Thursday, April 25, 2024
Homeதோஷங்களும்-பரிகாரமும்திருமண தாமதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் -நட்சத்திர தோஷம்

திருமண தாமதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் -நட்சத்திர தோஷம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

நட்சத்திர தோஷம் 

இந்தப் புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தக்க பருவத்தில் தக்க நிலையை அடைதல் அவசியம். கல்வி ,தொழில் ,உத்தியோகம், கல்யாணம் முதலான ஒவ்வொன்றும் உரிய பருவத்தில் வாய்ப்பது பெரும் கொடுப்பினை ஆகும்.

ஆனால் இந்த பேரு எல்லோருக்கும் கிடைப்பதில்லை சிலருக்கு இளமையில் கல்வி வாய்ப்புகளில் தடை ஏற்படும், சிலருக்கு நல்லதொரு உத்தி யோகமோ தொழிலோ உரிய காலத்தில் அமையாமல் காலதாமதமாகும், அதனால் இளமையில் பொருள் சேர்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது.

இந்த வரிசையில் திருமணப் பேறு தடைபட்டு வருவோரும் உண்டு தடைகளுக்கு காரணங்கள் பல உண்டு அவற்றில் குறிப்பிடத்தக்கது நட்சத்திர தோஷம் ஆகும் அவரவர் பிறந்த நாள் உடன் கூடிய நட்சத்திரம் அவருக்குரிய ஜன்ம நட்சத்திரமாக திகழும்.

ஜோதிடரீதியாக சந்திர கிரகம் சஞ்சரிக்கும் நட்சத்திரம் எனலாம் .அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் ஒருவர் பிறந்தும் அவருக்கான ஜென்ம நட்சத்திரம் எது என்பதை பஞ்சாங்கம் மற்றும் காலண்டர் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

ஜன்ம நட்சத்திரங்களின் குறிப்பிடப்பட்ட சிலவற்றுக்கு மட்டும் நட்சத்திர தோஷம் அறியப் படுகின்றன. அவை மூலம். ஆயில்யம். விசாகம். கேட்டை இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு இந்த நட்சத்திர தோஷம் குறித்த விஷயத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே.

தோஷத்தைப் பற்றிக் குறிப்பிடுவோர் ,ஜோதிடம் கூறும் விதிவிலக்குகளையும் விலக்கி உண்மையை அறிய வேண்டும். அந்த விதிவிலக்குகள் பற்றி விரிவாக நாம் அறிவோம்.

  • மூலம் 1-ஆம் பாதம் தான் தோஷம் அமைவதாக அறியப்படுகிறது. மற்ற பாதங்களில் பிறந்தவர்கள் தோஷம் இல்லை ஆகவே மூல நட்சத்திரம் என்றதுமே மாமனாருக்கு ஆகாது என்று எண்ணம் கொள்ள  கூடாது.
  • ஆயில்ய நட்சத்திரத்தின் 1-ம் பாதம்  தோஷம்: 2,3,4,-ம்  பாதங்கள் தோஷமில்லை.
  • விசாக நட்சத்திரத்தை பொறுத்தவரையிலும் 4-ம் பாதம் மட்டுமே தோஷம் பொருந்தியதாக கருதப்படுகிறது. ஆகவே விசாகத்தில் பிறந்தால் மைத்துனருக்கு ஆகாது என்ற எண்ணம் தவறானது.
  • கேட்டை நட்சத்திரத்தில் 1 ஆம் பாதம் தோஷம் என்பார்கள் மற்ற பாதங்களுக்கு தோஷம் இல்லை.

ஆகவே பண்படாத சொல் வழக்குகளை மனதில் கொண்டு தோஷ நட்சத்திரங்கள் என்று எதன் பொருட்டும் கவலை கொள்ள தேவை இல்லை. ஒருவேளை நட்சத்திர தோஷம் குறித்து மனதில் உறுத்தல் இருந்தால் கீழ்க்காணும் எளிய பரிகாரங்களை செய்து நிம்மதி பெறலாம்..

நட்சத்திர தோஷம்

பரிகாரம்: 

விநாயகர் சன்னதியில் அருகம்புல் சமர்ப்பித்து அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்து பிள்ளையாரை மனதார வழிபட்டு தீர்வு பெறலாம்.

பிள்ளையாருக்கு வேர்கடலை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

கடைகளில் வெள்ளி தகடுகள் செய்யப்பட்ட மூஷிக பிரதமை கிடைக்கும் அவற்றை வாங்கி கோயில் உண்டியலில் சமர்ப்பிக்கலாம்.

மேற்கூறிய பரிகாரங்களை தொடர்ந்து மூன்று வியாழக்கிழமை கடைபிடித்து வந்தால் திருமணத் தடைகளும் தோஷ பாதிப்புகளும் முற்றிலும் விலகிவிடும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular