வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய பெருமாள் கோவில்:
புகழ் பெற்ற பெருமாள் கோயில்களில் ஒன்றான 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஆலயமாக போற்றப்படும் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பல்வேறு சிறப்புகள் உள்ளன ..
வைணவத்தை போற்றி வளர்த்தவர்களில் 12 ஆழ்வார்கள் முக்கியமானவர்கள்
அவர்களில் 11 ஆழ்வார்களில் மங்களாசாசனம் செய்ய பட்ட ஒரே திருத்தலம் ஆகும்.
இந்த ஆலயத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் உள்ளது.

இதன் உயரம் 230 அடி ஆகும் .இந்த ராஜ கோபுரம் 13 நிலைகளுடன் 13 கவசங்களை கொண்டு வடிவமைக்க பட்டது.
இந்த ஆலயத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாத பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாத பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள் .வேறு எந்த கோவிலிலும் இது போன்று செய்வதில்லை …