Friday, April 19, 2024
Homeஜோதிட தொடர்மங்கு சனியும் -பொங்கு சனியும்

மங்கு சனியும் -பொங்கு சனியும்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மங்கு சனியும் -பொங்கு சனியும்

நவகிரகங்களில் சாயாவின் புத்திரனான சனிபகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாக திகழ்கிறார். முன் வினைகளுக்கு ஏற்ப பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஒருவரின் ஆயுளில் 3 முறை ஏழரைச்சனி காலத்தை சந்திப்பார்கள்.

இது குறித்த நடைமுறை வழக்கத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது இளமையில் சந்திப்பதும் மங்குசனி, மத்திம வயதில் சந்திப்பது பொங்குசனி, கடைசி காலத்தில் சந்திப்பது மரணச்சனி என்பார்கள்.

இதையொட்டி மங்குசனி மற்றும் மரணம்சனி குறித்து அதீத பயம் கொள்ளும் அன்பர்களும் உண்டு. ஆனால் சனி பகவான் குறித்த வீண் பயமும் கலக்கமும் தேவையில்லை. ஜோதிட நூல்கள் இது குறித்து விளக்கங்கள் தருகின்றன.

மங்கு சனி

 சனி பகவான் அருளும் மூன்று பருவங்கள்

சனிபகவான் விண்வெளியில் பயணிக்கும் பாதை எல்லா கிரகங்களையும் தாண்டியிருக்கும். விண்வெளியில் வெகு  தொலைவில் இருப்பவர். இவர். ராசி மண்டலத்தை ஒரு முறை வலம் வருவதற்கு சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது ஒருவரது வாழ்நாளில் சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார்.

முதல் முப்பது வருடத்திற்கு ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை ,90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவான் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கு சனி ,அடுத்ததை பொங்கும் சனி ,மூன்றாவதை போக்கு சனி என்பார்கள் .இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில் முதல் பிரிவு கெளமாரம் எனப்படும் அதாவது அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்தது யெளவனம், அதாவது இளமைப் பருவம் எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு அலசி ஆராயும் திறனுடன் நல்லது கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் இது.

துன்பங்களைத் தாங்கி அதனை அலட்சியப்படுத்தி ,மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகின்ற பருவம் இது! மூன்றாவது முதுமை. தேக ஆரோக்கியமும் ,மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம்,யெளவனம், வார்த்தகம் வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம்.

மங்கு சனி

சிறுவயதில் மங்கு சனி! இளமையில் பொங்குசனி! 

சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில் சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள் முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே சனியின் பாதிப்பு மங்கியது என்பர்.

இளமையில் வளர்ச்சியுற்று எண்ணம்பெருகிகிரகிப்பதிலும் வளர்ந்து சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்க செய்து பொங்க செய்கிறது ஆகவே பொங்கு சனி என்கின்றனர் .

இன்பம்- துன்பம் நிறைந்த வாழ்வில் துன்பத்தை ஏற்காமல் இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியை பொங்க செய்கிறார் சனி பகவான். கற்ற கல்வியுடன் ,விவேகமும்,  பகுத்தறிகின்ற பக்குவமும் கலந்திருக்க சனி பகவானின் தாக்கத்தை விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாக செயல்படுகிறார் சனீஸ்வரர்.

 முதுமையில் சோர்வை சந்தித்த உடலும், உள்ளமும் கொண்டிருக்க சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக் கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால் வாழ்க்கையின் எல்லையை எட்ட வைக்க அவன் செயல்பாடு உதவும் ஆகவே அவனது வேலைகளை சுட்டிக்காட்டி போக்கு சனி என்றனர்.

ஆக முற்பகுதி வளரும் பருவம் இரண்டாம் பகுதி வளர்ந்து செழிப்புற்று இன்பத்தை அனுபவிக்க பருவம் இறுதியில் உடல் உறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம் இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்கு தக்கபடி சனி பகவானின் செயல்பாடு இருப்பதை ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.

மங்கு சனி

இரண்டு வீடுகளுக்கு  அதிபதி 

சூரியனுடன்( ஆன்மா) சந்திரனுடன்(மனம்)இணைந்திருப்பவர் சனிபகவான். மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற தமோ குணம் அவரிடம் உண்டு.

சூரியனில் (ஆன்மா) இருந்து,உருப்பெற்றது சந்திரன் (மனம்) ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவே 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால் மற்ற ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும் ஆன்மா மற்றும் மனத்துடன் உடலுக்கும் தொடர்பு உண்டு ஆதலால் ராசிச் சக்கரத்தில் சிம்மத்தில் சூரிய னுக்கு மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும் அதேபோல் கடகத்தில் உள்ள சந்திரனுக்கு மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும்.

சூரியனுக்கு சிம்ம ராசி அதற்கு அடுத்த ராசியில் புதன் அதையடுத்து சுக்கிரன்,செவ்வாய் குரு ,சனி என்று இருப்பார்கள் சந்திரனுக்குப் பின் மிதுனத்தில் புதன் அடுத்து  சுக்கிரன்,செவ்வாய் குரு சனி என்று இருப்பார்கள் இவருக்கு கடைசியில் சனி தென்படுவதால் மகரம் கும்பம் சனி அதிபதியாக அமைந்துள்ளார்.

 மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை அடுத்து பொருளாதாரம் ,செயல்பாடு,தெளிவு பெற்று மகிழ்தல், கடைசியில் மறைதல் என அவனது வாழ்க்கையை நிறுவுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன் செவ்வாய் ,குரு ,சனி எனத் தென்படுகிறது இறுதியில் உள்ள சனி மறைவை சந்திக்கிற வேளையை நடைமுறை படுத்துகிறார் ஆகவே அதாவது சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல அழிவு வரும் வேலையை சுட்டிக்காட்டுபவர் .

நம்மை வளர்த்து நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து இன்ப துன்பங்களை கர்ம வினைப்படி செயல்படுத்தி வாழ வைப்பவர் சனி பகவான். நம் உடல் வாழ தகுதியற்ற நிலையில் மறுபிறவி தருவார் பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின் மறைவை இறுதியாக்கி  மோட்சம் தருவார்.

சனீஸ்வரரை தினமும் வணங்கி மனதில் ஒருவராக மாற்றினால் விசேஷ பூஜை தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வழிபட விரும்புவோர் சனிக் கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று எள் முடிச்சு தீபம் ஏற்றி சனிபகவானை வழிபடுங்கள் வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனி பகவானை மனதாரப் பிரார்த்தித்து வாருங்கள்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular