Wednesday, May 22, 2024
Homeஜோதிட குறிப்புகள்12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்

12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்

மேஷம்-சூரியன்

மேஷ ராசியில் சூரியன் அமையப் பிறந்தவர் சித்திரை 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்தவரும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி பிறந்தவர் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் பொருந்தும்.

இவர் தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டவர்,தம்மைப் பற்றி பெரிதாக கருதுபவர்.அடுத்தவர்களை மதிக்க மாட்டார்.செலவாளியாக இருப்பார்.எப்போதும் பணத்தேவை மிகுந்தவர்.எதிலும் கண்டிப்பாக பேசுவார்.முன்கோபம் மிகுதியாக உள்ள அவர் தாம் எது செய்தாலும் எதைப் பேசினாலும் அது நியாயம் என்றே வாதாடுவார்.

ரிஷபம் -சூரியன் 

ரிஷபத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் மே மாதம் 14 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி பிறந்தவர்கள் .வைகாசி மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி பிறந்தவருக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் பொருந்தும்.

இவர் அன்பும் சாந்தமும் வாய்ந்தவர்.எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக கவனத்தை செலுத்துவார்.தம் செயலை, சொல்லை பிறர் மறுப்பதை இவர் விரும்பாதவர்.தாம் செய்வது தவறு என்றாலும் ஒத்துக்கொள்ளாமல் வாதாடுவார்.இவர் சிறந்த நிர்வாகி.அமைதியும் சகிப்புத்தன்மையும் வாய்ந்தவர்.அறிவியல் கலைகளையும் ஆடம்பர அலங்காரங்களையும் விரும்புவார்.

முன்னோர் சொத்துக்களை அடைவார்.பொருளை சேகரிப்பதில் மிகக் கவனமாய் இருப்பார்.இவர் வீணான சில பழக்கங்களால் தம் இயல்பான பழக்கங்களை இழந்து விடும் தன்மையினர்.இதய நோய் சிறுநீரக கோளாறு கல்லீரல் கோளாறு ஆகியன ஏற்பட்டு குணமாகும்.

சூரியன்

மிதுனம்-சூரியன்

 மிதுனத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் ஆனி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதிக்குள் பிறந்த வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி பிறந்தவர் பின் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் பொருந்தும்.

புத்திசாலித்தனமும் தெளிவான பேச்சும் நினைவாற்றலும் எதையும் விரைவாகப் படித்து அறியும் ஆற்றலும் அமைந்திருக்கும்.இவரிடம் திடீர் திடீர் என மனம் உடைந்து விட்டது போல் கவலைப்படும் குணமும் இருக்கும்.எவராவது தம்மை பாராட்டினால் இவர் அடிமை ஆகி விடுவார் அதனால் பல தொல்லைகளுக்கு ஆளாகநேரிடும்.

கடகம்-சூரியன்

கடகத்தில் சூரியன் அமைந்திருக்கும் ஆடி மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்தவர்களுக்கும் ஜூலை 14-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி பிறந்தவர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் பொருந்தும்.

இவர் எந்த ரகசியத்தையும் காப்பாற்றக் கூடியவர்.தம் கடமைகளை சரியாக செய்பவர்.அடிக்கடி தம் மனநிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்.அதேபோல் செய்யும் தொழிலையும் குடியிருக்கும் வீட்டையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்.மனதில் எப்போதும்  ஏதோ நேருமோ எனும் தவிப்பு இருக்கும்,தன்னல போக்கினால் எப்படியாவது முயற்சி செய்து தம் செயலை முடித்துக் கொள்வார்.

சூரியன்

சிம்மம்-சூரியன்

சிம்மத்தில்  சூரியன் அமையப் பெற்றவருக்கும் ஆவணி மாதம் 1 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்தவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி பிறந்தவர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் பொருந்தும். 

பெருந்தன்மையானவர்,நட்புக்கு இனியவர் ,இவரிடம் பிறரை கவர்ந்திழுக்கும் ஆற்றல் உண்டு.விரும்பிய செயலை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்.ஊக்கமும் மனபலமும் பெற்றவர்.நினைவாற்றல் மிகுந்தவர்.

கன்னி-சூரியன்

கன்னியில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் புரட்டாசி 1 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்தவர்களுக்கும் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதிக்குள் பிறந்தவர்களுக்கும் பொருந்தும்.

எதிலும் எப்போதும் அலட்சிய மனப்பான்மை உடையவராய் இருப்பார்.பிறரிடம் பேசும்போது எப்போதும் குறை காணும் போக்கு கொண்டவர்.இவர் தம் உடல் நலத்தில் அக்கறை கொள்ள மாட்டார்.எதையும் எளிதில் நம்ப மாட்டார்.தமக்காக பிறர் வேலை செய்ய வேண்டும் என விரும்புவர்.தீமையை உண்டாக்கும் குணமும் உண்டு.புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்வார்.புதிய நண்பர்கள் மூலம் வாழ்வில் நன்மைகள் ஏற்படுமா என எதிர்பார்ப்பார்.இவர் பரந்த ஞானமும் உள்ளார்ந்த அறிவாற்றலும் கொண்டவர்.

துலாம்-சூரியன்

துலா ராசியை லக்கினமாக கொண்டு பிறந்த வரும் அக்டோபர் 14-ஆம் தேதி முதல் நவம்பர் 16-ஆம் தேதிக்குள் பிறந்த வருடம் ஐப்பசி மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்தவர்களுக்கும் கூறப்போகும் பலன்கள் பொருத்தமாயிருக்கும்.

இவர்களுள் பலர் நிலையற்ற மனம் உள்ளவர்கள்.எதையாவது ஒன்றை தொடங்கி மிக வேகமாக செயல் ஆற்றுவார் பின்பு அதை பாதியில் நிறுத்திவிட்டு வேறு செயல்களில் ஈடுபடுவர்.சில சமயங்களில் மிக மகிழ்ச்சி யோடும் சில சமயங்களில் மிக கவலையோடும் இருக்கும் இயல்பினர்.இவர் சுகபோக இசை உள்ளவர்.கடுமையாக உழைப்பார்.பிறரை மதிக்காமல் தோன்றியதை தாமே செயல்பட தொடங்குவார்.எனக்கு எவர் உதவியும் இல்லை என்று குழப்பம் அடைவார்.இந்த துலா ராசியில் சூரியன் நீசம் ஆவதால் இத்தகைய பலன்கள் ஏற்படுகின்றன.

துலா ராசியில் சூரியன் அமையப் பெற்றவர் சூரிய கிரக தோஷ பரிகாரம் செய்து சூரிய வழிபாடுகள் செய்தால் இந்தப் பலன்கள் நலம் தரும் பலன்கள் ஆக மாறும்.

சூரியன்

விருச்சிகம்-சூரியன்

விருச்சிக லக்னத்தை முதன்மையாகக் கொண்டவர் கூறிய பலன்களைப் பார்ப்போம் விருச்சிக லக்கனத்தில் சூரியன் இருந்தால் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்தவர் ஆனாலும் நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை பிறந்தவர் ஆனாலும் அவருக்கு பின் வரும் பலன்கள் பொருந்தும்.

இவர் எதில் ஈடுபட்டாலும் அதில் ஒரு முடிவு காணாமல் விடமாட்டார்.உழைப்பார் தியாகம் செய்வார். எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.இவர் மிக விரைந்து செயலாற்றும் லட்சியவாதி.

தனுசு-சூரியன் 

தனுசு ராசியில் சூரியன் இருக்கப் பிறந்தவர் ஆயினும் மார்கழி ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்தவராயினும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் பிறந்தவராயினும் அவருக்கு பின் வரும் பலன்கள் பொருந்தும். 

இவர் மிகுந்த புத்திசாலிதனம் ,தற்பெருமை, தன்னம்பிக்கை எப்போதும் கலகலப்பாக இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டவர்.பல நண்பர்களை கொண்டவர்,பிறருக்கு புத்திமதி சொல்லக்கூடியவர் ,மரபுகளை காப்பதிலும் , தகராறுகளை தீர்ப்பதிலும் வல்லவர்.

இவரிடம் பெருந்தன்மை ஒழுக்கம் லட்சியம் ஆகிய நல்ல பண்புகள் இருக்கும்.இவர்களில் சிலருக்கு சூதாட்ட மனோபாவமும் தன்னல போக்கும் ஏற்படலாம்.எந்த ஒரு செய்தியையும் சுவைபட கோர்வையாக சொல்லும் திறமை வாய்ந்தவர்.

மகரம்-சூரியன்

 மகர ராசியில் சூரியன் அமையப் பெற்றவருக்கும் தை மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் பிறந்தவர் ஜனவரி 14-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி பிறந்தவர் கீழே குறிப்பிடப்படும் பலன்கள் பொருந்தும்.

இவர் மன உறுதி வாய்ந்தவர் இருந்தாலும் ஆற்றல் குறைந்தவர்,எப்போதும் பிறரிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்.இவருக்கு அடிக்கடி நோய் ஏற்படும். அடிபடும்,மற்றவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் மிகுந்தவர்.பொறாமையும் ஐய மனப்பான்மையும் கொண்டவர்.சகிப்புத் தன்மை வாய்ந்தவர்.தம்மைப் பிறர் பாராட்ட வேண்டும் எனக் கருதுபவர்.நிர்வாகத் திறமை உள்ளவர்.பிறரிடம் அடிமையாக இருக்க விருப்பம் இல்லாதவர்.திருமண வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்தவர்.

கும்பம்-சூரியன்

கும்பத்தில் சூரியன் இருக்கப் பெற்றவர் க்கும் மாசி மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பிறந்த வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை கீழே குறிப்பிடப்படும் பலன்கள் அமையும்.

இவர் ஆடம்பரமற்றவர்.ஒதுங்கிப் போகும் குணம் உள்ளவர்.எவரிடமாவது நெருங்கினால் இனிமையாக பழகும் தன்மையும் இளகிய மனமும் கொண்டவர்.அறிவாற்றல் மிகுந்தவர்.தத்துவம் இலக்கியம் ஆகியவற்றில் விருப்பம் உள்ளவர்.பிறர் புகழைக் கேட்க விரும்பாதவர்.பிறரைப் பற்றி அடிக்கடி விமர்சனம் செய்பவர்.பிறர் விருப்பு வெறுப்புகளை ஊன்றி கவனிப்பவர்.

மீனம்-சூரியன்

 மீன ராசியில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் பங்குனி மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பிறந்த வரும் மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறந்தவர் கீழே குறிப்பிடப்படும் பலன்கள் பொருந்தும். 

கொடுத்த வாக்கினை காப்பாற்றும் தன்மை உடையவர்.தம் முடிவுகளை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டார்.நேர்மையும் இரக்க குணமும் கொண்டவர்.நல்ல பொருள்களையும் சுவைமிகுந்த உணவுகளையும் விரும்புவார்.அடிக்கடி தண்ணீர் அருந்துவார்.இது இவரின் தனி இயல்பு.     

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular