LATEST ARTICLES

இன்றைய ராசி பலன் – 28.2.2024

இன்றைய ராசி பலன் – 28.2.2024

மேஷம்

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்

பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். செலவுகள் குறையும்.

மிதுனம்

ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்

பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். ஒரு சிலர் பொன் பொருள் வாங்கி மகிழ்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

சிம்மம்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கன்னி

வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

துலாம்

குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். தொழிலில் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்

தனுசு

இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மகரம்

பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்

உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மீனம்

எந்த ஒரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்புகள் ஏற்படும். புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

இன்றைய பஞ்சாங்கம்– 28.2.2024

தமிழ் தேதி மாசி-16,புதன்
ஆங்கில தேதி பிப்ரவரி -28
திதி சதுர்த்தி விடியற்காலை 4.19 மணி வரை பின் பஞ்சமி
யோகம் மரண /சித்த யோகம்
கரணம் பவ
நட்சத்திரம் ஹஸ்தம் காலை 7.33 மணி வரை பின் சித்திரை
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி கும்பம்
ராகு காலம் 12.28PM -1.58PM
எமகண்டம் 7.59AM -9.29AM
நல்ல நேரம் -காலை
நல்ல நேரம் -பிற்பகல் 2.00PM -3.30PM ,4.30PM 5.30PM
நல்ல நேரம் -இரவு 7.30PM -10.30PM
இன்றைய சிறப்புகள் சங்கடஹர சதுர்த்தி

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் – 27.2.2024

இன்றைய ராசி பலன் – 27.2.2024

மேஷம்

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

மிதுனம்

குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

சிம்மம்

பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.

கன்னி

பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

துலாம்

குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

விருச்சிகம்

எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.

தனுசு

வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.

மகரம்

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் வழியில் மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

கும்பம்

சற்று குழப்பமுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.

மீனம்

நினைத்த காரியம் நிறைவேற தடைகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலைபளு குறையும்.

இன்றைய பஞ்சாங்கம்– 27.2.2024

தமிழ் தேதி மாசி-15,செவ்வாய்
ஆங்கில தேதி பிப்ரவரி -27
திதி திருதியை இரவு 1.53மணி வரை பின் சதுர்த்தி
யோகம் சித்த யோகம்
கரணம் வணிசை
நட்சத்திரம் ஹஸ்தம் நாள் முழுவதும்
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி கும்பம்
ராகு காலம் 3.28PM -4.57PM
எமகண்டம் 9.29AM -10.59AM
நல்ல நேரம் -காலை 11.01AM -11.31AM
நல்ல நேரம் -பிற்பகல் 12.31PM -1.31PM ,5.01PM -6.31PM
நல்ல நேரம் -இரவு 7.31PM -8.31PM
இன்றைய சிறப்புகள் கரிநாள் ,தனியா நாள்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் – 26.2.2024

இன்றைய ராசி பலன் – 26.2.2024

மேஷம்

மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கடகம்

எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

கன்னி

எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்

தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்

தனுசு

தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

மகரம்

செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். உங்கள் ராசிக்கு காலை 08.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

ராசிக்கு காலை 08.11 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

இன்றைய பஞ்சாங்கம்– 26.2.2024

தமிழ் தேதி மாசி-14,திங்கள்
ஆங்கில தேதி பிப்ரவரி -26
திதி துவிதியை இரவு 11.16 மணி வரை பின் திருதியை
யோகம் சித்த யோகம்
கரணம் தைதுளை
நட்சத்திரம் உத்திரம் விடியற்காலை 4.30மணி வரை பின் அஸ்தம்
வார சூலை கிழக்கு
சந்திராஷ்டம ராசி கும்பம்
ராகு காலம் 8.00AM -9.29AM
எமகண்டம் 10.59AM -12.29PM
நல்ல நேரம் -காலை 6.31AM -7.31AM
நல்ல நேரம் -பிற்பகல் 12.31PM -2.31PM
நல்ல நேரம் -இரவு 6.31PM -9.31PM
இன்றைய சிறப்புகள் சுப முகூர்த்த நாள் (காலை 9.30-10.30)மேஷ லக்னம் தேய்பிறை முகூர்த்தம்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் – 25.2.2024

இன்றைய ராசி பலன் – 25.2.2024

மேஷம்

உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் வரும்.

ரிஷபம்

தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.

மிதுனம்

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம்

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும்.

துலாம்

எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.

விருச்சிகம்

பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை.

மகரம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.

கும்பம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

மீனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். செலவுகள் குறையும்.

இன்றைய பஞ்சாங்கம்– 25.2.2024

தமிழ் தேதி மாசி-13,ஞாயிறு
ஆங்கில தேதி பிப்ரவரி -25
திதி பிரதமை இரவு 8.36 மணி வரை பின் துவிதியை
யோகம் சித்த /அமிர்த யோகம்
கரணம் பாலவம்
நட்சத்திரம் பூரம் இரவு 1.24 மணி வரை பின் உத்திரம்
வார சூலை மேற்கு
சந்திராஷ்டம ராசி தனுசு
ராகு காலம் 4.57PM -6.27PM
எமகண்டம் 12.29PM -1.58PM
நல்ல நேரம் -காலை 8.02AM -10.32AM
நல்ல நேரம் -பிற்பகல் 2.32PM -4.56PM
நல்ல நேரம் -இரவு 9.32PM -10.32PM
இன்றைய சிறப்புகள் மாக பகுளம்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

மார்ச் மாத ராசி பலன் 2024: பலன்கள் மற்றும் பரிகாரம்

மார்ச் மாத ராசி பலன் 2024

மேஷம்

உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும், சனி 11-ல் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்சினைகள் குறைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும் உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்
2.3.2024 காலை 8.17 மணி முதல் 4.3.2024 மாலை 4.21 மணி வரை மற்றும் 29.3.2024 பகல் 2.09 மணி முதல் 31.3.2024 இரவு 10.56 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : ஆழ் சிவப்பு

கிழமை : செவ்வாய்

கல் : பவளம்

திசை : தெற்கு

வணங்க வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 9, 10-ல் செவ்வாய், 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த சுனக்க நிலைமாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
துர்க்கையம்மனையும் முருகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்
4.3.2024 மாலை 4.21மணி முதல் 6.3.2024 இரவு 8.28 மணி வரை மற்றும் 31.3.2024 இரவு 10.56 மணி முதல் 3.4..2024 அதிகாலை 4.36 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,8

நிறம் : வெண்மை, நீலம்

கிழமை : வெள்ளி ,சனி

கல் :வைரம்

திசை : தென் கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : விஷ்ணு,லக்ஷ்மி

மிதுனம்

உங்கள் ராசிக்கு 9 ,10ல் சூரியன், புதன் 11ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால், எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பண வரவுகள் கைக்கு கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
துர்க்கை அம்மனையும் விநாயகரின் வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டமம்
6. 3.2024 இரவு 8.28 மணி முதல் 8.3.2024 இரவு 9.20 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,8

நிறம் : பச்சை ,வெள்ளை

கிழமை : புதன்

கல் : மரகதம்

திசை : வடக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : விஷ்ணு

கடகம்

உங்கள் ராசிக்கு செவ்வாய் 7ல், 8ல் சூரியன்+ சனி சஞ்சரிப்பதால், எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் ஆகும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும், பொருட்தேக்கம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சற்று முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும், உடன் இருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
சிவனையும் முருகரையும் வழிபடவும்
சந்திராஷ்டமம்
8.3.2024 இரவு 9.20 மணி முதல் 10.3.2024 இரவு 8.40மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்:1,2,3,9

நிறம் : வெண்மை,சிவப்பு

கிழமை : திங்கள், வியாழன்

கல் : முத்து

திசை : வட கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : வெங்கடாசலபதி

சிம்மம்

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், மாதம் முற்பாதிகள் 6ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால், பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சூரியன் 7,8ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் தொடர்பால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
சிவனையும் துர்க்கையும் வழிபாடு செய்வது உத்தமம்
சந்திராஷ்டமம்
10.3.2024 இரவு 8.40மணி முதல் 12.3.2024 இரவு 8.29 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : வெண்மை, சிவப்பு

கிழமை :ஞாயிறு

கல் : மாணிக்கம்

திசை : கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : சிவன்

கன்னி

உங்கள் ராசிக்கு 6ல் சூரியன்+சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பண விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில்ரீதியாக வீண் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும், எதையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் வேலை பளு அதிகரித்தாலும், உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
துர்க்கை வழிபாடு குரு பகவானுக்கு தீபம் ஏற்றுவது நல்லது
சந்திராஷ்டமம்
112.3.2024 இரவு 8.29 மணி முதல் 14.3.2024 இரவு 11.39 மணி வரை


அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,7,8

நிறம் : பச்சை ,நீலம்

கிழமை : புதன் , சனி

கல் : மரகதம்

திசை : வடக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : ஶ்ரீ விஷ்ணு

துலாம்

ஜென்ம ராசிக்கு 4,5ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6ல் சூரியன், 7ல் குரு சஞ்சரிப்பதால்எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தாராள தன வரவு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதால், அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதலால் மன நிம்மதி உண்டாகும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
முருக வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டமம்
14.3.2024 இரவு 10.39 மணி முதல் 17.3.2024 அதிகாலை 4.21 மணி

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 4,5,6,7,8

நிறம் : வெள்ளை, பச்சை

கிழமை : வெள்ளி, புதன்

கல் : வைரம்

திசை : தென் கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : லக்ஷ்மி

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு மாதம் ஒரு பாதையில் 3ல் செவ்வாய், சஞ்சரிப்பதாலும் லாபஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும், எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். சூரியன் சனி 4ல் இருப்பதால், வீண் அலச்சல் ஆரோக்கிய பாதிப்புகள் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருந்தாலும் நெருங்கியவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகப்படியாக இருப்பதால், நிதானமாக செயல்படுவது உத்தமம்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுவது நல்லது
சந்திராஷ்டமம்
17.3.2024 அதிகாலை 4.21 மணி முதல் 19.3.2024 பகல் 1.37 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : மஞ்சள் , ஆழ் சிவப்பு

கிழமை :வியாழன்,செவ்வாய்

கல் : பவளம்

திசை : தெற்கு

வணங்க வேண்டிய தெய்வம் : முருகன்

தனுசு

உங்கள் ராசிக்கு 5ல் குரு, 3ல் சனி மாத முற்பாதியில், 3ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். கடந்த கால பிரச்சனைகள் படிப்படியாக குறையும் பண வரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழிலில் வேலை ஆட்களை அனுசரித்து நடந்து கொண்டால் போட்ட முதலில் எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது சிறப்பு
சந்திராஷ்டமம்
19.3.2024 பகல் 1.37 மணி முதல் 22.3.2024 அதிகாலை 1.27 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : மஞ்சள் ,பச்சை

கிழமை :வியாழன்,திங்கள்

கல் : புஷ்பராகம்

திசை : வட கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி

மகரம்

உங்கள் ராசிக்கு 1ல் ராகு, மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சசரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சனி 2ல் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்ப்பது உத்தமம். கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
முருகனையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டமம்
22.3.2024 இரவு 1.27 மணி முதல் 24.3.2024 பகல் 2.20 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,8

நிறம் : நீலம்,பச்சை

கிழமை : சனி ,புதன்

கல் : நீலக்கல்

திசை : மேற்கு

வணங்க வேண்டிய தெய்வம் : விநாயகர்

கும்பம்

உங்கள் ராசிக்கு 1,2ல் சூரியன்+ சனி, 12ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டும், எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில்,வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும், வரவேண்டிய வாய்ப்புகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து, தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
தட்சிணாமூர்த்தி ,ஆஞ்சநேரையும் வழிபடுவது நல்லது
சந்திராஷ்டமம்
24.3.2024 பகல் 2.20 மணி முதல் 27.3.2024 அதிகாலை 2:56 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,8

நிறம் : வெள்ளை, நீலம்

கிழமை :வெள்ளி ,சனி

கல் : நீலக்கல்

திசை : மேற்கு

வணங்க வேண்டிய தெய்வம் : ஐயப்பன்

மீனம்

ஜென்ம ராசியில் ராகு 12, 1 சூரியன் சஞ்சரித்தாலும் 2ல் குரு, மாதம் முற்பாதி 11ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அசையும் சொத்துக்கள் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதலை பெறுவார்கள்.

மார்ச் மாத ராசி பலன் 2024
வழிபாடு
ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது
சந்திராஷ்டமம்
27.3.2024 அதிகாலை 2.56 மணி முதல் 29.3.2024 பகல் 2.9 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : மஞ்சள் ,சிவப்பு

கிழமை :வியாழன், ஞாயிறு

கல் : புஷ்பராகம்

திசை : வட கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி

எண்ணியதை ஈடேற்றி கொடுக்கும் உங்கள் ராசிக்குரிய பீஜ மந்திரங்கள்!!

பீஜ மந்திரங்கள்

பீஜ மந்திரங்களை தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு,வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி, இறைவன் முன்பு தங்களால் இயன்ற அளவு ஏதேனும் ஒரு நிவேதனம் வைத்து,கொடுக்கபட்டுள்ள பீஜ மந்திரங்களை தினமும் குறைந்தது 108 முறை, விருப்பம் உள்ளவர்கள் 1008 முறை ஜெபிக்கலாம்.வாழ்வில் பல நற்பலன்களை கொடுக்கும் அதி அற்புதமான மந்திரங்கள்.

மேஷம்
ஓம் ஐம் க்லீம் சௌம்!!
ரிஷபம்
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்!!
மிதுனம்
ஓம் க்லீம் ஐம் சௌம்!!
கடகம்
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்!!
சிம்மம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்!!
பீஜ மந்திரங்கள்
கன்னி
ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்!!
துலாம்
ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்!!
விருச்சிகம்
ஓம் ஐம் க்லீம் சௌம்!!
தனுசு
ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்!!
மகரம்
ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்!!
கும்பம்
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம்!!
மீனம்
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்!!

இன்றைய ராசி பலன் – 23.2.2024

இன்றைய ராசி பலன் – 23.2.2024

மேஷம்

குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிட்டும்

மிதுனம்

குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். தொழில் ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

கடகம்

புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் இழுபறி நிலை ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கன்னி

பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

துலாம்

ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்

விருச்சிகம்

பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

வீண் கவலைகளும் குழப்பங்களும் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளி நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

மகரம்

பணவரவு அமோகமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

இன்றைய பஞ்சாங்கம்– 23.2.2024

தமிழ் தேதி மாசி-11,வெள்ளி
ஆங்கில தேதி பிப்ரவரி -23
திதி சதுர்த்தசி பகல் 3.34 மணி வரை பின் பெளர்ணமி
யோகம் மரண யோகம்
கரணம் வணிசை
நட்சத்திரம் ஆயில்யம் இரவு 7.25 மணி வரை பின் மகம்
வார சூலை மேற்கு
சந்திராஷ்டம ராசி தனுசு
ராகு காலம் 11.00AM -12.29AM
எமகண்டம் 3.28PM -4.57PM
நல்ல நேரம் -காலை
நல்ல நேரம் -பிற்பகல் 1.33PM -2.03PM ,5.33PM -6.33PM
நல்ல நேரம் -இரவு 8.33PM -9.33PM
இன்றைய சிறப்புகள் மாத நரசிம்ம சதுர்த்தசி ,சுப காரியங்கள் விலக்கபட வேண்டும்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் – 21.2.2024

இன்றைய ராசி பலன் – 21.2.2024

மேஷம்

குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

குடும்பத்தில் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் நிறைவேறும். வேலையில் பணிச்சுமை குறையும்.

கடகம்

எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்

செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக பொருளாதார உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

கன்னி

குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்-.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

தனுசு

நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்வது நல்லது.

மகரம்

குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.

மீனம்

பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்– 21.2.2024

தமிழ் தேதி மாசி-9,புதன்
ஆங்கில தேதி பிப்ரவரி -21
திதி துவாதசி காலை11.28 மணி வரை பின் திரயோதசி
யோகம் சித்த யோகம்
கரணம் பாலவம்
நட்சத்திரம் புனர்பூசம் பகல் 2.17 மணி வரை பின் பூசம்
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி விருச்சிகம்
ராகு காலம் 12.30PM -1.59PM
எமகண்டம் 8.02AM -9.31PM
நல்ல நேரம் -காலை 9.34AM -10.34AM
நல்ல நேரம் -பிற்பகல் 2.04PM -3.34PM ,4.34PM -5.34PM
நல்ல நேரம் -இரவு 7.34PM ,10.34PM
இன்றைய சிறப்புகள் சுபமுகூர்த்த நாள் (10.00-11.00) மேஷ லக்கினம் ,வளர்பிறை முகூர்த்தம்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் – 20.2.2024

இன்றைய ராசி பலன் – 20.2.2024

மேஷம்
எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
கடகம்
குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் காலதாமதமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
சிம்மம்
குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.
கன்னி
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
துலாம்
உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும்.
விருச்சிகம்
எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
தனுசு
பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்து லாபத்தை அடைய முடியும்.
மகரம்
குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்
எதிர்பார்த்த உதவிகள் கடைசி நேரத்தில் கைக்கு கிடைக்காமல் போகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சலும், ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.

இன்றைய பஞ்சாங்கம்– 20.2.2024

தமிழ் தேதி மாசி-8,செவ்வாய்
ஆங்கில தேதி பிப்ரவரி -20
திதி ஏகாதசி காலை 9.56மணி வரை பின் துவாதசி
யோகம் மரண /சித்த யோகம்
கரணம் பத்திரை
நட்சத்திரம் திருவாதிரை பகல் 12.13மணி வரை பின் புனர்பூசம்
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி விருச்சிகம்
ராகு காலம் 3.28PM -4.57PM
எமகண்டம் 9.32AM -11.01AM
நல்ல நேரம் -காலை 11.05AM -11.35AM
நல்ல நேரம் -பிற்பகல் 12.35PM -1.35PM ,5.05PM -6.35PM
நல்ல நேரம் -இரவு 7.35PM -8.35PM
இன்றைய சிறப்புகள் ஜெய ஏகாதசி

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

சுக்கிரன் பிற கிரகங்களுடன் இணைந்து இருந்தால் எப்படிபட்ட மனைவி அமையும் ?

சுக்கிரன் +சூரியன்

உடல் உறவில் தேர்ந்தவர்.செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மனைவி.அரச குல மங்கை போன்ற உருவ அமைப்பு.

சுக்கிரன் +சந்திரன்

உயர் சமூகத்தில் உதித்த மனைவி.முரண்பாடுகள் உள்ள மனைவி.

சுக்கிரன் +செவ்வாய்

ஜாதகர் காமம் மிக்கவர்.இளமையான வாளிப்பான சரீரமுடைய மனைவி.

சுக்கிரன் +புதன்

அறிவு உள்ள புத்திசாலித்தனமான மனைவி,இனம் பெருந்தன்மை மிக்க மனைவி,காமத்தை பற்றியே பேசிக்கொண்டும்,நினைத்து கொண்டும் அலைபவர்.ஒழுக்கக்கேடான இலக்கியங்கள் மீது ஆர்வம் உள்ளவர்.

சுக்கிரன் +குரு

அழகிய பரிசுத்தமான ,ஒழுக்கம் மிக்க மனைவி,நன் மக்களை ஈன்றெடுக்க கூடியவள்.ஜாதகர் திருமண பந்தத்துக்கு மாறனா வழிகளில் செல்லமாட்டார்.

சுக்கிரன் +சனி

சாந்தமான,தன்னடக்கம் உள்ள மனைவி.மண வாழ்வில் மிக நல்ல மகிழ்ச்சி உடையவர்.பாதிப்பு அடைந்த கிரக நிலையாக,மோசமான குணமுடைய மனைவி அமைவாள்.

சுக்கிரன் +ராகு

வெற்றி பெறாத இரகசிய காதல் விவகாரங்கள் உடையவர்

சுக்கிரன் +கேது

மிகவும் உணர்ச்சிகரமான காம விவரகாரங்கள் உடையவர்.