Sunday, October 1, 2023
Homeஜோதிட குறிப்புகள்ராகு கேது நின்ற பலன்கள்

ராகு கேது நின்ற பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

 ராகு கேது நின்ற பலன்கள் 

உங்கள் ஜாதகத்தில் உயிருள்ள கட்டங்கள்  எது தெரியுமா ?
1-3-4-5-6-7-9-11 இதெல்லம் உசுருள்ள இடங்கள் 
 
1-நீங்க 
3-இளைய சகோதரம் 
4-தாய் 
5-குழந்தைகள் 
6-தாய்மாமன் 
7-மனைவி 
9-அப்பா 
11-மூத்த சகோதரம் 
 
இந்த ராகு கேதுக்கள் மேற்கண்ட உசுருள்ள இடத்தில இருந்தால் என்ன செய்யும்?
 
ராகு இருந்தா உருவாக்குவார் ,எல்லாமே மூடு மந்திரமா இருக்கும் ,பகல்ல தூங்கி வழிவாங்க,ராத்திரியில செம ஷார்ப் ஆகிருவாங்க ,மேலைநாட்டு பண்பாடு ,பழக்கவழக்கங்களை ஆதரிப்பாங்க ,சொந்த இனம் ,மதம் ,மொழி ,சாதியினரோடு என் குடும்பத்தாரோடு கூட ஓட்டுதல் இருக்காது .
 
எந்த வேலையாயிருந்தாலும் ஊரு நாட்டுல யாரும் செய்யாத மாடல்ல  செய்ய நினைப்பாங்க ,ராகு பலமாக இருந்தால் கொஞ்சம் காலம் சமூகத்தால அவதிப்பட்டாலும் அதே சமூகத்தால அங்கீகரிக்க படுவாங்க,வெளிநாட்டுல இருக்கலாம்,ஈஸி மணி மேல கவர்ச்சி ,சட்ட விரோத செயல்கள் ,சதி செய்யலாம்,சதிக்கு பலியாகலாம் .
 
 
 

1-7 ல் ராகு கேது(1-7il Rahu -Kethu ) 

  • நல்லவனெல்லாம் கெட்டவனாக தெரிவார்கள் ,கெட்டவனெல்லாம் நல்லவராக  தெரிவார்கள் ,
  • ஞாபகசக்தி இருக்காது ,
  • ஜட்ஜிங்  சரிஇருக்காது ,சந்தேக புத்தி வந்து விடும் ,
  • மனதளவில் சில தீய எண்ணங்கள் இருக்கும்

2-8ல் ராகு கேது(2-8il  Rahu -Kethu ) 

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது .கேது ராகுன்னா தெரியும்மில்ல விஷம்ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும்(அ )நீங்க சாப்பிடுற சாப்பாடு விஷமா இறங்கணும் .அதான் தலையெழுத்து .
 

  • பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது .
  • இவருக்கு பேச்சு ,வாய் ,கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம் 
  • குடும்பத்திற்கு பண நஷ்டம் ,கடன் ஏற்படலாம் ,கொள்ளை போகலாம்
  • எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் 
  • குடும்பத்தில் கலகம்  ஏற்படலாம் 

3-9ல் ராகு கேது(3-9il  Rahu -Kethu)  

  • 3ல் உள்ள ராகு /கேது  அதீத மனோ தைரியத்தை  கொடுக்க /கேட்க கூடாத கதையெல்லாம் கேட்டு /போக கூடாத இடத்துக்கெல்லாம்  போவீங்க 
  • எதிர் காலத்தில் அப்பாவின் சொத்து ,முதலீடு ,சேமிப்புகளை  நிர்வகிக்கும் வாய்ப்பு  வரும் ,
  • எவ்வளவு இழந்தாலும் துணிவே  துணைன்னு போராடி மீண்டும் சொத்து ,முதலீடு ,சேமிப்புன்னு செட்டில் ஆவீங்க 
  • அடிக்கடி திடீர்னு தியானம் யோகா இன்னு போவீங்க 

4-10ல் ராகு கேது(4-10il Rahu -Kethu )

  • தாய்க்கு உடல் நலிவு ,
  • வீட்டில் ஊமை கோபங்கள் ,வாகனம் தொடர்பான சில குழப்பங்கள் ஏற்படும் ,
  • ஆன்ம வித்தையில் ஈடுபாடு ஏற்படும் ,  

5-11ல் ராகு கேது (5-11il  Rahu -Kethu)       

  • மறதி ,புத்திக்குறைவு ,ஈஸி  மணிமேல் கவர்ச்சியால் இழப்பு 
  • வெளிநாட்டு தொடர்புகள் ,பிற மதத்தார் ,பிற மொழியினரால் ,சினிமா ,லாட்டரி  ,போன்றவற்றில் அனுகூலம் ஏற்படும் ,
  • நன்மைகள் எந்த அளவுக்கு நடந்தாலும் தீமைகளும் அந்த அளவுக்கு நடக்கும்

6-12ல் ராகு கேது(6-12il  Rahu -kethu )   

  • வாதம் ,விவாதம் ,விவகாரம் எதிலும் லேசாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் 
  • கடனுக்கு அஞ்சார் 
  • சத்ரு ,ரோக ,ருண உபாதைகளை இழுத்துவிட்டு கொண்டு மனதளவில் குமைவதும்  ,தூக்கமின்மையும் ஏற்படலாம் ,
  • இறுதியில் வெற்றி ஜாதகருக்கே… 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular