Wednesday, March 22, 2023
Homeஆன்மிக தகவல்குல தெய்வம் என்றால் என்ன?

குல தெய்வம் என்றால் என்ன?

ASTRO SIVA

google news astrosiva

குல தெய்வம்(KulaDeivam):

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள்ஆகும்.அந்தபுனிதஆத்மாக்கள்தங்களின்குலத்தினைசார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாகஎதையும் சொல்லமுடியாது.இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்செய்வினை செய்வார்.

மந்திரவாதிகள்தாங்கள்வசப்படுத்தியதேவதைகளின்மூலம்மற்றவர்களின்குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும்உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

பொதுவாக பெண்கள்மட்டும்இரண்டுகுலதெய்வங்களைவணங்குபவர்களக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்தவீட்டில்ஒருதெய்வம்.திருமணத்திற்குமுன் பிறந்த வீட்டின்குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம்முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குல தெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது.பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால்பிறந்தவீட்டின்குலதெய்வத்திற்குதிருவிழாகாலங்களில்வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோலவேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குல தெய்வம்

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம்இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்தஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.அக்கோவிலுக்கு உதவுங்கள்.பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீகவாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்துவணங்கும்குலதெய்வம்இருக்கமுடியாதுஎன்பது தெய்வக்கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின்வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ,அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.

ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டுஇருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular