Friday, December 8, 2023
Homeஜோதிட குறிப்புகள்லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள்

லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

 லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள்

 
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்! 
 • சிறுவயதிலேயே மதிப்பு மரியாதை கிடைக்கும் 
 • ஆளுமை திறன் இருக்கும் 
 • அவருக்கு கீழே பணி செய்ய ஆட்கள் தானக அமைந்து விடுவர் 
 • சுப கிரகமாக இருந்து வலுத்தாலும் ,லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாக இருந்து சுபத்துவம் பெற்றால்  பிறக்கும்போதே கோடீஸ்வரராகவும் , வாழ்நாள் முழுவதும் மன்னராகவும் திகழ்வார் ,கடைசி வரை பதவி, பணம், புகழ், நீண்ட ஆயுள் உடன் இருப்பார். 
 • லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றால் நிலையான முடிவெடுக்கும் திறன் இருக்கும்,குழப்பமில்லாத மாணவராக எதையும் சாதிப்பார்
 •  லக்னாதிபதி பாபக் கிரகமாக இருந்தால் அதிகார தோரணையுடன் நடப்பார்
 •  லக்னத்தில் பாவ கிரகங்கள் இணைந்து அல்லது பார்த்து பகை நீசம் பெற்றால் இரக்கமற்றவர்களக  நடந்து கொள்வார் 
 • நோயாளியாகவும், கடனாளராகவும் , பல எதிரிகளை பெற்றவராகவும், ஆயுள்  குறை கொண்டவராகவும் இருப்பார்.
 •  குடும்பம் குடும்பமாக இருக்கும் பூர்வீக சொத்துக்கள் பலவகையில் சிதறிப் போய்விடும் 
 • குடும்ப பாரம்பரியத்திற்கு மாறான குணம் கொண்டவராக இருப்பார்
 லக்னாதிபதி இரண்டில்! 
 • லக்னாதிபதி தன ஸ்தானத்தில் இருந்தால் சிறு வயது முதல் குடும்பத்திற்கான உழைப்பு ,சிக்கனம், அக்கறை, உடன் பிறந்தவர்களுக்கு உதவிகள், பெற்றோர்களை கடைசி காலங்களில் கவனித்தல், விட்டுக் கொடுக்கும் பண்பு, கொடுத்த வாக்கை நேர்மையாக காப்பாற்றும் எண்ணம், கொண்டவராக இருப்பார்.
 •  அவருடைய அறிவுரையை ஆலோசனைகள் பலருக்கு பயன் தரும் 
 • ஆட்சி பெற்ற பாவ கிரக பார்வை இருந்தால் பிடிவாத குணம் இருக்கும்
 •  உண்மையை பேசுகிறேன் என எல்லார் முன்னிலையிலும் மறைக்காமல் வெளிப்படையாக போட்டு உடைத்து விடுவார் 
 • இவர் சேர்த்து வைக்கும் சொத்து குடும்பத்திற்கு அதாவது பரம்பரைக்கே தொடர்ந்து தனத்தை தரும் 
 • பாவ கிரக வலிமை பெற்றால் ஜாதகர் பழி வாங்குவார் 
 • இரண்டாம் இடத்திற்கு பாவ கிரக பார்வை பெற்றால் கொடுத்த வாக்கை மீறுவராகவும் இருப்பார்.

லக்னாதிபதி

 லக்னாதிபதி மூன்றில் நின்றால்! 
 • உடன் பிறந்தவர்கள் மீது அதீத பற்று கொண்டவர் 
 • எதற்கும் அஞ்சாதவர் 
 • பராக்கிரமசாலி 
 • இசை அறிவு குறைவாக இருந்தாலும் இசை ஞானம் மிக்கவர் 
 • சகோதரர் சொல் கேட்டு உடனடியாக உணர்ச்சிகளை வெளிக்காட்டும் நபர்
 • வாய்ப் பேச்சால் எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வார் 
 •  எதிலும் நிறையுவடைய மாட்டார் 
 • பொறாமை குணம் கொண்டவர் 
 • பேசிவிட்டு வருத்தப்படக் கூடியவர்  
 • செல்வாக்கும் சொல்வாக்கும் இருப்பதைக் கொண்டு வாழத் தெரியாதவன்
 •  பாவ கிரக பார்வை சேர்க்கை பெற்றால் யாருக்கு உதவி செய்தாலும் செய்நன்றி மறப்பார்கள் 
 • முன்கோபத்தால் வாழ்க்கையை இழப்பார் 
 • சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் குணம் இருக்காது 
 • எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்பார் 
 • இவரின் நல்ல எண்ணம் நல்ல குணம் பிறருக்கு தெரியாமலே போய்விடும்
 •  6 ,8 ,12 அதிபதி  சம்பந்தமானது கோழையாகி தற்கொலை எண்ணத்தை தரும் மனம் 
 • நொந்தே நோயாளி ஆவார் 
 • கிடைத்த நல்வாழ்க்கையை தக்கவைக்க தெரியாமல் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அடைவார் 
 • ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல் இவர்களது பேச்சை சபைகளில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், நியாயமான கோரிக்கைகளுக்கு கூட நீதி கிடைக்காது 
லக்னாதிபதி  நான்கில்! 
 • நான்காம் இடத்தில் லக்கனாதிபதி நின்றால் தாய் போல குணம் கொண்டவர் 
 • தாய் பாசம் மிக்கவர் 
 • தாயாரின் ஆதரவு ஆசி பெற்று சொகுசான வாழ்க்கை பெறுவார் 
 • சொந்த பந்தம் என கூட்டுக்குடும்ப வாழ்க்கை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை கொண்டவர்கள்
 •  நம்பி வந்தவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் 
 • உறவுகளை மதிக்க கூடியவர் செல்வந்தன் 
 • எண்ணம் போல் வாழ்க்கை அமையும் சுகவாசி 
 • கொடுப்பதை நிறுத்தினால் கெடும் 
 • தாய்வழி சொத்துக்கள் கிடைக்கும் 
 • வீடு வாகன வசதி தானாக அமையும் 
 • அனைவராலும் விரும்பத்தக்க அவர் நீண்ட ஆயுளும் நிறைவான வாழ்க்கை நீடித்த புகழும் அடைவான் 
 • நான்காம் அதிபதி லக்னாதிபதி பாவ கிரக சேர்க்கை பார்வை பெற்றால் சோதனைகளும், வேதனைகளும் போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும் 
 • பிடிக்காத வீடு, நிம்மதி கெடுக்கும்  உறவுகள், பழுதான வீடு, வாகனம் அடிக்கடி கெடுக்கும் சம்பவங்கள் அமையும் 
 • கெட்ட தசாபுக்திகள் நடந்தால் நித்தம் ஒரு பிரச்சனை சுகம் இன்றி தவிக்கும் சூழல் 6, 8, 12ம் அதிபதிகள் சேர்க்கைப் பெற்றால்
 •  நோயால் சுகம் இழப்பு ஏற்படும் 
 • எதிரி ,கடன் ,ஊர்மாற்றம், இடமாற்றம், வாகன மாற்றம் செய்ய நேரும்
லக்னாதிபதி  ஐந்தில்! 
 • பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் லக்னாதிபதி நின்றால் குலதெய்வ அருள் பரிபூரணமாக பெற்றவர் 
 • இளம்வயதிலேயே நிதானம், பொறுமை, பெரியவர்களை மதித்து நடத்தல், பிறர் பொருள், பணம், புகழுக்காக ஆசைப்படாதவர்
 •  கிடைத்ததைக் கொண்டு எல்லாம் நன்மைக்கே என வாழக் கூடியவர்
 •  நல்ல குணத்தை பொறுமையாக சோதித்தாள் சாது மிரண்டால் காடு கொள்ளாது என விரட்டி அடிப்பார் 
 • எல்லோரும் வேண்டும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுபவர் 
 • அன்பாக சகிப்புத்தன்மையுடன், விட்டுக் கொடுக்கக் கூடியவர் 
 • பரம்பரை பெருமை மிக்கவர் 
 • கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர் 
 • ஏமாளியாக இருக்க விரும்பாதவர் 
 • எளிமையாக வாழ்க்கை வாழக்கூடியவர் , எதிலும் நேர்த்தியாக இருக்க முயல்வார் 
 • கெட்ட குணங்களை விரும்பாதவர் 
 • அதிர்ஷ்டத்தால் பெரிய பதவி கிடைத்து , திடீர் புகழும் பிள்ளைகள் பிறந்த பின் வாழ்க்கையில் மாற்றம் பிள்ளைகளால் ஏற்றம் உண்டாகும்
 •  பிள்ளைகளுக்கு தேவையானதை செய்வார் 
 • ஜாதகரால் குழந்தைகளுக்கு அதிக பயன் உண்டு 
 • 6, 8, 12ஆம் அதிபதிகள் தொடர்பு ஏற்பட்டால் 
 • குணத்தை கெடுக்கும், பூர்வீக சொத்துகளை அழிப்பார் 
 • பிறர் துன்பத்தை ரசிப்பார் 
 • குரூர எண்ணத்தால் யாரும் நெருங்க முடியாத இடத்தில் இருப்பார்
 •  பொறாமை ,நோய் ,எதிரி, கடன், அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.

லக்னாதிபதி

 

 லக்னாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால்!  
 •  தனக்கு எதிரி தானேதான் 
 • தான் பேசும்வார்த்தையாலும் , செய்யும்  செயலால் நஷ்டமும், கஷ்டமும் அடைவார்கள் 
 • பொது மக்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படும் நிலை ஏற்படும் 
 • தனக்கு நிகர் தானே என்னும் ஆணவம் இருக்கும் 
 • நோய் ,எதிரி, கடன் அவதிப்படுவார் 
 • எதிரிகளை சம்பாதித்து எதிரிகளால் அழிக்கப்படுவார் 
 • எதிரிகளிடம் அனைத்தையும் இழந்து அடிமையாய் வாழ நேரும் 
 • நோயால் பாதிக்கப்படுவார் 
 • உடலில் அறுவை சிகிச்சை செய்ய நேறும் 
 • லக்கனாதிபதி தசையாக இருந்தால் தோல்வி ஏற்பட்டு, வெற்றியும் பெரிய வெற்றி பெற்ற அதே வேகத்தில் தோல்வியடைந்து ,புகழடைந்த வேகத்தில் காணாமல் போய்விடுவார் 
 • எளிதில் பாதிக்கக்கூடியவர் 
 • கடன் கொடுத்தால் வாங்க முடியாது வாங்கினால் தரமாட்டார்கள்
 •  எதற்கெடுத்தாலும் தடையை சந்திப்பார் 
 • வாழ்க்கை மீது ஒரு வகை இருந்துகொண்டே இருக்கும் 
 • எளிதாக எவரையும் பகைத்துக் கொள்வார் 
 • நிதானமின்றி முடிவுகளை எடுத்து அதன் மூலம் பாதிப்புகளை அடைவார்
 •  பாவ கிரக பார்வை சேர்க்கை இருந்தால் முறையற்ற வாழ்க்கை சட்டத்திற்கு, நியாயத்திற்குப் புறம்பான காரியத்தை ஈவு இரக்கம் இன்றி துணிந்து செய்வார்
 •  யாரை பற்றியும் கவலைப்படாத சுயநலவாதியாக இருப்பார் ஆறாம்  அதிபதி கெட்டு சுப கிரக வலிமை பெற்றால் எதிரியையும் நேசிக்கும் வல்லமை நற்குணம் நிறைந்தவராக இருப்பார்

இந்த கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க .

லக்னாதிபதி 12பாவங்களில் நின்ற பலன்கள்-தொடர்ச்சி
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular