- அதிரடி முன்னேற்றங்கள் உண்டு
- சொல்ல முடியாத அளவுக்கு இழப்பு மற்றும் எதிர்ப்புகளை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த வருடத்தின் துயரங்கள் யாவும் தொலையும்
- புரட்டாசி மாதம் முதல் புரட்சிகரமான முடிவுகள் எடுப்பீர்கள்
- உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்
- குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும் இனி வீட்டில் அமைதி தங்கும் வாழ்க்கை துணைவருடன் சண்டை சச்சரவுகள் நீங்கும் அவர் வழி உறவினர்களுடன் இருந்த சங்கடங்கள் நீங்கி உறவு பலப்படும்
- பிள்ளைகள் இனி உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள்
- தடைபட்ட கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும்
- இதுவரை தொழில் தொடங்கலாம் என முயன்றபோது தடைகளும் தாழ்வுமனப்பான்மையும் தானே வந்தன இனி நீங்கள் எதையும் தகுந்த முன் யோசனையுடன் செய்வீர்கள்
- கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும், ஆரோக்கியம் அதிகரிக்கும் அழகு கூடும், முகமலர்ச்சி அடையும்
- உங்கள் மகனுக்கு வேலை கிடைக்கும்
- கார்த்திகை மாதம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
- மகளுக்கு நல்ல வரன் அமையும் அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள்
- அஷ்டமத்துச் சனியால் ஏற்படும் தீமைகள் விலகி மனம் தெளிவுபெறும்
- உங்களின் கனிவான பேச்சால் சண்டை சச்சரவுகள் குறையும்
- வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம் ஆனி ஆவணி மாதங்களில் சிறப்பாக முடியும்
- சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும்
மிதுன ராசி அன்பர்களுக்கு ஸ்ரீ சொர்ண கால பைரவர் வழிபாடு நன்மை வழங்கும். சிவாலயங்களுக்குச் சென்று பைரவரை வழிபடுவது விசேஷமான பலன்களை பெற்றுத்தரும்.