செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷமானது(Sevvai thosam) திருமணதடையை ஏற்படுத்தும் தோஷங்களில் ஒன்றாகும்.லக்கினத்திலிருந்து 4, 7, 8, 12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாக(Sevvai Dhosam) கருதப்படுகிறது.
இதில் சில வீடுகளில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் ஆட்சி ,உச்சம் ,நீசம் பெற்றிருந்தாலும் தோஷம்குன்றி இருக்கும். செவ்வாய் தோஷம்(Sevvai Dhosam)ஏற்பட்டாலும் சில விதிவிலக்குகள் அடிப்படையில் செவ்வாய் தோஷம்(Sevvai Dhosam)குறைவுபடும். விதிவிலக்குகள் பின்வருமாறு
செவ்வாய் தோஷத்திற்கான விதிவிலக்குகள்:
- விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
- குரு, சூரியன் ,சனி ,சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை
- சூரியன், சந்திரன், குரு, சனி ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை.
- கடகத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
- இரண்டாம் இடம் மிதுனம் அல்லது கன்னி ஆக இருந்தாலும் தோஷமில்லை
- எட்டாம் இடம் தனுசு ,மீனம் இருந்தால் தோஷமில்லை
செவ்வாய் தோஷம் வர காரணம்
செவ்வாய் என்பவர் சகோதர, சகோதரி மற்றும் மனைகளை குறிக்கக்கூடிய கிரகம் ஆகும். நாம் செய்யும் வினைகள் இவர்களைப் பாதிக்கும் வகையில் இருக்கும் பட்சத்தில் நாம் எடுக்கும் அடுத்த பிறவிகளில் அவை செவ்வாய்தோஷங்களாக மாறுகின்றன.
அதாவது நம்முடன் பிறக்கும் சகோதர, சகோதரிகளை ஆபத்தான சமயத்தில் அவர்களுக்கு உதவி செய்யாமல் நிற்கதியாய் விடுவது அல்லது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சொத்து தொடர்பான பாகங்களை கொடுக்காமல் அவர்களை ஏமாற்றுவது மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் மனையை கலங்கப்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் :
திருமணத்தடை, திருப்தி இல்லாமல் வாழ்க்கை, குழந்தையின்மை ,சகோதர உறவுடன் ஒற்றுமை குறைவு, பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு, சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி, விபத்துகள் போன்ற பிரச்சனைகள் செவ்வாய் தோஷத்தால் ஏற்படுகிறது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் திருமணம்:
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஆனோ ,பெண்ணோ இருவரும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.
இவர்கள் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து கொண்டால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் சிறு சிறு விஷயங்களுக்கும் வாக்குவாதம் தோன்றி மறையும்.
தோஷம் இல்லாதவர்களுக்கு தோஷம் உள்ளவரை திருமணம் செய்து வைத்தால் சிறு சிறு விஷயங்களுக்கும் விட்டுக்கொடுக்காமல் மனக் கசப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். இந்த மன கசப்புகள் சில நேரங்களில் தம்பதிகளை விவாகரத்துக்கு அழைத்துச்செல்லும்.

செவ்வாய் தோஷம் பரிகாரங்கள்:
- செவ்வாய்க்கிழமைகளில் முருகன் மற்றும் முருகனின் அம்சம் கொண்ட அங்ககாரனையும் வழிபட்டு வந்தால் செவ்வாயின் தாக்கம் குறையும்.
- விநாயகருக்கு செவ்வாயன்று வரும் சதுர்த்தி நாளில் அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் நல்லது நடைபெறும். இவ்வாறு 41 செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்.
- செவ்வாய்கிழமைகளில் வரும் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் துவரை தானம் செய்தால் செவ்வாயின் தாக்கம் குறையும்.
- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் காயத்ரி மந்திரம் தியானமந்திரம், சூரிய கவசம் போன்றவற்றை சொல்லி கடவுளை மனமுருகி வழிபட்டு வந்தால் தோஷம் விலகும்.
- செவ்வாய் தோஷகாரர்கள் ரத்தக் கல் பதித்த தங்க மோதிரத்தை மோதிர விரலில் வலது கரத்தில் அணியலாம்.
- முருகனுக்கு சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விரைவில் நீங்கிவிடும்.
- நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு 27 செவ்வாய்க்கிழமைகள் நெய்விளக்கு ஏற்றி வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
- நவகிரக செவ்வாய்க்கு பிறந்ததேதி அல்லது கிழமையில் அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகும்.
- இதுபோன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்.
- செவ்வாய் தோஷமுள்ளவர்கள் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு வாய்ந்த பரிகார ஸ்தலமாக அமைகிறது.
- சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை ,ஈரோடு
- சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி ,ஈரோடு.
- கந்தசாமி திருக்கோவில் ,திருப்போரூர் ,காஞ்சிபுரம்
- மலையாளதேவி துர்காபகவதிஅம்மன், திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்
- அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர், கடலூர்
- அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்
- கைலாசநாதர் திருக்கோவில் கோடகநல்லூர், திருநெல்வேலி
- வீரபத்திரர் திருக்கோவில் அனுமந்தபுரம், காஞ்சிபுரம்
- கல்யாண கந்தசாமி திருக்கோவில் மடிப்பாக்கம் ,சென்னை
- அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் ,சென்னை
- தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பட்டீஸ்வரம் , தஞ்சாவூர்
- அகோர வீரபத்திரர் திருக்கோயில் வீரவாடி, திருவாரூர்
- பிரணவநாத சுவாமி திருக்கோயில் சோழவந்தான் ,மதுரை
- விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல், புதுக்கோட்டை
- சுப்பிரமணியர் காங்கேயன் திருக்கோவில் காங்கேயநல்லூர், வேலூர்
போன்ற கோவிலுக்கு சென்று வழிபட்டு நலம் பெறலாம்