Friday, July 26, 2024
Homeஜோதிட தொடர்மாரகாதிபதிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்

மாரகாதிபதிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மாரகாதிபதிகள்

🔴ஜென்ம லக்னத்திற்கு 2ம் இடத்திற்குரியவனும் 7 ஆம் இடத்திற்குரியவனும் மாரகாதிபதிகள் எனப்படுவர்.    

🔴இவ்விருவருள் 2ம் இடத்து அதிபதி மாரகத்துக்குச் சமமான கண்டத்தை தருவானேயல்லாமல் மாரகம் செய்யமாட்டான்.

🔴ஜென்ம லக்னத்திற்கு பாவிகள் என்று சொல்லப்பட்ட 3, 6 ,8 ,12 ஆகிய நான்கு ஸ்தானதிபதிகளுள் 3,8 ஆம் இடத்துக் உரியவர்கள் மாரகம் செய்வார்கள்.  

🔴மாரகம்- மரணம் 3,7,8 இடத்து அதிபதிகள் மாரகம் செய்வார்கள்.அதாவது இந்த கிரகங்களின் தசா புத்தி காலங்களில் ஒருவருக்கு மரணம் சம்பவிக்கலாம் 2ஆம் அதிபதியின் தசா புத்தி காலங்களில் ஒருவருக்கு மரணத்திற்கு சமமான கண்டம் ஏற்படலாம்.    

🔴மாரகம் எப்போது நிகழும் என கணிக்கும்போது மிக்க கவனம் தேவை கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால், மாரகம் நடைபெற்ற விடும் என்று தீர்மானித்து விடக்கூடாது. முதலில் அந்த ஜாதகரின் ஆயுள் பலம் எவ்வளவு என்பதை தீர்மானித்து ஆயுள்பலம் முடிவடையும் கால கட்டத்தில் கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் ஆனால் அந்த சமயத்தில் மாரகம் நிச்சயம் நிகழும் என்று தீர்மானிக்கலாம்.    

🔴மரணம் நிகழும் என்பதை வெளிப்படையாக உரைத்து மக்களை பயமுறுத்தி விடவும் கூடாது. பலன் உரைப்பதில் அதிக எச்சரிக்கை கடைபிடிக்க வேண்டியது மாரகம் சொல்லும் போது தான் என்பதை மறந்து விடாதீர்கள்.    

🔴மாரகஸ்தானதிபதிகள் தவிர மாரகஸ்தானங்கள் இருந்தவர்களும் மாரக ஸ்தானதிபதிகள் உடன் சம்பந்தப்பட்டவர்களும் கூட மாரகம் செய்யக்கூடும். ராஜயோக ஜாதகம் அமைப்பு உடையவர்களுக்கு காரக கிரகங்களின் தசா புத்திகள் மாரகம் செய்யாமல் யோகத்தை வழங்கும்.    

🔴மாரகஸ்தானதிபதிகள் மட்டுமே மாரகம் செய்வார்கள் என்று கருதிவிடக்கூடாது ஜாதக ரீதியாக ஆயுள் பலமும் காலகட்டத்தில் மாரக ஸ்தானத்தில் இருந்து அல்லது மாரக ஸ்தான அதிபதிகள் உடன் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்திகள் நடக்கும்போது கூட மாரகம் நிகழலாம்.    

🔴நல்ல ராஜயோக அமைப்பு களும் ஆயுள் பலமும் உள்ள ஜாதகத்தில் கிரகங்களின் தசாபுத்தி மார்பகத்தையும் மரணத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பதற்கு பதிலாக யோக பலன்களை அளிப்பதை காணமுடிகிறது ஆதலால் இந்த அம்சங்கள் எல்லாம் கவனித்து பார்த்த பின்பே மாரகம் எப்போ அது நிகழும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

🔴சுக்கிரனும் ,குருவும்  மாரகாதிபத்தியம் பெற்று இருப்பார்கள்லனால் வலுவான மாரகதோஷம் ஆகும். குருவையும் சுக்கிரனையும் காட்டிலும் புதன் சற்று மாரக தோஷம் குறைந்தவராவார் .புதனை காட்டிலும் சந்திரன் மாரக தோஷம் குறைந்தவராவார், சந்திரனை காட்டிலும்  சூரியனும், சூரியனைக் காட்டிலும் சனியும் சனியை காட்டிலும், செவ்வாயம் மாரக தோஷம்குறைந்தவர்கள் ஆவார்கள்.

குருவோ, சுக்கிரனோ மராகர்களாகி அவர்களுடைய தசாபுக்தி நடக்குமானால் அந்த காலகட்டத்தில் மாரகம் நிகழ்வதற்கு வாய்ப்பு அதிகம்.
செவ்வாய் மாரகாதிபதி ஆனால் அவருடைய தசாபுத்தி காலகட்டத்தில் மாரகம் நிகழ்வதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. 
ராகு கேதுக்கள் ஏதாவது ஒரு மாரக ஸ்தானத்தில் இருந்தாலும் அல்லது மாரகஸ்தானதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் அந்த மாரக ஸ்தான அதிபதிகளின் பார்வைக்கு ஆளாகி இருந்தாலும் தங்கள் தசா புத்தி காலங்கள் மாரகம் செய்வார்  அல்லது அதற்கு சமமான கண்டத்தை தருவார்.

🔴2,3,7,8 ஆகிய வீடுகளுள் ஒன்றில் ராகு கேதுக்கள் இருந்தாலும் இந்த வீடுகளின் அதிபதி களோடு சேர்ந்து இருந்தாலும் இந்த அதிபதிகளின் பார்வை பெற்றிருந்தாலும் அந்த ராகு கேதுக்கள் மாரகதன்மை பெற்று விடுகிறார்கள் என்பதாம்.

🔴ஆயுள் பலம் முடிகின்ற சமயத்தில் இத்தகைய ராகு கேதுக்களின் தசாபுக்தி நடக்குமானால் அந்த சமயத்தில் மாரகம் நிச்சயம் நிகழும்.    

🔴ராகு கேதுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற போதிலும் அவர்கள் தாம் இருந்த வீட்டின் தன்மையையும் தங்களைப் பார்த்து கிரகங்களின் தன்மையையும் தங்களோடு சேர்ந்த கிரகங்களின் தன்மையையும் பிரதிபலிப்பார்கள் என்று விதியின் அடிப்படையில் இப்பலன் கூறப்பட்டிருக்கிறது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular