தான் ஆன்மாவும் ( நினைவு முழுவதும் ) இணைந்து அதுவே ஜபத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ; இதிலும் மனமும் உடலும் ஆன்மாவுடன் இணைந்து செயல்படுகின்றன.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதற்கென்று தனியான ஒலி , சீர் இருப்பதால் – ஓதும் மந்திரத்தை ஒருவன் சரியான முறையில் உச்சரித்தால் அது அவன் உள்ளத்தில் சில தெய்வீக அதிர்வுகளைத் தோற்றுவித்து , அந்த மந்திரத்தின் தெய்வத்தையும் அவன் அறிய உதவுகிறது.சரியான முறையில் உச்சரிக்கவில்லை யென்றாலோ தேவையான பலனும் கிடைக்காது.

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

ஒரு மந்திரத்தின் சக்தி அதன் ஒலியிலேயே இருப்பதால்தான் . மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது .

ஒரு மந்திரம் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் . தவறான உச்சரிப்பு ஆன்மிக முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும். ஒரு பெண்மணி மந்திரதீட்சை வாங்கியிருந்தாள் அவள் உபதேசமாகப் பெற்ற மந்திரத்தின் ஒரு பகுதி ‘ ருக்மிணி -நாதாய ‘ என்பதாகும் . ஆனால் அவளோ ‘ ருக்மிணி ‘ என்று சொல்லாமல் ‘ ருக்கு . ருக்கு என்றே சொல்லி வந்தாள் . அதனால் அவளுடைய ஆன்மீக முன்னேற்றம் தடைப்பட்டது . ஆனால் கடவுள் கிருபையால் பிறகு அவளுக்குச் சரியான மந்திரமும் கிடைத்தது என்று அன்னை ஸ்ரீசாரதாதேவியார் கூறியுள்ளார்.

எண்ணிக்கை : பொதுவாக ஒரு குரு தனது சீடனை தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மந்திரத்தை ஜபம் செய்யும்படி உபதேசிக்கிறார்.

ஜபத்தை எண்ணிக் கணக்கிடுவதை விரல்களின் மூலமாகச் செய்யலாம் ; அல்லது ஒரு ஜப மாலையைக் கொண்டு செய்யலாம் . அல்லது மனதிற்குள்ளேயே செய்யலாம்.

ஜபமாலை சாதகனின் மனதை ஒருமுகப் படுத்துவதற்கு உதவி செய்கிறது .

ருத்திராட்சம்,சந்தனம்,இலந்தை , தாமரைக்கிழங்கு , ஸ்படிகம் , பவழம் போன்றவற்றால் ஆன பலவித ஜப மாலைகள் இருக்கின்றன.

ஜபிக்கும் மந்திரத்தை பொருத்தே . உபயோகிக்கும் ஜபமாலை 108 அல்லது 54 மணிகளைக் கொண்டதாகும்.

ஒருவர் உபயோகிக்கும் ஜபமாலையை அவரைத் தவிர வேறு எவரும் உபயோகிக்கக் கூடாது.மேலும் சாதகன் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தையே ஒரு மாலையின் மூலம் ஜபிக்கவேண்டும் .

ஒரே மாலையின் மூலம் வெவ்வேறு மந்திரங்களை ஜபிக்கவும் கூடாது .

உருத்திராட்ச மணி -துளசி மணி – ஸ்படிக மணி-மிளகு-சந்தன மணி -நவரத்தின மாலை போன்றவைகள் இக்கலையின் வளர்ச்சிக்கு சித்தி செய்வதற்கு தேவையான ஒன்றாகும்.இதில் எந்த ஒரு மணியும் வைத்துக் கொள்ளலாம் . சந்தனமாலை, நவரத்தின மாலை என்பது ஜபத்திற்கு ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை . இவைகளை எப்போதும் கழுத்தில் அணியலாம் . உருத்திராட்ச மாலை சிவதீட்சை பெற்றவர்கள் எப்போதும் அணியலாம் . இதே போல் துளசி மாலை விஷ்ணு பெருமானின் முத்திரைப் பெற்றவர்கள் எப்போதும் அணியலாம்.ஸ்படிக மணி சாதாரணமாக யாரும் போடலாம்.

ஜபம் செய்வதற்கு உருத்திராட்சம் – துளசி – மணி சிறந்தது இதில் !

  • 25 மணிகள் கொண்ட ஜபமாலையில் செய்யும் ஜபம் முக்தி தரும்.
  • 35 மணிகள் கொண்ட ஜபமாலையில் செய்யும் ஜபம் தனலாபத்தை தரும்
  • 108 மணிகள் கொண்ட ஜபமாலையில் செய்யும் ஜபம் இஷ்டகாரிய சித்தி.
  • 64 மணிகள் கொண்ட ஜபமாலை சர்வஜன வசியத்தை தரும்.
  • 21 மணிகள் கொண்ட ஜபமாலை புத்திர பாக்கியம்.
  • 18 மணிகள் கொண்ட ஜபமாலை கல்வி விருத்தியைத் தரும்.
  • 16 மணிகள் கொண்ட ஜெபமாலை தீர்த்த யாத்திரையை தரும் .
  • 54 மணிகள் கொண்ட தீய வேலைகளுக்கு பயன்படும்.
  • 27 மணிகள் கொண்ட ஜபமாலை எதிரியை ஓட்டும் .
  • 40 மணிகள் கொண்ட ஜபமாலை சம்ஹாரம் செய்யும்.

மந்திரங்கள் தொடரும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்534அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular