Sunday, October 1, 2023
Homeஅற்புத ஆலயங்கள்கல்வியில் சிறந்து விளங்க -அருள்மிகு ஏழுத்தறிநாதர் திருக்கோவில்

கல்வியில் சிறந்து விளங்க -அருள்மிகு ஏழுத்தறிநாதர் திருக்கோவில்

ASTRO SIVA

google news astrosiva

கல்வியில் சிறந்து விளங்க –அருள்மிகு ஏழுத்தறிநாதர் திருக்கோவில்

 
காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 45 வது தலமாக விளங்கும் திருஇன்னம்பார்  குழந்தைகளுக்கு சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வித்தியாரம்பம் செய்யவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய தலமாகவும் விளங்குகிறது.
 
 
 இறைவன் பெயர்: எழுத்தறிநாதர் ,ஐராவதேஸ்வரர்
 இறைவி பெயர்: சுந்தராம்பிகை ,சவுந்தரநாயகி 
 
இத்தலத்திற்கு  திருநாவுக்கரசர் பதிகம்4 திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று என ஐந்து பதிகங்கள் உள்ளன.
 
 தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை இங்குள்ள தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் சாபத்தை போக்கி கொண்டதால் இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்றும், இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
 அகஸ்திய முனிவர் இத்தல இறைவனிடம் தமிழ் இலக்கணம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. மேலும் இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இடம் கணக்காளராக  ஆக பணியாற்றி வந்தவர் சுதஸ்மன்  என்ற ஆதி சைவர்.கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் அரசன்  ஒருமுறை வரவு செலவு கணக்குகளை பற்றி விசாரித்தான்.
 
அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன்  கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது.தன் மீது வீண்பழி வரும் என்று கவலைப்பட்ட சுதஸ்மன்  இத்தல இறைவனிடம் வேண்டினார்.ஈசன் ,சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று அவருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தை போக்கினார்.
அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.
 
Ezhuthari Nathar Shiva Temple
 
காவிரியின் வடகரையில் உள்ள இத்தலம் ஒரு பாஸ்கர ஷேத்ரம் ஆக விளங்குகிறது.அம்பர் என்றால் ஆகாயத்தை குறிக்கும் ஆகாயத்தின் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்தான் சூரியன் பூஜித்ததால் இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது.
 
பங்குனி மாதம் 13,14,15 தேதிகளில் சூரிய ஒளி காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகிறது .இதனை சூரிய பூஜை என்று பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
 
அம்பாளின் பெயர் நித்தியகல்யாணி என்கிற சவுந்தரநாயகி இறைவன் சந்நிதி விமானம்கஜப்பிரஷ்ட  அமைப்பு உடையது.
 
 இத்தலத்திற்கு சென்று வழிபட்டு வருவது கல்வியில் மென்மேலும் சிறப்பிக்க இத்தல இறைவன் அருள்புரிவார்.

ஆலய முகவரி:

அருள்மிகு ஏழுத்தறிநாதர் திருக்கோவில் ,
இன்னம்பர் ,
இன்னம்பர் அஞ்சல் ,
கும்பகோணம் வட்டம் 
தஞ்சை மாவட்டம் -612303 
 

Google Map: 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular