Friday, July 26, 2024
Homeசித்தர்கள்ஜீவ சமாதி

ஜீவ சமாதி

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஜீவ சமாதி

ஜீவ சமாதி என்றால் என்னவோ ஏதோ என்று நினைக்காதீர்கள்.சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள்.

அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர் காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு. வேண்டாத எண்ணங்கள் நீங்கி, நாம் வாழ்வில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு கிட்டும்.சுருக்கமாக, நமது குறைபாடுகளை நீக்கி நமக்கு வளமான வாழ்வை, நமதுவினை பதிவுகளுக்கேற்ப, சீரமைக்க உதவும். அவ்வளவுதான்.

ஜீவ சமாதி

அங்கே போய் தியானம் செய்து அந்த உணர்வோடு கலந்து தன்னை மறக்கவேண்டும், தளம் மாற வேண்டும் என்று ஏதேதோ புரியாத வகையில் சொல்கிறார்களே? என்று சிலர் கூறுவார்கள்.தியானம் என்றால் என்னவோ ஏதோ என்று குழப்பிக் கொள்ளாதீர்கள்.

ஒரு செயலை முழுமனதுடன், சிந்தனை சிதறாமல் நீங்கள்செய்தால் அதுவே தியானம்தான்.One thing at one will என்று மகரிஷி கூறுவார். ஜீவசமாதியில, உங்கள் கவனம் முழுவதும், அந்த மகானின் உயர் சிந்தனைகளோடு உங்கள் உணர்வுகளும் கலக்க வேண்டும் என்று இருந்தால் போதும்.

பிரபஞ்ச பேராற்றலும் உங்களோடு இணைந்து உங்களுக்குள்என்ன மாற்றம் தேவையோ அது இயல்பாக நடந்து விடும்.அவ்வளவுதான்.போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். எந்த சிறப்பான கோயிலுக்கு போனாலும் சித்தர் பீடம் இருக்கும். விசாரித்து அங்கே போய், அமைதியாக இயல்பாக உங்கள் கவனத்தை அங்கேயே நிலை நிறுத்துங்கள்.மற்றவை தானாக நடக்கும்.

இன்னும் ஒரு சிறு விளக்கம்

ஜீவ சமாதி

ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம்+ஆதி.

அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்த வந்த ஜீவனை சமன் செய்தல் என்று பொருள்.

ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இரு கண்களினும் மேலாக பின்பற்றி வருகின்றனர்.

உடலையும் உன்னத்தையும் மாசின்றி பேணி காக்கின்றனர்.அனலமோதும் ஜீவனை ஒரு நிலைப்படுத்தி தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை.தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்கிறார் திருமூலர்.கடவுளை காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள்.ஆனால் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.

யோக் என்றால் சமஸ்கிருத்தில் வழி என்று பொருள்.இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி.இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் சின் அல்லது ஆதி போன்ற முத்திரையில் யோகி அமரும் ஆசிரமம்தான் “யோகாஸ்ரமம்” எனவும் கூறுகின்றனர்.சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல.

ஞானிகள் தங்களுடைய ஆற்றலும் அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்து விட்டு இறைவனோடு இரண்டறக் கலக்கின்றனர்.சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்ச நிலை என உரைக்கப்படுகிறது.இவர்களின் உடல் மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயர் உடலை விட்டு பிரிவதில்லை என்கிறார் திருமூலர்.

இதை பதிவாக எளிமையாக போடுவதற்கு காரணம்

எந்த புகழ் பெற்ற கோவிலுக்கு சென்றாலும் ஜீவசமாதி விசாரித்தறிந்து அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.இந்த எண்ண உயர்வுக்கு  நீங்கள் பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வுதளமோ தேவையில்லை.

குருவே சரணம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular