Friday, December 1, 2023
Homeசக்தி தரும் மந்திரங்கள்மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்-தொடர்ச்சி

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்-தொடர்ச்சி

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

 • ஜபம் செய்யும் மாலையை இறைவனின் அல்லது உபாசனா மூர்த்தியின் பாதத்தில் வைத்து விடுவது சிறப்பு.
 • கட்டை விரலினால் உருட்டினால் மோட்சம் .
 • ஆள்காட்டி விரலினால் உருட்டினால் சத்துரு நாசத்தை தரும்.
 • பாம்பு விரலால் உருட்டினால் செல்வம் சேரும்.
 • மோதிர விரலால் உருட்டினால் மனசாந்தி ஏற்படும்.
 • சுண்டு விரலால் உருட்டினால் தற்காப்பு கிடைக்கும்.
 • மேற்கே அமர்ந்து கிழக்கு பார்த்து ஜபம் செய்தால் ஜனவசியம் ஆகும்.
 • தென்கிழக்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி ஆகும் ..
 • தெற்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் ஏவல் வைக்க எடுக்கலாம்.
 • தென்மேற்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் பகை வெல்லும்.
 • மேற்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் தன லாயம் தரும்.
 • வடமேற்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் ஆகர்சனத்தை தரும்.
 • வடக்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் மன சாந்தி ஏற்படும்.
 • வடகிழக்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் மோட்சத்தை தரும்.

என பழைய சுவடிகள் சித்தர்கள் முறையை சொல்லி உள்ளனர் .

“ ஒரு மந்திரத்தை ஒருவன் ஒரு லட்சம் முறை ஜபித்தால் அந்த மந்திரம் சேதனமாக ( உயிருள்ளதாக)ஆகிவிடுகிறது.

நல்ல ஊக்கத்தோடு ஒருவன் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தாலும் அவனது மனம் தூய்மையடைந்து விடுகிறது . அதனால் மனமும் மகிழ்ச்சியடைந்து பேரானந்தமும் ஏற்படுகிறது.

‘ உனது சக்திக்கு ஏற்ற வகையில் உன்னுடைய மந்திரத்தை ஒரு லட்சம் தடவையோ அல்லது பத்தாயிரம் தடவையோ ( ஆவர்த்தி ) ஜபம் செய் . மந்திரம் நீண்டதாக இருந்தால் முறையோ , ஐந்தாயிரம் அல்லது இரண்டாயிரம் முறையோ ஜபம் செய்தால் போதுமானது ‘ என்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவராகிய சுவாமி சாரதானந்தார் கூறியுள்ளார் .

சாதாரணமாக ஜபமாலை ஜபிப்பவனின் வலது நடுவிரல்மீது வைத்து உருட்டப்படுகிறது.

” ஜபமாலையை மார்புக்கு நேராக வைத்துக் கொண்டு ஜபம் செய்வதே மேலானது . தொப்பூழ்க்கு நேராகவும் அது தாழ்த்தப்படக் கூடாதென்றும் சொல்லப்படுகிறது . அவ்விதம் செய்வது கடினமாக இருந்தால் ஒரு சால்வையின் , அல்லது துணியின் ஒரு பகுதியில் சாதகன் தனது கைகளை மூடிக்கொண்டு ஜபம் செய்யலாம் ‘ ‘ என்று சுவாமி சாரதானந்தர் மேலும் அறிவுரை வழங்குகிறார்.

” மனம் ஒருமுகப்படுகிறதோ இல்லையோ , பகவானின் திருநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து வாருங்கள் . தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை இறைவனின் நாமத்தை ஜபிப்பது என்பது நமக்கு நன்மையைச் செய்யும் ” என்று அன்னை ஸ்ரீசாரதாதேவியார் கூறியுள்ளார்.

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்
மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

இருக்கை :

பொதுவாக ஜபம் தர்ப்பாசனம் துணியாலான ஆசனம், கம்பளி ஆசனம் போன்றவற்றில் ஏதேனும் ஓர் ஆசனத்தில் ( இருக்கையில் ) அமர்ந்த நிலையிலேயே பழகப்படுகிறது.

சுத்தமான ஓர் இடத்தில் அதில் உயரமில்லாமலும் , அதிகத் தாழ்வாக இல்லாமலும் ஆசனத்தை அமைத்து , அதன்மீது தனது தர்ப்பைகளையும் அவற்றின் மீது மான்தோலையும் , துணியையும் பரப்பி “ஆத்ம சுத்திக்காக , புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தி , எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி ஒரு சாதகன் யோகம் பழக வேண்டும் ” என்று பகவத்கீதை கூறுகிறது.

கம்பளி அல்லது துணியாலான ஆசனங்களே சிறந்தவை என்று அருள் நூல்கள் கருதுகின்றன .

இரும்பு,பித்தளை அல்லதுஈயம் ஆகியவற்றாலான ஆசனங்களை ஒரு சாதகன் உபயோகப்படுத்தக் கூடாது ‘என்று புராணம் ‘ கூறுகிறது.

” ஓர் ஆசனமானது மிகவும் உயரமாகவோ அல்லது மிகவும் தாழ்வாகவோ அல்லது உடைந்தோ இருக்கக் கூடாது ‘ என்று ‘ கந்தர்வ தந்திரம் குறிப்பிடுகிறது.

ஒருமந்திரத்தை உரக்க உச்சாடனம் செய்தால் அது தனது வலிமையை இழந்துவிடுகிறது. தீவிர மந்திர ஜபத்தால் அந்த மந்திரத்தின் மூர்த்தி நமக்கு காட்சி தருகிறார்.

எந்த மந்திரமும் முதலில் ‘ ஓம் ‘ பிரணவமும் இறுதியில் ” நமஹ , சுவாஹா , வௌஷட் , வஷட் , பட் , ஹும் , சுவதா ” என்ற ஏழினுள் ஒன்று பெற்று நிற்கும் . இந்த ஏழும் சப்தகோடி மகாமந்திரம் | ( கோடி – இறுதி ) எனப்படும் .

1.நமஹ-இது அழைத்தால் , ஐஸ்வர்யங்களை அளித்தல்

2. சுவாஹா– தேவதைகளைத் திருப்தி செய்தல்

3.சுவதா – இது தைரியத்தையும் , வசீகரத்தையும் தருதல்

4. வௌஷட் – இது தேவதைகளை இழுத்தல்

5.வஷட் – இது தேவதைகளை வசம் செய்தல்

6.பட் – இது விக்கினங்களை நீக்குதல்

7.ஹும் – இது சீவராசிகளை ஒடுக்குதல்

8.ஹும்பட் – இது விரைந்து செயலை முடித்தல்

குறிலாக உள்ள : ஹம் , ஹும் என்னும் பீஜ மந்திரங்கள் பாவங்களைப் போக்கும்

நெடிலாக உள்ள : ஹாம் , ஹைம் , ஹௌம் என்னும் பீஜ மந்திரங்கள் வீடு பேற்றை அளிக்கும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular