சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -கன்னி

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -கன்னி

எளிமையிலும் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கும் கன்னிராசி அன்பர்களே!!!

 சனி பகவான் 27. 12. 2020 முதல் 19. 12. 2023 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.
 சனி பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.
 • ஏமாற்றங்கள் நீங்கும்
 •  தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும் 
 • குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழக்கூடிய இனிய நிலை உருவாகும் 
 • பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும் 
 • தாயாருடன் பாசமாக நடந்து கொள்வீர்கள் 
 • வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும் கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்வீர்கள் 
 • சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் 
 • கர்ப்பிணிகள் தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது
 •  பிள்ளைகளிடம் தோழமையாக பழகுங்கள் 

சனி பகவானின் பார்வை 

சனி பகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் 
 • இடம் பொருள் ஏவலறிந்து பேசுவது நல்லது 
 • அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள் 
 • யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம் 

சனிபகவான் உங்களின் 7-ஆம் வீட்டை பார்ப்பதால் 

 • மனைவிக்கு கை கால் வலி வரக்கூடும் 
 • மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும் 

சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் 

 • நெடு நாளாக வராமலிருந்த பணமெல்லாம் கைக்கு வரும் 
 • மூத்த சகோதரர்கள் பாசமாக நடந்து கொள்வர் 
 • மார்க்கெட்டில் புதிதாக வந்த வாகனத்தை வாங்குவார்கள் 

இல்லத்தரசிகளே! 

 • குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும் 
 • அலுவலகம் செல்லும் பெண்கள் வேலைச்சுமை மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள் 

வியாபாரிகளே! 

 • பணவரவு உயரும் 
 • பழைய சரக்குகள் விற்றுத் தீரும் 
 • வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள் 
 • வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு கொள்முதல் செய்யப் பாருங்கள் 
 • கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள் 
 • ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு
 • நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்

 உத்தியோகஸ்தர்களே! 

 • பணிச்சுமை குறையும் 
 • கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள் 
 • கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும் 
 • துறை மாறி  பணிபுரிபவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்
 •  சம்பளம் அதிகரிக்கும் 
 • கணினித் துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும் 
இந்த சனிப்பெயர்ச்சி செல்வாக்கு தருவதாக அமையும் 
 
பரிகாரம் :
 
பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு காப்பரிசி சமர்ப்பித்து வழிபடுங்கள் 
ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சி திருத்தலங்கள் -திருக்கொள்ளிக்காடு

சனி பெயர்ச்சி திருத்தலங்கள் -திருக்கொள்ளிக்காடு

திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவத்தலம் திருக்கொள்ளிக்காடு(thirukollikadu) பொங்கு சனீஸ்வர கேஷத்திரம் என போற்றப்படுகிறது.

சனி பகவான்(Sani bhagavan ) தன் சாபம் நீங்குவதற்காக இந்த தளத்துக்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்தார் அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார் தேவியுடன் அவருக்கு காட்சி தந்தார் அப்போது தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக இருந்து அனைவருக்கும் அருளவேண்டும். ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் அதிபதியாக இருந்து குபேர சம்பத்துக்களை தருபவனாக உயிர்களுக்கு வரமளிக்க வேண்டும் என வரம் கேட்டார் சனி பகவான்(Sani) அப்படியே ஆகட்டும் என வரத்தைத் தந்து அருளினார் சிவனார்.
 
 அன்றுமுதல் திருக்கொள்ளிக்காடு(Thirukollikadu) தளத்திற்கு வந்து தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் நோய் நொடி இல்லாத நீண்ட ஆரோக்கியத்தையும் வாரி வழங்குகிறார் ஸ்ரீ சனீஸ்வரர்(Sani).
 
இத்தலத்து இறைவனின் திருநாமம் 
 • அருள்மிகு அக்னீஸ்வரர்(Sri Agnieeswarar) 
 • அம்பாளின் திருநாமம் அருள்மிகு வேதநாயகி அதாவது பஞ்சின் மெல்லடி என்று பொருள் 

ஏழரைச் சனி

கலப்பையுடன் சனி பகவான்

 ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவானின் கோட்சார நிலைகளை மங்குசனி(Mangu Sani), பொங்குசனி(Pongu Sani), மரணச்சனி(Marana Sani),அந்திமசனி(Anthima Sani என்பார்கள் இத்தளத்தில் அவர் பொங்கு சனீஸ்வரர்(Pongu Sani) அருள்பாலிக்கிறார் மட்டுமின்றி கையில் கலப்பையுடன் சனிபகவான்(Sani) திருக்காட்சி தந்தருள்வது  இத்தலத்தின் சிறப்பம்சம்.
 
 இந்த சனீஸ்வரரை(Sani) வணங்கி விட்டு விதை விதைத்தால் அமோக விளைச்சல் கிடைக்கும். விதைக்கும் அனைத்தும் பொன்னென விளைந்து  செல்வத்தை தரும். வீட்டில், சகல சவுபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் சேரும் என்பர்.

 எதிரெதிர் சன்னதியில் பைரவரும்  சனிபகவானும்! 

வேறொரு மகிமையும் உண்டு இத்தலத்திற்கு பொங்கு சனீஸ்வரருக்கு(Pongu Sani) என்ன தெரியுமா?
 இவர் மகாலட்சுமி அமைந்திருக்கும் இடத்தில் சந்நிதி கொண்டிருப்பதால் பக்தர்களுக்கு குபேர சம்பத்துகளையும் யோகங்களையும் அருளும் வரப்பிரசாதியாய்  திகழ்கிறார்.
 
 அதேபோல் இந்த ஆலயத்தில் ஸ்ரீ பைரவரும்,  சனீஸ்வரரும் எதிரெதிர்  சன்னதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். சிறப்பான அமைப்பு இது என்கிறார்கள் பக்தர்கள்.
 ஸ்ரீகாலபைரவர் எதிரிகளின் தொல்லை தீவினைகள் முதலான சகல பிரச்சினைகளையும் தீர்த்து மன தைரியத்துடன் வாழ்வதற்கு அருள்பாலிக்கிறார்.
 
சனி
 
 தளம்: திருக்கொள்ளிக்காடு 
 
சுவாமி: ஸ்ரீ அக்னீஸ்வரர்(Sri Agnieeswarar) 
அம்பாள்: ஸ்ரீ மிருதுவாக நாயகி(Sri Miruthuvaga Nayagi) 
 
திருத்தலச் சிறப்புகள்: அக்னிபுரி,அக்னிஹோத்ரம், என்றெல்லாம் போற்றப்படும் இந்த தளத்தில் தனி சன்னதியில் அருளும் சனீஸ்வரர் லட்சுமி கடாட்சத்தை அள்ளி தரும் பொங்கு சனீஸ்வரர்(Pongu Sani) காட்சி தருகிறார். ஆம் இங்கே லட்சுமி சன்னதி இருக்க வேண்டிய இடத்தில் சக்தி அம்சமாக சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக அருள்கிறார். அருகிலேயே திருமகளும் சன்னதி கொண்டு இருப்பது விசேஷம்.
 
எப்படி செல்வது?: திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருக்கொள்ளிக்காடு(Thirukollikadu) திருவாரூர் திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாங்கல்  நால்ரோடு இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கொள்ளிக்காடு(Thirukollikadu)திருத்தலம்.
 
ஆலயம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள கீழ உள்ள லிங்கை தொடவும்  :

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -சிம்மம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -சிம்மம்

மனத்தூய்மை மிக்கவரான சிம்மராசி அன்பர்களே!!!

 பலவகைகளில் உங்களை வாட்டி எடுத்த சனிபகவான் இப்போது 27. 12.2020 முதல் 19.12.2023 வரை ஆறாம் வீட்டில் அமர்கிறார். ஆகவே விபரீத ராஜ யோகத்தை அள்ளி தருவார்.
 •  மன இறுக்கமும் கோபமும் விலகும் 
 • தடுமாற்றம் நீங்கும் நல்ல வாய்ப்புகள் அமையும் 
 • பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள் 
 • பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும்
 •  குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள் 
 • பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள் 
 • மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள்
 •  உங்களை அலட்சியப்படுத்திய சொந்தபந்தங்கள் ,நண்பர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள்
 •  சிலர் சொந்த வீடு கட்டி குடிபுகுவீர்கள் 
 • மகனுக்கு தெரிந்த இடத்தில் சம்பந்தம் அமையும் 
 • பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள் 
 • வீடு கட்ட தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும் 

சனி பகவானின் பார்வை 

 சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் 
 • தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் 
 • வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும் 
 • குடலுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டாம் 

சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால்

 •  வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை
 •  மகான்களின் தரிசனம் கிடைக்கும் 

சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் 

 • வராது என்றிருந்த பணம் கைக்கு வரும் 

ல்லத்தரசிகளே!!!

 • தாம்பத்தியம் இனிக்கும் 
 • பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் 
 • அலுவலகம் செல்லும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்

 வியாபாரிகளுக்கு!

 •  அதிக லாபம் கிடைக்கும் 
 • பாக்கித் தொகை உடனடியாக வசூலாகும் 
 • மகளின் ரசனைக்கேற்ற பொருள்களை கொள்முதல் செய்வீர்கள்
 •  சரக்குகளை விற்றுத் தீரும் 
 •  புது புது ஒப்பந்தம் செய்வீர்கள் 
 • வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் 
 • கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும் 

த்தியோகஸ்தர்களுக்கு!

 • உரிய அங்கீகாரம் கிடைக்கும் அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள் 
 • எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு எல்லாம் உண்டு 
 • வெகுநாட்களாக போராடிய சம்பள பாக்கியும் கைக்கு வரும்
 •  மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும் 
 • உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள் 
 • கணினித் துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும் 

பரிகாரங்கள் :

இந்த சனிப்பெயர்ச்சி திடீர் யோகங்களை அளிக்கும்! சிவதரிசனம் நன்மை சேர்க்கும் திருவாரூர் அருகில் உறையூரில் சங்கரநாராயணர் கோயிலில் அருளும் சனி பகவானை தரிசித்து வாருங்கள் சந்தோஷம் பெருகும்!!!

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சி பலன்கள்- 2020-2023-பரிகாரங்கள்- கடகம்

சனி பெயர்ச்சி பலன்கள்- 2020-2023-பரிகாரங்கள்- கடகம்

அயராத உழைப்பாளிகளான கடக ராசி அன்பர்களே!!!

 சனி பகவான் 27. 12. 2020 முதல் 19. 12.2023 வரை ஏழாம் வீட்டில் அமர்கிறார் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றாலும் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்தாலும் பெரிதாக பாதிக்காது.
 •  கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகவும்
 •  உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் குழப்பம் ஏற்படுத்தலாம். 
 • விலை உயர்ந்த நகைகளை கவனமாக கையாளுங்கள் 
 • வரி கட்டுவதில் தாமதம் வேண்டாம் 
 • வங்கி காசோலைகள் ஆவணங்களில் கையெழுத்து இடுவதில் கவனம் தேவை 
 • மனைவிக்கு ஆரோக்யம் பாதிக்கும் 
 • மகனின் உயர் கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டி இருக்கும்
 •  உத்தியோகம், வியாபாரம் எனும்  பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும்
 •  இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது 
 • பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள் 

சனி பகவானின் பார்வை பலன்கள் 

சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால்

 •  அலர்ஜியால் தோலில் நமைச்சல் கட்டிகள் வரவும் முடி உதிரும் வாய்ப்பு உள்ளது 
 • நேரம் தவறி சாப்பிட வேண்டாம் செரிமானக் கோளாறு வந்து நீங்கும்
 •  உணவில் உப்பு புளி காரம் அதிகம் வேண்டாம் 
 • மறதியும் பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும் 

சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் 

 • வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும் 
 • தாயாரின் உடல் நலம் பாதிக்கும் அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும் 

சனிபகவான் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் 

 • கையிருப்பு கரையும் வெளியில் கடன் வாங்க நேரிடும் 

ல்லத்தரசிகளே கணவரின் சின்ன சின்ன கோபங்களை எல்லாம் பெரிதாக்க வேண்டாம் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்

 •  அலுவலகம் செல்லும் பெண்கள் சக ஊழியர்களை விமர்சித்துப் பேச வேண்டாம் 

வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த கூட்டுத் தொழிலில் ஈடுபடுத்த வேண்டாம் 

 • வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை பகிர வேண்டாம் 
 • வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள் 
 • கடன் தருவதைத் தவிருங்கள் 
 • அரிசி -பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும்
 •  பங்குதாரர்களுடன் மோதல்கள் எழும் 

த்தியோகஸ்தர்களே அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள் 

 • மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்
 •  மேலதிகாரிகளை பற்றி அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் 
 • சலுகைகள் தாமதமாக கிடைக்கும் 
 • எதிர்பாராத இடமாற்றம் உண்டு 
 • ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம் 
 • கணினித் துறையினருக்கு பிரச்சனைகளை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும் 

பரிகாரம் 

வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் பாடி அம்பாளை வழிபடுங்கள்  நவகிரக சன்னதியில் வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள். முன்னேற்றம் உண்டாகும்..
சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்- வட திருநள்ளாறு

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்- வட திருநள்ளாறு

தல வரலாறு 

சென்னை பல்லாவரம் ,குன்றத்தூர் சாலையில் பம்மலை தாண்டியதும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் முக்கிய சாலையிலேயே அமைந்துள்ளது பொழிச்சலூர் இங்கு அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகையோடு கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு அகத்தீஸ்வரர்.

 
தொண்டை மண்டல புகழ் நாட்டில் புகழ் சோழ நல்லூர் என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூர் பல்லவர் காலத்தில் பொழில்சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது.
 
 அகத்திய மாமுனி தனது யாத்திரையின் போது தொண்டை மண்டலம் முழுக்க பல இடங்களில்  சிவலிங்கங்களை ஸ்தாபித்து ஆலயங்களை எழுப்பி வந்தார் இந்த பொழிச்சலூர் தளத்தில் தங்கியிருந்த அகத்தியருக்கு ஈசனே சுயம்புவாக தோன்றி காட்சி அளித்தார். இங்ஙனம் அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்று திருபெயர்.
 
 
 இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் மிகவும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். இவரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றதாக ஞானநூல்கள் சிறப்பிக்கின்றன. இக்கோயிலில் சனி பகவான் திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பது போலவே இங்கும் தனியாக எழுந்தருளி சின் முத்திரையுடன் காட்சி அளிக்கின்றார். 
 
சனி பெயர்ச்சி திருத்தலங்கள்
 
திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்குள்ள சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களை செய்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ அரசர்களால் கஜபிருஷ்ட விமானத்துடன் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் சிவனைப்போலவே சனிபகவானுக்கு தனி வழிபாடுகள் பூஜைகள் செய்யப்படுகின்றன. விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கும் இங்கே சந்நிதிகள் இருக்கின்றன .
 
 
ஏழரை சனி ,பாத சனி, அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி ,கண்டகச் சனி என எவ்வகை சனி தோற்ற பாதிப்புகள் இருந்தாலும் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் தோஷ நிவர்த்தி அடையலாம்என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றார்கள்.
 
 நெஞ்சில் நீதியும், செயலில் நேர்மையும், வாக்கில் துணிவும் கொண்டவர்களுக்கு எந்நாளும் நலமே அருளும் சனி பகவான் இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சகல பாதிப்புகளையும் நீக்கி நன்மைகளை வாரி வழங்கி வருகிறார்…
 
ஆலயம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள கீழ உள்ள லிங்கை தொடவும்  :
 
 

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -மிதுனம் -2020-2023

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -மிதுனம்  

 மதிநுட்பம் மிகுந்த மிதுன ராசி அன்பர்களே!!!

 சனிபகவான் இப்போது 27. 12. 2020 முதல் 19. 12. 2023 வரை உள்ள காலகட்டங்களில் எட்டாம் வீட்டில் அமர்கிறார். 
 • எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது 
 • குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம் 
 • நேரங்கெட்ட நேரத்தில் பயணிக்க வேண்டாம் 
 • யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம் 
 • வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள் 
 • முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுக்கவும் 
 • மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும் 
 • மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும் 
 • வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்
 •  சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் வந்து விலகும் 
 • திடீர் பயணங்களும் அலைச்சல்களும் உண்டு 
 • கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம் 

சனி பகவானின் பார்வை 

சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் 
 • சாதுரியமாக பேசுவீர்கள் ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள் 
 • எதிர்பார்த்த பணம் வரும் 

சனி பகவான் உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் 

 • ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவார்கள் 
 • பூர்வீக சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும் 

சனிபகவான் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் 

வேற்றுமொழி அன்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்
 
 •  இல்லத்தரசிகளே குடும்பத்தில் பெரிய முடிவு எல்லாம் நீங்கள் எடுக்க வேண்டிவரும் பிள்ளைகளின் உயர்கல்வி திருமணம் குறித்து கவலைகள் தலைதூக்கும். 
 • அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பேச்சில் கவனம் தேவை, சம்பளம் உயரும்.
 •  வியாபாரிகள் ஆழம் தெரிந்து கால் வைக்க வேண்டும் போட்டிகள் அதிகரிக்கும் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள், இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும்.
 •  பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சனைகள் வந்து நீங்கும்
 •  உத்தியோகஸ்தர்களே நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள் 
 • உங்களுக்கு பரிந்து பேசிய உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க கூடும் எனினும் சம்பளம் உயரும் 
 • கணினித் துறையினருக்கு புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் தாமதமாகி கிடைக்கும்.

பரிகாரம் :

 குலதெய்வ வழிபாடு நன்மைகளை அளிக்கும். சனைச்சர ஸ்தோத்திர படித்து அவரை வழிபடுங்கள். தினமும் காகத்திற்கு அன்னம் இட்டு வாருங்கள் உங்களின் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிட்டும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சி திருத்தலங்கள் -சனீஸ்வர வாசல்-காரையூர்

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்

தொழிலில் மேன்மை பெற செல்ல வேண்டிய திருத்தலம் -சனீஸ்வர வாசல்-காரையூர்  

தல வரலாறு 

ஒருமுறை நள  மகாராஜனை பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கி புறப்பட்டார் சனிபகவான்(Sani bhagavan ) இலக்கை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில் இருள்கவியத் தொடங்கிவிட்டது . பகவானின் காக வாகனத்திற்கு பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேயேனும் தங்கவேண்டிய நிலை அப்போது பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே அந்த இடத்திலேயே தரை இறங்கினார் சனிபகவான்.(Sani bhagavan )

இரவில் அங்கு தங்கி இருந்தவர் காலையில் எழுந்தபோது கோயிலின் எதிரில் விருத்தகங்கா நதி பாய்வதை கண்டார் .அத்துடன் அதில் நீராடி அந்த தளத்தில் கோயில் கொண்டிருந்த சங்கரநாராயணரையும் , நாராயணி அம்பாளையும் வழிபட்டு மகிழ்ந்தார். இங்கனம்,சனிபகவான்.(Sani bhagavan ) தங்கி வழிபட்டதால் சனீஸ்வர வாசல் என்ற திருப்பெயர் கிடைத்தது.

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்

 இந்த தலத்தின் பெருமையை சொல்லும் இன்னொரு கதையும் உண்டு காசியின் ராணியான சம்யுக்தை  என்பவளின் பணிப் பெண்ணாக இருந்தவள் மந்திரை . இவள் மகத நாட்டு இளவரசனான சுதாங்ககனைக்  காதலித்து வந்தாள் . ஒருநாள் ராணியும் அரசனும் அந்தபுரத்தில் தனித்திருந்த வேளையில் அவர்களின் அனுமதி இல்லாமல் நுழைந்துவிட்டால் மந்திரை.

 இதனால் கோபம் கொண்ட ராணி ஆயுள் முழுக்க நீ கன்னியாகவே திகழ்வாய்   என்று மந்திரையை  சபித்து விட்டாள். இதனால் பெரிதும் வருந்திய மந்திரை ,சுதாங்கனை அழைத்துக்கொண்டு சாப விமோசனம் தேடி அலைந்தாள். அப்போது அவர்களுக்கு தீர்வு சொல்வதாக  சொல்லி அழைத்துச் சென்று தருணம் வாய்த்த போது இருவரையும் விழுங்கி விட்டான் அசுரன் ஒருவன். அவன் வயிற்றுக்குள் சென்ற இருவரும் பைரவ மூர்த்தியால் அசுரனின்  பெரு வயிறு கிழிக்கப்பட்டு வெளியேறினர் என்கிறது புராணம்…..

அவர்களிடம் சனீஸ்வர வாசலாகிய காரையூர்(karaiyur)  தளத்தில் விருத்தகங்காவில்  நீராடி சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதுடன்  அந்தத் தலத்தில் அருளும் அம்மையப்பனை வணங்கினால் விமோசனம் கிடைக்கும் என்று அருளினார் பைரவர்.

 அதன்படி அவர்கள் இருவரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்து நலம் பெற்றனர்.

 தேய்பிறை அஷ்டமியில் 

அவர்களுக்கு திருவருள்  புரிந்ததோடுதானும்  இத்தலத்தில் எழுந்தருளிய பைரவ மூர்த்தி, சனீஸ்வரரின் சந்நிதிக்கு அருகில் மேற்கு முகமாக தனி சந்நிதி கொண்டிருக்கிறார். இவர் உலக வாழ்க்கையில் மனிதர்களின் நிலை பற்றி உபதேசிப்பதாக ஐதிகம்.

 வாரணாசியில் கங்கையில் பைரவரும், சிவனும், அம்பிகையும் அருள்வது போல் இங்கேயும் சுவாமி -அம்பாள் ஆகியோருடன் பைரவரும் அருள்பாலிப்பதால் காசி புண்ணியம் இங்கு கிடைக்கும்.

 தேய்பிறை அஷ்டமி தினத்தில் செவ்வரளி மலரால்  இந்த பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் வறுமை நீங்கும், பொருளாதார நிலை உயரும் என்பது நம்பிக்கை.

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்

மாங்கல்ய தோஷம் 

 சனிக்கிழமையை அல்லது ஜென்ம நட்சத்திர நாளில் காலையில் இந்த தளத்துக்கு வந்து தீர்த்த நீராடி ,நீலவண்ண கரையிடப்பட்ட வஸ்திரத்தை வேதம் அறிந்தவர்களுக்கு  தானம் செய்வதுடன் , நீலமலர்கள் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து எள் அன்னம் படைத்து வழிபட்டால் மாங்கல்ய தோஷங்கள் விலகும்.

ஆயுள் பலம் பெற 

 சனி கிரக பாதிப்பு ஆயுள் பங்கம் இருந்தால் இங்கு வந்து சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து  எள் முடிப்பு தீபம் ஏற்றி. சனி கவசம்  படித்து வணங்கினால் ஆயுள் பலம் நீடிக்கும். மேலும் எள் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபடுவதுடன் சுவாமி அம்பாளுடன் பைரவரை வழிபட்டால் தொழில் யோகம் சித்திக்கும் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

12 சனி பெயர்ச்சி திருத்தலங்கள் -சனீஸ்வர வாசல்-காரையூர்

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்!!!

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்

அஸ்வினி(Ashwini) 

முதல் நட்சத்திரங்கள்  பாதத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு இன்னல்களும், பொருள் நஷ்டமும் உண்டாகும். அதற்கு சொர்ண தானமளிக்க வேண்டும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. இதற்கு வஸ்திர தானம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம்.

 பரணி(Bharani) 

முதல் பாதம் தோஷம் இல்லை. இரண்டாவது பாதத்தில் பிறந்தால் தோஷம் உண்டு. மூன்றாவது பாதம் மிகுந்த துன்பத்தைத் தரும். 4ஆம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்தால் தாயாரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும்.  இதற்கு சாந்தியாகத்  துர்க்கை அல்லது காளிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். பொன்  அல்லது எருமை தானம் அளிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர்  பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபட்டால் வளம் பெருகும்.

 கிருத்திகை(Kiruthigai)

முதல் இரண்டு பாதங்கள் தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தால் பெற்றோர்களுக்கு இன்னல்களும், இடையூறுகளும் உண்டாகும். இதற்க்கு  ஆடு தானம் சிறந்தது . சூரிய ஆராதனையும், திருவண்ணாமலையில் உள்ள அக்னி லிங்கம் வழிபாடுகளும் மன அமைதியையும், பொருள் வளமையையும் தரும்.

 ரோகிணி(Rohini) 

முதற்பாகம்  அக்குழந்தைக்கும், தாய் மாமனுக்கும், இரண்டாம் பாதம்  தந்தைக்கும் , மூன்றாம் பாதம் தாயாருக்கும் தோஷம் விளைவிக்கும். நான்காம் பாதம் சாதாரணமானது எனினும் நான்காம் பாதத்திற்கு தோஷம் உள்ளது. அத்துடன் தாய்மாமனுக்கு கண்டம் என நூல்கள் விலக்குகின்றன. எனவே அவரவர் சக்திக்கேற்ப சாந்தி ஹோமங்கள் செய்வதுடன், வெள்ளியை தானம் அளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் திருவருணை  கோவிலில் பிரம்ம தீர்த்தம் எதிரில் உள்ள பிரம்ம லிங்கத்தை வழிபட்டு வந்தால் திரண்ட செல்வமும்,நிறைந்த ஞானமும் பெறலாம்.

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்

 மிருகசீரிடம்(Mirugaseeredam) 

நான்கு பாதங்களும் தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து சந்திரனை  வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். திங்களூர்  சென்று வழிபட்டால் தீராத குறைகளெல்லாம் தீரும்.

 திருவாதிரை(Thiruvathirai)

முதல் 3 பாதங்களும் தோஷமற்றது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகை வரையில் தாயாருக்கு கண்டம். இதற்கு பசு நெய் தானம் அளித்திட வேண்டும். செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் விஷ்ணு ஸகஸ்ர நாமம், ருத்ர ஜபம் செய்து வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

 புனர்பூசம்(Punarpoosam)

4 பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய ஆராதனை செய்வது சாலச்சிறந்தது.திருவண்ணாமலையில் உள்ள சூரிய லிங்க ஆராதனை மிகவும் புகழையும், பொருளையும் வழங்கும்.

 பூசம்(Poosam)

முதற்பாகம் தாய் மாமனுக்கும், இரண்டாம் பாதம் ,மற்றும் மூன்றாம் பாதம் பெற்றோர்களுக்கும் துன்பம், நான்காம் பாதம் தோஷமற்றது. இரண்டாம் பாதமும்  கடக லக்னமும் கூடிய ஆண் குழந்தை தந்தைக்கு கண்டத்தை உண்டாக்கும். இரவு நேரங்களில் பிறந்த பெண்குழந்தையால்  தாயாருக்கு கெடுதி. இதற்கு பரிகாரமாக பசுவை தானம் செய்தல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியையோ , ஹயக்ரீவரையோ வழிபட்டு வருவது சிறந்ததாகும்.

 ஆயில்யம்(Ayilyam)

முதற்பாகம் சாதாரணமானது. இரண்டாம் பாதம் அக்குழந்தைக்கும், தந்தைக்கும் தோஷம். மூன்றாவது பாதம் தாயாருக்கு கெடுதி. நான்காம் பாதம் அக் குழந்தைக்கும், தந்தைக்கும் துன்பத்தைத் தரும். இதற்கு கிரக சாந்திகள் ,ஜபம், தானங்கள் அவசியம் செய்திடல் வேண்டும்.

நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்வதும், ஏழை எளியவர்களுக்கு வஸ்திரம், அன்னதானம் செய்வதும் மிகவும் அவசியம்.இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் சர்பேஸ்வரனை வணங்குவது நல்ல பலன்களைத் தரும். ஸ்ரீகாளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது சிறந்தது.

மகம்(Magam) 

முதல் பாகம், குழந்தையின் தந்தைக்கு தன நஷ்டத்தை, குழந்தை பிறந்து ஐந்து மாதம் வரை உண்டாக்கும். ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனைகள், கிரக சாந்திகள், தானங்கள் செய்திடலாம். 2 மற்றும் நான்காம் பாதம் சிறிதளவு தோஷம் உள்ளது.

மூன்றாவது பாதத்தில் குழந்தை ஆண் என்றால் தந்தைக்கும், பெண் என்றால் தாயாருக்கும் தோஷத்தை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் பித்ரு தேவதைகளை வழுவாது ஆராதனை செய்வது. திருக்கடையூர் ,ஸ்ரீவாஞ்சியம், திருமீச்சூர், திருப்பைஞ்சீலி ஆகிய திருத்தல வழிபாடுகளும் பெறும் நன்மை அளிக்கும்.

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்

பூரம்(Pooram)

4 பாதங்களும் சிறிதளவு தோஷம் உள்ளது. இதற்கு பரிகாரமாக ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் ஆதித்ய ஹ்ருத்யம்  நாள்தோறும் படிப்பது, சூரியனை வழிபடுவது நன்மையாகும்.

 உத்திரம்(Uthiram)

முதற்பாகம்  முதல் இரண்டு நாழிகைக்குள் பிறந்த குழந்தை  ஆண் என்றால் தந்தைக்கும் ,பெண் என்றால் தாயாருக்கும் தோஷம் உண்டாகும். இது இரண்டு மாதத்திற்குண்டு. மற்றும் மூன்றாம் பாதம் சாதாரணமானது. நான்காம் பாதம் தந்தையின் சகோதரர்களுக்கு தோஷம் உண்டு பண்ணும். இதற்கு பரிகாரமாக தைல (எண்ணெய் )  தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தை சார்ந்தவர்களுக்கும்  12 ஆதித்யர்தனை சேர்ந்த ஆர்யமன் என்னும் சூரியனை வழிபடல்  வேண்டும் .

 அஸ்தம்(Hastham)

1,2 மற்றும் நான்காம் பாதம் தோஷமற்றது. மூன்றாம் பாதத்தில் முதல் நான்கு நாழிகைக்குள் ஆண்  என்றால்  தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமுண்டு. இது ஒன்பது மாதங்கள் நீடிக்கும்.

இந்த தோஷத்த்தை  ஸ்ரீ வர்ணம்  என்று கூறப்படும்.பொன்  தானத்தால் நீக்கிக்கொள்ள முடியும். ஆதித்ய ஹ்ருதயம் , தினமும் சூரிய வழிபாடு மேற்கொள்ள எல்லா நன்மைகளும் விளையும்.

 சித்திரை(Chithirai)

முதல் மூன்று பாதங்கள் தாயாருக்கும், தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் தோஷம் உண்டாகும். இரண்டாம் பாதத்தில் முதல் ஆறு நாழிகைக்குள் என்றால் குழந்தையின் தாய்க்கு மிகவும் தோஷம். முதலிரண்டு பாதங்களுக்கு உரிய  கன்னிராசியில் பகலில் பிறக்கும் ஆண் குழந்தையால் தந்தைக்கும் ,பெண் குழந்தைகள் தாயாருக்கும் தோஷம் உண்டாகும். இது பிறந்த ஆறு மாத காலத்திற்கு நீடிக்கும்.

நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தை தந்தைக்கு துயரத்தை உண்டாக்கும் . வஸ்திரதானம் ஏற்ற பரிகாரம் ஆகும்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்திரன் வழிபட வேண்டும்.

திருவண்ணாமலையில் கிழக்கு திசையிலுள்ள  அஷ்ட லிங்கங்களில் முதல் லிங்கமான இந்திர லிங்கம் வழிபாடு செல்வாக்கும், செல்வம் ,பதவி உயர்வு தரும்.

சுவாதி(Swathi)

நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு தேவனை வணங்குதல் நன்று.  அருணையிலுள்ள  வாயு லிங்கம் வழிபாடு சாலச்சிறந்தது. திருமகளையும் வணங்குவது ஏற்றது.

 விசாகம்(Visaham)

4ஆம் பாதம் தோஷம். மற்றும் பாதங்கள் தோஷமில்லை. 4ஆம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் முதல் குழந்தையாக இருப்பின் தாயாருக்கு கண்டம் என்று கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற சுப்பிரமணிய சாமிக்குரிய  நாட்களில் செந்நிற ஆடை ,சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தானிய தானங்கள் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்

 அனுஷம்(Anusam) 

தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ரா எனும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சூரியனை வழிபடல் வேண்டும்.

வருணனையும், திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருண லிங்கத்தையும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

 கேட்டை(Kettai) 

4 பாதங்களும் தோஷத்தை தருவன. முதல் பாதத்தில் பிறந்தது  ஆண் குழந்தையாயின்   மூத்த சகோதரனுக்கும், பெண்ணென்றால் மூத்த சகோதரிக்கும், இரண்டாம் பாதம் மற்ற சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும், மூன்றாம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும்.

பசு  அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவேந்திரனை வழிபடல் வேண்டும் .

இந்த நட்சத்திர பெண்கள் திருமண தடை நீங்க தூய வெண்மையான மலர்கொண்டு தேவேந்திரனை மனதில்  தியானித்து வழிபாடு செய்தல் நல்ல கணவர் அமைவார்.அருணையிலுள்ள இந்திராலிங்க பூஜையும் மிகவும் சிறந்த பலன்களை  தரும் .

  மூலம்(Moolam)

முதல் பாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம். பெண் குழந்தையாயின்  கால்நடைகள் நஷ்டமாகும். இரண்டாம் பாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அதன் தாய்க்கு துன்பம்.ஆண்  குழந்தையால் பொருள் நஷ்டம் அதன் சகோதர்களுக்கு துன்பம் ஏற்படும்.

3ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கு நஷ்டம். மூன்றாம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும் மாலை  பொழுதில்  பிறந்தால் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவில் பிறந்தால் தாய்க்கும், உதய வேளை  அல்லது காலை எனில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தீங்காகும்

எப்பாதத்தில் பிறந்திருப்பினும்  ருத்ராபிஷேகம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரகஸ்பதியை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.

 பூராடம்(Pooradam) 

1,2 மற்றும் 4-ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் என்றால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமாகும்.

இத்தோஷம் எட்டாம் மாதம் வரையில் இருக்கும், தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும் , நடு இரவிலும் புத்ர  ஜனனம் ஆனது அதன் தந்தைக்கும் மற்றும் சிசுவிற்கும் பெரும் தோஷமாகும்.

நவக்கிரகம் மற்றும் நட்சத்திர ஹோமம் செய்வதும், புனித கங்கை நீரினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர்.

திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருண லிங்கத்தை வழிபட்டால் ,நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பவுர்ணமி விரதம் ஏற்றது , தேங்காய், நெய் தீப வழிபாடு சாலச்சிறந்தது.

 உத்திராடம்(Uthiradam)

 4 பாதங்களும் தோஷமில்லை. எனினும் செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் விஷ கன்னியா  யோகம் உண்டாகும். அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையூறுகள் உண்டாகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வ தேவதைகளையும், விநாயகரையும் வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பெறலாம். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ,திருப்பாதிரிப்புலியூர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை  கணபதி ஆகியோரின் வழிபாடு சிறப்பைத்தரும்.

 திருவோணம்(Thiruvonam) 

தோஷமில்லை இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் பொன்னும், பொருளும் கிடைக்கும். சிரவண  விரதம் மேற்கொண்டு திருவேங்கடமுடையான் ஆராதித்து, லக்ஷ்மி குபேர திருவுருவப் படத்தை- குபேர யந்திரம்- மந்திரம் கொண்டு பூஜித்து, திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேர லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள். இவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்

 அவிட்டம்(Avittam) 

தோஷமற்றது  .இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்டஸீக்களை   ஆராதிக்க வேண்டும். பித்ரு முக்தி ஸ்தலங்களில்  இராமேஸ்வரம், காசி, கயை,  லால்குடி அருகிலுள்ள பூவலூர் ஆகிய ஊர்களில் உள்ள இறை மூர்த்திகளை ஆராதனை செய்வது மிகுந்த நன்மை தரும்.

சதயம்(Sathayam) 

தோஷம் இல்லாதது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில்  எழுந்தருளியுள்ள ஸ்ரீ மேகநாதரையோ திருவனையில் உள்ள வருண லிங்கத்தை வழிபட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பம் அடைவர்.

 பூரட்டாதி(Pooratathi) 

முதல் மூன்று பாதங்கள் சிறிதளவு தோஷம்  உள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்தால் தாய்க்கு கண்டம் அதுவும் முதல் குழந்தை எனில் தோஷம் அதிகம். பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறக்க லட்சுமி குபேர பூஜையை மேற்கொள்ளவேண்டும்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கதையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலட்சுமி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது.

 உத்திரட்டாதி(Uthiratathi)

தோஷமற்றது இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் காமதேனுவை பூஜித்தாலும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் வழிபட்டாலும் நல்லவை எல்லாம் இடையூறின்றி வெற்றியுடன் நடைபெறும்.

 ரேவதி(Revathi)

முதல் மூன்று மாதத்தில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டாகும். நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு தோஷம் உண்டு. மூன்று மாதம் இருக்கும் இந்த தோஷம் விலக  பொன்னாலான பசு உருவம் மற்றும் பசு நெய்  தானமளிக்க வேண்டும்.

 12 ஆதியர்களின்  ஒருவரான பூஷர் என்பவரையோ,சூரியனார் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சூரிய நாராயண மூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தை வழிபட்டால் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம்.

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -2020-2023-ரிஷபம்

 சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள்-ரிஷபம் 

பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் ரிஷப  அன்பர்களே !!!!
 
சனி(Sani) பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை 9 வது  வீட்டில் அமர்ந்து நல்லதை செய்ய போகிறார்.
 
 • சகோதர -சகோதரிகள் உங்கள்  அருமையை புரிந்து கொள்வார்கள் 
 • தன்மானத்துடன் கம்பீரமாக செயல்படுவீர்கள் 
 • கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும் 
 • மற்றவர்களுக்கு  உதாரணமாக வாழ தொடங்குவீர்கள் 
 • தள்ளி போய்க்கொண்டிருந்த திருமணம் நல்ல இடத்தில முடியும் 
 • சொந்த வீடு கனவு நிஜமாகும் 
 • அனாவசிய செலவுகள் வந்து நீங்கும்   

சனி பகவானின் பார்வை 

சனி(Sani)பகவான் உங்களின் 3 ம் வீட்டை பார்ப்பதால் 
 • திட்டமிட்ட காரியங்கள் கைகூடும் 
 • தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் 
 • அரசால் அனுகூலம் உண்டு 
 • வீடு ,வாகன வசதி பெருகும்.  

சனி(Sani) பகவான் உங்களின் 6 ம் வீட்டை பார்ப்பதால் 

 • துடிப்புடன் செயல்படுவீர்கள் 
 • மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள் 
 • புது சொத்து சேரும் 
 • நிலுவையில் இருந்த வழக்கு வெற்றி அடையும் ..   
சனி(Sani)பகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் சாதுரியமாக பேசி சாதிப்பீர்கள் ..எதிர்பாராத பணவரவு உண்டு 
 
 • இல்லத்தரசிகளே !அஷ்டமத்து சனி விலகுவதால் உங்களின் மனக்கவையாவும் நீங்கும் 
 • வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு பணியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்
 •  வியாபாரிகளுக்கு கடன் பிரச்சனை மெல்ல மெல்ல விலகும்
 • கணினி துறையினர்க்கு நல்ல சம்பளத்துடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்   

பரிகாரம் :

பிள்ளையார் பெருமானை சிக்கென்று பிடித்து கொள்ளு ங்கள் .சதுர்த்தி தினங்களில் அவரை தரிசிப்பதும் வழிபடுவதும் நன்று .முடிந்தால் ஒருமுறை திருநள்ளார்  சென்று தர்பாரண்யேஸ்வரரையும் சனி பகவானையும் தரிசித்து வாருங்கள் ..இன்னல்கள் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் …
சனி பெயர்ச்சி பலன்கள்

கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் தரும் கிரக நிலைகள்

கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் தரும் கிரக நிலைகள்!!! 

கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகத்தை பெற்று மகிழ்வோடு வாழ அதற்குரிய கிரகநிலைகள் எப்படி இருக்க வேண்டும் சற்று ஆராய சற்று ஆராய்வோம்..

 •  ஒருவர் ஜாதகத்தில் 2-ம் அதிபதியுடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும்.
 •  ஒருவரின் ஜாதகத்தில் 4ம் அதிபதியுடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் ஆட்சி ,உச்சம் பெற்று சுபர்களின் தொடர்பும் இருந்துவிட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும்.
 •  ஜாதகத்தில் 9ஆம் அதிபதி பலம் பெற்று அவருடன் லக்னாதிபதியும் குருபகவான் இணைந்துவிட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும்.
 •  ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3, 6, 9, 10, 11 இல் செவ்வாய் நின்று அவரை 9-ம் அதிபதி பார்த்துவிட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும்.
 •  ஒருவரின் ஜாதகத்தில் குருவும் செவ்வாயும் இணைந்து 3, 6, 9, 10, 11 இல் நின்று இருவரில் ஒருவர் அல்லது இருவரும் பலம் ஆனாலும் அவருடன் 9-9-ம் அதிபதி சம்பந்தப்பட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற அதிகார உத்தியோகம் கிடைக்கும்..

உத்தியோகம் தரும் கிரக நிலைகள்

இனி ஒருவரின் ஜாதகத்தில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாமல் மனக் கசப்புடன் மாற்று உத்தியோகம் பார்ப்பதற்கு உரிய கிரக நிலைகளை காண்போம்.

 •  ஒருவரின் ஜாதகத்தில்  2-ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்து அவருக்கு 9-ம் அதிபதியின் தொடர்பு இல்லை எனில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
 ஜாதகத்தில் 4-ம் அதிபதி 6,8,12 ல் பலவீனமடைந்து  9-ம் அதிபதியின் தொடர்பு இல்லை எனில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது.
 •  ஒருவரின் ஜாதகத்தில் 9-ம் அதிபதி 6,8,12 நீசம், அஸ்தங்கம், வக்கிரம் பெற்று இருந்தாலும் லக்னாதிபதி தொடர்பு இல்லை எனில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
 •  ஒருவரின் ஜாதகத்தில் 9ஆம் வீட்டில் திதி, சூனியம் அடைந்த கிரகம் நின்றாலும் அல்லது 9-ம் அதிபதி குருவுடன் கூடி திதி, சூன்ய ராசிகள் இருந்தாலும் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
 •  ஒருவரின் ஜாதகத்தில் உத்தியோக காரன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவான் லக்னத்திற்கு ஒன்பதிலிருந்து அந்த வீடு சூனிய ராசியாக வந்தாலும் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது.
 •  ஒருவர் சஷ்டி,நவமி, தசமி திதியில் பிறந்து அவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு சூரியன் அல்லது செவ்வாய் பகவான் இருந்தாலும் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது
 • ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதியும் 9-ம் அதிபதியும் இணைந்து இருவரில் ஒருவர் பலவீனமடைந்து 6 ,8, 12 ல் மறைந்தால் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
 •  ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9-ம் அதிபதியும் ராசிக்கு 9-ம் அதிபதியும் இணைந்து லக்னத்திற்கும் ராசிக்கும் 6,8,12 பலவீனம் அடைந்தால் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது…
 • ஒருவரின் ஜாதகத்தில் 9-ம் அதிபதி இருந்த வீட்டோன் லக்னத்திற்கு 6, 8, 12ல் மறைந்து பலவீனமானளும் அவர் ராசிக்கும்  மறைந்தாலும் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
 •  ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 9-ம் வீட்டில் அமர்ந்து 9-ம் அதிபதி 6,8,12ல்  நீசம், அஸ்தங்கம், வக்கிரம் அடைந்து சுபர் பாராவில் தான் கற்ற கல்வி ஏற்ற உத்தியோகம் அமையாது ..
 • ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டு அதிபதி லக்னத்தில் அமர்ந்து லக்னாதிபதி 6, 8, 12ல் வீட்டில் நீசம் ,அஸ்தங்கம், வக்கிரம் பெற்று சுபர் பாராவில் வாய்ப்புகள் நிறைய வந்தாலும் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
 •  ஒருவர் ஜாதகத்தில் 9ஆம் அதிபதியும் குரு பகவானும்  இணைந்து  6, 8, 12ல் மறைந்து இருவரில் ஒருவர் அல்லது இருவருமே பலவீனமடைந்து அவர்களை சுபர்  பாராவிடில்  தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது
 •  ஒருவரின் ஜாதகத்தில் 9ஆம் வீட்டில் ஜென்ம சத்துருக்கள் அமர்ந்து ஒன்பதாம் அதிபதி 6, 8, 12ல் மறைந்து 9ஆம் அதிபதி சுபக் கிரகங்கள் பாராவிடில்  தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..

உத்தியோகம் தரும் கிரக நிலைகள்

 •  ஒருவரின் ஜாதகத்தில் 9ம் அதிபதியுடன் அஷ்டமாதிபதி சம்பந்தப்பட்ட இருவரும் 6 ,12 அல்லது எட்டில் அமர்ந்து விட்டால் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்த் யோகம் அமையாது. அப்படியே அமைந்தாலும் நிலைக்காது பதவி இழப்பு, பதவியால் அவமானம் ஏற்படுதல் போன்றவை சந்தித்தாக வேண்டும்..
 •  ஒருவரின் ஜாதகத்தில் 9ம் அதிபதியுடன்ஆரோன்  சம்பந்தப்பட்டால் இருவரும் இணைந்து 6, 8, 12ல் மறைந்தாலும் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது. மேலும் பணியில் வழக்கு பழிச்சொல் வரும்.
 •  ஒருவரின் ஜாதகத்தில் 9ம் அதிபதியுடன் பன்னிரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் 6, 8, 12ல் மறைந்து விட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது. விருப்பமில்லாத துறையில் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் என பணிபுரிய நேரிடும் அடிக்கடி பணி மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்..
 •  குறிப்பாக ஒருவரின் ஜாதகத்தில் 1,2,4,9 ஆம் அதிபதிகள் பலம் பெற்று குருவின் தொடர்பும் இருந்து விட்டால் அவர்கள் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் பார்க்க முடிகிறது என்பது மறுப்பில்லா  உண்மையாகும்.
 அதேநேரத்தில் லக்னாதிபதியும் 2 ,10ம் அதிபதியும் இணைந்து 11ஆம் அதிபதியும் தொடர்பும் கிடைத்துவிட்டால் இவர்களுக்கு ஒன்பதாம் அதிபதியின் தொடர்பு இல்லை என்றாலும் கூட கற்ற கல்விக்கு மாறான துறைகளில் ஈடுபட்டு பல கோடிகளை சம்பாதிக்கிறார்கள் என்பது அனுபவம் உணர்த்தும் ஆதார உண்மையாகும்….