Friday, December 8, 2023
Homeநட்சத்திர ரகசியங்கள்புனர்பூசம் நட்சத்திரம்

புனர்பூசம் நட்சத்திரம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
புனர்பூசம் நட்சத்திரம்

நட்சத்திரத்தின் ராசி – மிதுனம்,கடகம் .

நட்சத்திர அதிபதி- குரு .

நட்சத்திர நாம எழுத்துகள் :கே -கோ -ஹ -ஹி

கணம் :தேவ கணம்

மிருகம் :பெண் பூனை

பட்சி : அன்னம்

மரம் :மூங்கில்

நாடி :தக்ஷிண பார்சுவ நாடி

ரஜ்ஜு :இறங்கு வயிறு

அதி தெய்வம் :33 தேவர்கள்

புனர்பூசம் நட்சத்திரம் பொதுவாண குணங்கள்:

புதன், சந்திரன், குருவுக்கு சொந்தமானது. இந்த ராசிக்காரர்கள் மனிதவள மேம்பாட்டு துறையினராய் இருப்பர். சிங்கப்பூர் தொடர்பு உண்டு. மலையாள மக்களால் இடருண்டு. ஏமாற்றம் உள்ளவர். செஸ் விளையாடுவார். பயம், ஏமாற்றம், ஏக்கம் உள்ளவர். நாய்-பூனை வளர்ப்பதால் இடருண்டு. சமயத்தில் இவர் உதவி யாருக்கும் போய் சேராது. கடலோரத்து ஊர் தெய்வ அருள் உண்டு. ஆசிரியர், ஆலோசகர் போன்று இருப்பார். கம்பனி செயலாளர் படிப்பு படிப்பார். மத்திம வயதில் வீண் பழியை சுமப்பார். விமான வழி போக்குவரத்து, பெட்ரோ கெமிக்கல், சிமெண்ட் ஆதாயம் உண்டு. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நட்சத்திரம்.

உயர்ந்த குணம்உள்ளவர்கள்.கடமை உணர்வு உடையவர்கள்.கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.சிறந்த பண்பாளர்கள்.பொது தொண்டில்விருப்பம் கொண்டவர்கள்.நீண்டதூரம் நடப்பவர்கள்.உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.கடுமையாகப் பேசுபவர்.கள்ளத்தனம் கொண்டவர்கள்.தெளிவான சிந்தனை உடையவர்கள்.அறிவாளி பொய் பேச மாட்டார்கள்

புனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதம்:

பருமனான உடல் உள்ளவர்கள்.மந்தமான செவித் திறன் உடையவர்கள்.தடித்த ரோமம் உள்ளவர்கள்.

புனர்பூசம் நட்சத்திரம்

புனர்பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்

உஷ்ண தேகம் உடையவர்கள்.சோம்பல் குணம் உடையவர்கள்.ஆசாரம் இல்லாதவர் தற்பெருமை குணமுடையவர்கள்.

புனர்பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் 

குஷ்ட நோய் வர வாய்ப்புள்ளவர்கள்.பயணங்களில் விருப்பமுள்ளவர்கள்மக்களைப் பேணிக் காப்பவர்கள்.நீண்ட ஆயுள் உடையவர்கள்.

புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம்

நல்ல செயல்கள் புரிபவர்கள்.குள்ளமாக இருப்பவர்கள்.நல்ல அழகான தோற்றம் கொண்டவர்கள்தீர்க்கமான பார்வை பலம் உடையவர்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular