Tuesday, May 21, 2024
Homeஜோதிட குறிப்புகள்பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

மேஷ லக்ன பெண்கள்

பயமில்லாதவள்.உண்மையை உரைப்பவள்.நன்நீதியுள்ளவள்.சற்று சனவிரோதம் எப்போதும் குரோதத்தோடு கூடியவள்.கடுமையான வார்த்தைகளை சொல்லுவாள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் லக்னத்திற்கு குரு பார்வை இருந்தால் வக்கீல் தொழில் ஒத்துவரும். நீதிபதியாக கூட உருவாகலாம். கை அமைப்பில் விதி ரேகை புத்தி ரேகையில் உருவாகி மேல்நோக்கி குருமேட்டை அடைந்தாலும் சூரியன் மேட்டை அடைந்தாலும் வாதாடும் திறன் மேலோங்கும். நுரையீரல் மற்றும் இருதயத்தில் தொந்தரவு வரலாம். லக்னத்திற்கு 10-ல் சனி பகவான் இருந்தால் கிரிமினல் லாயராக புகழ் சேர்க்கலாம்.

ரிஷப லக்ன பெண்கள்

அதிக உறவினர்களை கொண்டவள்.இழிவான சொற்களை பேசுவாள்.நீதி அறிந்தவள்.புருஷனுக்கு பிரியமானவள்நற்புத்தியோடு கூடியவள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் கணவரிடம் மிக அன்பாகவும், பாச உணர்வோடும் இருப்பார்கள். முகம் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் பிறந்தாலும் வசீகரமாக இருப்பார்கள். பட்டப்படிப்பில் கணக்கு பாடங்களில் கவனம் செலுத்தினால் ஆடிட்டர் என்ற பெருமை சேர்க்கலாம். புத்திர பாக்கியம் உண்டு. நன்றி மறவாத குணம் மேலோங்கும். சனி பகவான் ஜாதகத்தில் சீராக நல்ல இடத்தில் அமர்ந்து கொண்டால் இரட்டிப்பு பலன் பெறலாம். ரேகை சாஸ்திரத்தில் சுக்கிர மேடு வலுப்பெற்றால் நற்பலன்களை சுலபமாக அனுபவிக்கலாம்

மிதுன லக்ன பெண்கள்

கோபி,மனதில் கொஞ்சமேனும் பயமில்லதவள்.முதலில் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு களத்திர தோஷம் உண்டு. பேச்சில் இனிமையும், கடினமும் காணப்படும். ஆண் சந்ததி குறைவாகும். பெண் வாரிசு அதிகமாகலாம். ஆஸ்துமா, சிறுநீர்கள் தொற்றுகள் போன்ற தொல்லைகள் வரும். இவர்களுடைய உள்ளங்கையில் மத்திம பாகம் ரேகை உதயமாகி ஆயுள் ரேகை கடந்து இருதய ரேகையில் முற்றுப்பெற்றால் வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தல் நன்று. சுண்டுவிரலில் கீழ்பாகம் திருமண ரேகை இறுதியில் இரண்டாகப் பிரிந்தால் மண முறிவு ஏற்படலாம்.

கடக லக்ன பெண்கள்

பொறுமை குணம் கொண்டவள். உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரியமானவர்கள்.சந்திரனை போல காந்தியுள்ள முகமும் குளிர்ந்த வார்த்தையும் நியாயம் அறிந்தவளாவால்.குழந்தை ,புருஷனுக்கு பிரியமும் யோகமும் உள்ளவள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பேச்சின் தோரணை கடுமையாக இருக்கும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஆர்வம் பெருகும். நல்ல திறமை, அழகு, கலையார்வம் மிகும். பெரும் பதவிகள் தேடி வரும். வருமானத் தடை இல்லை.சுக்கிரனின் நிலை வலுப்பெற்றால் பலனின் தன்மை மாறுபடும். சந்திர மேடு, சுக்கிர மேடு வலுவாகி சூரியரேகை காணப்பட்டால் சினிமா, சின்னத்திரையில் ஆர்வம் மிகுதியாகும்.

சிம்ம லக்ன பெண்கள்

அதிக கோபம் ,கடினமான சொற்களை பேசுபவள்.கொஞ்சம் அழகானவள்.கலகம் செய்வதில் அதிக விருப்பம் உடையவள்.செய் நன்றி மறவாதவள்.வித்தை கற்று புருஷனுடன் சுகம் அனுபவிப்பாள்.பெரியவர்களிடத்தில் பத்தி விசுவாசம் உடையவள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

பெண்கள் பிறந்தது சிம்ம லக்கினமாக இருந்தால், பெண்களின் பேச்சில் கண்டிப்பு தெரிய வரும். கடுமை இருக்கும். கணவரிடம் வாக்குவாதம் வரும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் பெரியவர்களை மதித்து பேசும் ஆற்றல் காணப்படும். ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் காணப்பட்டால் சுப பலன்கள் அதிகமாக கிடைக்கும். செவ்வாய் வலுத்தால் மத்திய வயதுக்கு பின் தகப்பனார் உதவியைப் பெற இயலாது. ஆட்காட்டி விரல், குரு மேடு மேன்மையானால் புகழ்பெற வாழலாம்.

கன்னி லக்ன பெண்கள்

பொருள் செல்வம் நிறைந்தவள். கணவனுக்குயோகம். கல்விபலகற்றவள். கற்பின்நிலைதவறாதவள்.தரும சிந்தனை கொண்டவள்.எல்லோருரிடமும் நல்லவள் என்ற பெயர் எடுப்பாள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நல்ல வசதிகள் கிடைக்கும்.நல்ல கணவரை எதிர்பார்க்கலாம். சமூக உறவு மேலோங்கும். தெய்வ பக்திக்கு குறைய ஏதுமில்லை. அனாதை இல்லம், தர்ம ஸ்தாபனம் அறநிலைத்துறையில் வேலை வாய்ப்பு-இவை போன்றவை நற்பலனை பெற்று தரும். சுக்கிரனும், சுக்கிர மேடும் கெடாமல் இருக்க வேண்டும். சுக்கிர மேட்டில் அனேக சதுரங்கள் காணப்பட்டால் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும்.

துலாம் லக்ன பெண்கள்

அழகில்லாசரீரம்.பசியைதாங்கமாட்டால்.மந்த புத்தி உடையவள். புருஷனுக்கும்,குழந்தைகளுக்கும் தோஷம்.இன்பமான சொற்களை பேசுவாள்.செல்வத்தால் உண்டான அகங்காரம் இருக்கும் .

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் களத்திர தோஷம் உடையவர்களாக இருப்பர். முக வசீகரமும் சாதாரணமாக காணப்படும். நல்ல பாடகராகவும், உபன்யாசம் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்தவராகவும் இருப்பர். சந்தான பாக்கியம் குறைவு. பண விஷயத்தில் யோகக்காரர்கள். வரவு நிறைந்த குடும்பத்தில் ஜனனம் இருக்க பெறும். சூரியன் வலுத்தாலும், சூரிய மேடு நீச்சம் பெற்றாலும் பலனின் தன்மை மாறுபடும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வணங்குதல் நன்று. ஜாதகத்தில் கடகத்தில் சந்திரன் இருக்கப்பெற்றால் 46 வயதுக்கு மேல் அபரிமிதமான யோகம் வரும்.

விருச்சிக லக்ன பெண்கள்

நல்ல குணத்தோடு கூடிய பதிவிரதை. அழகு பொருந்திய கண்களும் சரீரமும் உடையவள்.புண்ணியசாலி புருஷனுக்கு அடங்காதவள்.சாதனை அதிகமாக செய்வாள்.நல்ல குணம்.புத்திர தோஷம் உள்ளவள்.கொடூரமான சொற்களை பேச கூடியவள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கணவருடன் வாக்குவாதம் செய்பவர்கள். அழகு இருக்கும். குரு சீராக ஜாதகத்தில் இருக்க பெற்றால் பைனான்ஸ், அறநிலையத்துறை, மற்றும் வங்கி போன்று பணத்தை வைத்தே பணம் பண்ணும் துறை ஒத்துவரும். புத்திர தோஷம் சிலருக்கு உண்டு. தான் சொல்வது கூறுவது தான் சரியானது என வாதிடுவர்.

தனுசு லக்ன பெண்கள்

வஞ்சையான புத்தி உடையவள். வசீகர முகம் பொருந்தியவள். மை தீட்டிய அழகு கண்ணுலவள். ராஜ யோகத்தை அனுபவிப்பாள்.பலமுள்ள சரீரம் உடையவள்.கருத்துகள் பல பேசுவபவள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பணத்தின் மீது ஆசையும், பூமி பாக்கியமும் உண்டு. சூப்பர்வைஸிங், தலைமை தாங்குதல், ஆலோசனை வழங்குதல், காவல் துறை வேலை உத்தமம். முக வசீகரம் இருக்கும். செவ்வாய், சூரியன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 12 இல் சனி இருந்தால் அசையா சொத்துக்கள் வந்துவிடும்

மகர லக்ன பெண்கள்

மனதில் விசாரமும்,தீர்த்த யாத்திரைசெய்ய பிரியமும் உள்ளவள். பாக்கியமுள்ளவள்.உண்மையை பேசுபவள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செல்வம் குறைந்திருக்கும். ஆண் சந்ததி யோகம் உண்டு. அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு வாசம் உண்டு. வெளிநாட்டு தூதரகங்களிலும் பணி புரியும் வாய்ப்பு வரும். பெற்ற தாய்க்கு இவர்களால் தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடுமையான உழைப்புக்கு சளிப்படையாதவர்கள். செவ்வாய் ஜாதகத்தில் வலுப்பெற்றால் பலன் மாறுபடும். செவ்வாய் ரேகை காணப்பட்டால் உடல் ஆரோக்கியம் சீர் செய்யப்படும்.

கும்ப லக்ன பெண்கள்

எப்போதும் புருஷனுடன் கூடி இருக்கும் தன்மை உடையவள்.புண்ணியசாலி.அடிக்கடி நோயால் அவதிபடுவால்.துணிவுடன் பேசுபவள்.புத்திரவிசனமுள்ளவள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

கும்ப லக்ன பெண்கள் பட்டப்படிப்பை பெற்றுக் கொள்பவர்கள். கம்ப்யூட்டர் துறையில் புகழை நிலை நாட்டலாம். தொழில் தானாகவே அமைந்துவிடும். பெண் சந்ததிகள் அதிகம் உண்டு. கணவரிடம் பாசம் ஏற்படும். இவர்கள் திருமணம் செய்யும் இடத்தில் மாமனார் அல்லது மாமியார் வகையில் குறைவு ஏற்படலாம். உள்ளங்கையில் சுக்கிர மேட்டின் மேல் பாகத்தில் அதிக சதுரக் குறிகள் காணப்பட்டால் பிறரிடம் நற்பெயர் வாங்குவது கடினம்.

மீன லக்ன பெண்கள்

உறவினர்கள்,கணவன், குழந்தை, ஆகியோரிடத்தில் அதிக பிரியம் உள்ளவள்.பதிவிரதை.தெய்வ பக்தி உள்ளவள்.அழகிய கண் முகம் உள்ளவள்.விசுவாசமுள்ளவள்.

பெண்கள் பிறந்த லக்னங்களின் பலன்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் மாட்டுப்பண்ணை மற்றும் பால் வியாபாரம், ஆவின் மற்றும் பால் உற்பத்தி துறையில் கவனம் செலுத்தினால் வாழ்வு சிறப்புறும். ஆண் சந்ததி உண்டு. கணவரிடம் அதிகமான பக்தி பாசம் உண்டு. விரதங்களை முறையாக கடைபிடிப்பவர்கள். வசீகர, முகம் கண்கள் இருக்கும். சினிமா துறை வரவேற்கும். சூரியமேடு உச்சமாகவும் சூரிய மற்றும் தன ரேகைகளும் காணப்பட்டால் பணத்தோடு புகழும் வந்துவிடும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular