Friday, March 1, 2024
Homeஜோதிட தொடர்பதவி உயர்வுக்கு வழி வகுக்கும் லக்ன வழிபாடுகள்

பதவி உயர்வுக்கு வழி வகுக்கும் லக்ன வழிபாடுகள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பதவி உயர்வுக்கு வழி வகுக்கும் லக்ன வழிபாடுகள்

 • பதவியில் பணியில் இருப்போரின் வாழ்க்கையின் லட்சியம் தனது துறையில் உயர்ந்த ஸ்தானத்தை அடைய வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் இந்த பேறு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
 •  பூர்வபுண்ணியமும், ஜாதகத்தில் பதவி யோக அமைப்பு நன்றாக இருந்தால் இந்திரப் பதவிக்கு நிகரான உயர்பதவி வாய்ப்பு தேடி வரும். இதுகுறித்து ஜோதிட நூல்கள் சில விளக்கங்களை கூறுகின்றன!
 • ஜாதகத்தில் 5-ஆம் வீடும் 5-ம் வீட்டோனும் குருவும் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பலன் காரணமாக பதவி யோகத்தை அடைவார்.
 • செவ்வாய் சிம்மத்திலும் குரு மேஷத்தில் சூரியன் தனுசிலுமாக ஒருவர் வீட்டில் மற்றொருவர் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை ஆக இருந்தாலும் உயர் பதவி கிடைக்கும். இவர்கள் மூவருமே ராஜ கிரகங்கள் என்பதால் ராஜ யோகம் சித்திக்கும். அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் உள்ள அமைச்சர் பதவி கிடைக்கும்.
 • சந்திரனுக்கு 6,7,8 குரு சுக்கிரன் புதன் அமர்ந்தால் ‘அதி யோகம்’ அமையும் ஆனால் ஓய்வு பெற 5 ஆண்டுகளே இருக்கும் நிலையில்தான் பதவி உயர்வு வந்துசேரும் ஓரிரு நாட்களே பதவி சுகத்தை அனுபவிக்கும் நிலையும் இந்த யோகம் பெற்றவருக்கு அமைய வாய்ப்பு உண்டு
 • 5-ல் சூரியனும் புதனும், 2ல் சனி, 12-ல் குரு அமையப் பெற்றிருந்தால் ‘சமுத்திர யோகம்’ வாய்க்கும் இது இந்த ஜாதகருக்கு அரசு பதவி மூலம் நன்மைகளை வாரி வழங்கும்
 • மேஷ லக்னமாகி மேஷ லக்னத்தில் சூரியனும்;துலாத்தில் சந்திரனும் சனியும்; தனுசில் குரு அமர்ந்து இருந்தால் அரசாங்க பதவி உயர்வு கிடைக்கும்.
 • மகரம் லக்னமாக இருந்து சனியும் செவ்வாயும் சேர்ந்து இருக்க சூரியனும் சந்திரனும் தனுசில் அமர்ந்திருந்தால் அரசு பதவியில் மென்மேலும் உயரலாம்
 • செவ்வாயும் சனியும் லக்னம், 5 அல்லது 10 அமர்ந்திருக்க வளர்பிறை சந்திரன் 9-ல் அமர்ந்திருந்தால் இப்படியான கிரக அமைப்பைப் பெற்றவர்கள் அரசு மற்றும் தனியார் பணிகளில் பதவி உயர்வு இல்லாமல் அடிக்கடி இடமாற்றங்களுக்கு ஆளாக நேரிடும்
 • பொதுவாக 2-க்கு உரிய கிரகம் பலவீனமாகி அந்த கிரகத்தின் தசை நடைபெறுகிற காலத்தில் அரசு பதவியில் இருப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாது. இதன் பொருட்டு வீண் செலவும் அலைச்சலுமே மிஞ்சும்.
 இங்கனம் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் பலமின்றி இருப்பவர்கள் என்ன செய்யலாம்? இலக்கண ரீதியாக சில எளிய வழிகள் உங்களுக்காக!
 • மேஷம் மற்றும் ரிஷப லக்கினத்தில்  பிறந்த அன்பர்கள் சனிக்கிழமைகளில் எள் முடிச்சு தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கி வரம் பெறலாம்.
 •  உத்திர நட்சத்திர நாட்களில் சாஸ்தா துதிப் பாடலைப் பாடி வழிபடுவதாலும் பலன் கிடைக்கும் .அருகில் இருக்கும் அனுமனை தரிசித்து வழிபட்டு வந்தாலும் பதவியில் முன்னேற்றம் உண்டாகும்.
 •  மிதுனம் மற்றும் மீன லக்னத்தில் பிறந்தவர்கள் குரு பகவானை வழிபடுவது விசேஷம் அத்துடன் சிவாலயத்தின் கோஷ்டத்தில் தென் முகமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு வில்வம் சார்த்தி, கொண்டைக்கடலை சுண்டல் சமர்ப்பித்து வழிபட்டால் செய்யும் பணியில் உரிய அங்கீகாரமும், விசேஷ சலுகைகள் கிடைக்கும். விரைவில் உங்க பெயர் உயர் பதவிக்கு பரிசீலிக்கப்படும்.
 •  கடகம் மற்றும் கும்ப லக்கினக்காரர்கள் செவ்வாய் கிழமைகைகளில் சர்க்கரைப்பொங்கல் படைத்து நெய் விளக்கு ஏற்றி வைத்து முருகக் கடவுளை வழிபடலாம் அத்துடன் ஒருமுறை திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை தரிசித்து வழிபட்டு வரம் பெற்று வரலாம்
 • சிம்ம லக்னகாரர்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும், சுக்கிரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் கிடைக்கப் பெறலாம். வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி வைத்து கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பது விசேஷம்.
 •  கன்னி மற்றும் தனுசு லக்னகாரர்கள் திருமாலையும் நவக்கிரகங்களில் புதன் பகவானை வழிபட வேண்டும். ஒருமுறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தால் ஏற்றங்கள் உண்டாகும்
 •  துலாம் மற்றும் மகர லக்னகாரர்கள் சந்திரனையும், பராசக்தியும் வழிபடவேண்டும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் அருகிலுள்ள சிவாலயத்தில் அருளும் அம்பாளுக்கு வெண் மலர்கள் சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் பதவி யோகம் ஸித்திக்கும்
 •  விருச்சிக லக்னகாரர்கள் சூரியனையும், ருத்திரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும். இவர்கள் ஒருமுறை சூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம் இதனால் பணியில் தடைகள், ஏமாற்றங்கள் ,அதிக வேலைப்பளு, சூழ்ச்சிகள், வீண்பழி முதலான பிரச்சனைகள் நீங்கும்
 இந்திரன் போகங்களுக்கு அதிபதி.ஆக, அனைவரும் கீழ்காணும் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி இந்திரனை தியானித்து நல்லருள் பெறலாம்
“ஈம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே ஸஹஸ்ரக்ஷய தீமஹி தந்நோ இந்திர :ப்ரசோதயாத்”
 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்514அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்164ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்99ஆன்மிக தகவல்91அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்50பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25கோவில் ரகசியங்கள்20சிவன் ஆலயங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராசிபலன்18அற்புத ஆலயங்கள்18வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213புத்தாண்டு பலன்கள்-202213சுபகிருது வருட பலன்கள்13ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10Gem Stone8பெருமாள் ஆலயங்கள்8தேவாரத் திருத்தலங்கள்7கருட புராணம்7திருமண பொருத்தம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்4தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மார்ச் மாத ராசி பலன் 20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular