மிருகசீரிஷம் நட்சத்திரம்
நட்சத்திரத்தின் ராசி – ரிஷபம், மிதுனம்.
நட்சத்திர அதிபதி- செவ்வாய்.
நட்சத்திர நாம எழுத்துகள் :வே-வோ-கா-கி
கணம் :தேவ கணம்
மிருகம் :பெண்சாரை
பட்சி : கோழி
மரம் :கருங்காலி
நாடி :மத்திய பார்சுவ நாடி
ரஜ்ஜு :சிரசு (தலை)
அதி தெய்வம் :சந்திரன்
மிருகசீரிஷம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்:
மிருகத்தின் தலை போன்ற அமைப்பு உள்ளது. வாராகி, அனுமான், விநாயகர், கல்கி நரசிம்மர் போன்ற தெய்வங்களுடனும், கொரியா தொடர்பும் கொண்டது. இந்த ராசிக்காரர்கள் சத்திய சாய்பாபா அருள் உள்ளவர்கள்.மறந்தோம் மன்னித்தோம் என்னும் குணம் உள்ளவர்.
கேலி பேசுவார், மடத்தனமாய் தியாகம் செய்வார். சிலர் ஏளனத்துக்கு ஆளாவார். தனக்குத் தானே பேசிக் கொள்ளும் இவர் குடும்பத்தை விட பிறருக்கே ஆதரவாக இருப்பார். கலப்பு மணம், பிறர் அழகை ரசிப்பது தவறல்ல என்னும் கொள்கை உள்ளவர்.
இவர் கணவர்/மனைவி இருபாலருக்கும் பலமாய் பலவீனமாய் இருப்பார். மருத்துவராகும் கனவு பலிக்காது. புகுந்த வீட்டில் வேலைக்காரி போல் வேலை செய்வார். குடும்ப பொறுப்பு உண்டு.
உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவர்கள்.மற்றவர்களுக்கு மரியாதை மற்றும் பண்போடு பழக கூடியவர்கள்.நல்ல பேச்சு திறமை உடயவர்கள்.கொஞ்சம் கர்வம் மற்றும் திமிரும் உடயவர்கள்.உறுதியான உடல் அமைப்பை உடயவர்கள்.இரகசியங்களை பாதுகாப்பவர்கள்.தீர்மான அறிவினை உடையவர்கள்.தாய் மற்றும் தந்தை மீது பாசம் கொண்டவர்கள் .
மிருகசீரிஷம் நட்சத்திரம் முதல் பாதம்
மன பலம் உள்ளவர்கள்.கல்வியில் ஓரளவு விருப்பம் உள்ளவர்கள்.கலைகள் மூலம் லாபம் அடைய கூடியவர்கள்.தன்னம்பிக்கை, துணிச்சல் உள்ளவர்கள்.எல்லாம் தெரியும் என்ற கர்வம் உடையவர்கள்.
மிருகசீரிஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்
புத்திசாலித்தனம் உடையவர்கள்.இரக்க குணம் கொண்டவர்கள்.திட்டமிட்டு செயலாற்றுபவர்கள்.சொன்னதை செய்ய கூடியவர்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்
ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவர்கள்.உத்தம குணங்களை கொண்டவர்கள்.வசீகரமான தோற்றம் கொண்டவர்கள்.
மிருகசீரிஷம் நட்சத்திரம் நான்காம் பாதம்
முடிவுகளை விரைவில் எடுக்க கூடியவர்கள்.வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்.பிடிவாத குணத்துடன் நெஞ்சில் அழுத்தம் கொண்டவர்கள்.தானாகவே பிரச்சினைகளை உருவாக்கி கொள்ள கூடியவர்கள்..