Friday, July 26, 2024
Homeகோவில் ரகசியங்கள்அதிசயங்கள் நிறைந்த பழனி முருகன் கோவில்!!!!

அதிசயங்கள் நிறைந்த பழனி முருகன் கோவில்!!!!

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பழனி முருகன் கோவில்
பழனி மலை முருகன் அதிசய தகவல்கள்: 

❤முருக பெருமானின் அறு படை வீடுகளில் 3-வது படை வீடு,வீடும் ,ஆண்டி கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் அதிசயங்கள்.

❤தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய்,பஞ்சாமிர்தம்,சந்தன்ம்,விபூதி)மட்டும்தான் உபயோகிக்கபடுகிறது.

❤மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகபடுத்தபடுகிறது.
இவைகளில் சந்தனம் பன்னீர் தவிர மற்ற எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை)வைத்து, உடனே அகற்ற படுகிறது. அதாவது ,முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும்தான் .இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

❤ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷே அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடதிற்குள் முடிந்து விடும்.

❤அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால் ,பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சற்றுவதோ ,பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

❤இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சாற்றப்படுகிறது .

❤விக்ரகத்தில் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்க படும் .முன்பு சந்தன காப்பை முகத்திலும் சாற்றிக்கொண்டு இருந்தனர்.பிறகு இந்த முறை மாற்ற பட்டது.

பழனி முருகன் கோவில்

❤விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும் .ஆதலால் இரவு முழுவதும் ,அந்த விகரகத்லிருந்து நீர் வெளிப்படும் .இந்த நீரை அபிஷேக தீர்தத்துடன் கலந்து ,காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருக்கிறார்கள்.

❤தண்டாயுதபாணி சிலையில் ,நெற்றியில் ருத்ராட்சம், கண், மூக்கு, வாய்,தோள் ,கை, விரல்கள், போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்க பட்டது போல் தெளிவாக இருக்கும்.

❤இது போகரின் கைவண்ணம்
அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒருவிதவமான சுகந்த மனம் (இதுவரை ஒருபோதும் வெளியே உணர்ந்திராத )பரவி நிற்கும்.

❤இந்த சிலையை போகர் செய்து முடிக்க 9 வருடங்கள் ஆகியது.
அம்பாள் ,முருகர்,அகத்தியர் இவர்களுடைய உத்தரவிற்கு  பின்புதான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்ததாகவும் ,இதற்கு 4000க்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து ,81சித்தார்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தனர்.
போகர்,இக பரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ,முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார் .இதனால் ,மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குலதெய்வம் ஆனார்.

❤கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சேதமடைந்து போனாலும் ,நவ்பாஷானத்தில் சிலை செய்த இந்த கோவில்  இன்றளவும் பிரசித்தி பெற்று இருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமைதான்.

❤தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது .அவரை தரிசிக்க வலது பக்கமாக சென்று ,தீபம் காட்டுதல் வேண்டும் .ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.

❤பழனியில் 2 மரகத லிங்கம் உள்ளது .ஒன்று முருகர் சன்னதியில்.இன்னொன்று போகர் சமாதியின் மேல் உள்ளது .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது….

முக்கிய தகவல் 

பழனி முருகன் கோவில் தொலைபேசி எண் மற்றும் இருப்பிடம் ,நடை திறக்கும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள அரசு இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்

https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/eservices_search.php?activity=eservices&tid=32203

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular