Friday, July 26, 2024
Homeதோஷங்களும்-பரிகாரமும்செவ்வாய் தோஷம்- விதிவிலக்குகள்- பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம்- விதிவிலக்குகள்- பரிகாரங்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

செவ்வாய் தோஷம் சில விதிவிலக்குகள் 

செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்க செவ்வாயின் ஸ்தான பலனை வைத்து விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன அதன்படி அமைந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று அறியலாம்

  • கடகம் சிம்மம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
  • செவ்வாய் இருக்கும் 2-ம் இடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் செவ்வாய்தோஷமில்லை
  • செவ்வாய் இருக்கும் 4-ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆனால் செவ்வாய் தோஷமில்லை
  • செவ்வாய் இருக்கும் 7-ம் இடம் கடகம் ,மகரம் ஆனால் செவ்வாய் தோஷமில்லை
  • செவ்வாய் இருக்கும் 8-ம் இடம் தனுசு, மீனமாகி இருந்தால் செவ்வாய் தோஷமில்லை
  • செவ்வாய் இருக்கும் 12-ஆம் இடம் ரிஷபம் ,துலாம் ஆனால் செவ்வாய் தோஷமில்லை
  • சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமில்லை
  • குருவுடன் சேர்ந்து செவ்வாய் இருந்தால்  செவ்வாய் தோஷம் இல்லை
  • சந்திரனுடன் சேர்ந்து செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை
  • புதனுடன் சேர்ந்தாலும் புதன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை
  • சூரியனுடன் செவ்வாய் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை
செவ்வாய் தோஷம்

செவ்வாய் அமைந்துள்ள ராசியின் அதிபதி லக்னத்திற்கு 1 ,4 ,5 ,7 ,9 ,10 ஆகிய வீடுகளில் இருந்தால் தோஷமில்லை

(உ.த ;கும்ப லக்ன ஜாதகருக்கு கும்ப ராசியில் செவ்வாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம் அவரது ஜாதகத்தில் சனி துலாம் ராசியில் இருப்பதாகக் கொள்வோம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டு என்று தோன்றும் ஆனால் கும்ப ராசியின் அதிபதியான சனி லக்னத்திற்கு 9ம் வீடான துலாத்தில் இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்)

8, 12-ல் அமைந்த செவ்வாய் இருக்கும் ராசி ஆனது மேஷம் ,சிம்மம் ,விருச்சிகம் என்றால் செவ்வாய் தோஷம் இல்லை

செவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷம், விருச்சிகம் ஆகியவை உச்ச வீடு மகரம் எனவே மேஷம் ,விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகன் அல்லது ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்

செவ்வாயின் நட்பு கிரகங்களான சூரியன் சந்திரன் குரு இவர்களின் வீடான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை

செவ்வாய் தோஷம் சில பரிகாரங்கள்

செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தை சேர்ப்பது நல்லது என்பதே எனது கருத்து ஏனெனில் உணர்ச்சிக்கூறியதே செவ்வாய் கிரகம் உடல் மற்றும் மன உணர்வுகளை சமமாக இருவரும் வெளிப்படுத்தும் போது கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள் எழாது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம் புளிச்ச கீரையை உணவில் குறைவாக சேர்ப்பது நல்லது

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கம் உள்ள (நிலம், சகோதரர்கள் முதலான) விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக் கொண்டால் செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்

அதேபோல் இயன்ற வரையிலும் ரத்ததானம் செய்யுங்கள் விபத்தில் சிக்கியவருக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்

செவ்வாய் தோஷம்

பூர்வீக சொத்துப் பிரிவினையில் சகோதர சகோதரிகளையும் பெற்றோரையும் ஏமாற்றி அபகரிக்க முயற்சி செய்யாதீர்கள் முதல் சொத்தை நிலமாக வாங்காமல் கட்டிய கட்டடமாக வாங்குவது சிறப்பு

நிறுவனத்தை நடத்துபவர் ஆக இருந்தால் தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன்பே கூலிகளை தந்து விடுங்கள்

ஊர் காவல் ராணுவம் வரையிலும் காவல் பணியை ஆட்டுவிப்பது செவ்வாய்தான் எனவே ராணுவம் போலீஸ் என காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் செய்வது நன்று

ஊர் எல்லையில் கோயில் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்கு செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாத்தி வணங்குங்கள். வீட்டில் வில்வம் ,வன்னி மரக்கன்றுகள் நட்டு பராமரியுங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அனுதினமும் முருகப்பெருமானை வழிபட அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை செம்மையுறும்

கடன் தொல்லை அகற்றும் மங்கல ஸ்தோத்திரம்

கடன் இல்லாத வாழ்க்கை தான் கவலை இல்லாத வாழ்க்கை பொருளாதார ரீதியாக நாம் ஏற்படுத்திக் கொள்ளும் கடன் பிரச்சனைகள் நமது ஒட்டுமொத்த நிம்மதியையும் அழித்துவிடும் கடன் இல்லாமல் வாழ என்ன செய்யலாம்?

 செவ்வாய் பகவானை வழிபட வேண்டும் என அறிவுறுத்துகிறது ஸ்காந்த புராணம்

 செவ்வாயின் திருவருள் இருந்தால் கடன் இல்லாத வாழ்க்கை அமையுமா ஆச்சாரியார் உபதேசம் செய்த அற்புதமான ஸ்தோத்திரம் ஒன்று கந்த புராணத்தில் உள்ளது

அதை தினமும் பிரயாணம் செய்து செவ்வாய் பகவானை வழிபட பூமியில் குபேரனைப் போல வாழலாம்; கடன் நீங்கும் மிக அற்புதமான அந்த ஸ்தோத்திரத்தின் இரண்டு ஸ்லோகங்கள் இங்கே உங்களுக்காக

“மங்களோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத;

ஸ்திராஸனோ மஹாகாய: ஸரவகர்ம விரோதக:”

கருத்து: 

மங்களத்தை கொடுப்பவர், பூமியின் புத்ரன், கடனை போக்குபவர், பொருளை கொடுப்பவர் ,ஸ்திரமான ஆசனத்தை உடையவர், பெருத்த சரீரம் உடையவர்,சர்வ கர்மாக்களையும் தடுப்பவர் செவ்வாய்பகவான்.

“லோஹிதோ லோஹிதாக்ஷஸ்ச ஸாமகானாம் க்ருபாகர:தராத்மஜ: குஜோ பெளமோ பூதிதோ பூமிநந்தன:”

கருத்து :

சிவந்த நிறமுள்ளவர், சிவந்த கண்களை உடையவர், சாமகானம் செய்கிறவர்களுக்கு கருணை செய்பவர், பூமியின் புத்திரர் செவ்வாய், ஐஸ்வர்யத்தையும்  பூமிக்கு ஆனந்தத்தையும் கொடுப்பவரான செவ்வாய் பகவானை வணங்குகிறேன்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular