Friday, July 26, 2024
Homeஜோதிட தொடர்மருத்துவ துறையில் வெற்றி தரும் கிரக நிலைகள்

மருத்துவ துறையில் வெற்றி தரும் கிரக நிலைகள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மருத்துவ துறையில் வெற்றி தரும் கிரக நிலைகள்!

பல பிறவிகளாய் உடலெடுத்து உயிர் சுமந்து துன்பக் கடலில் மிதந்து ‘இறைவா இனி பிறவாமை வேண்டும்’ என்று வேண்டுதல் வெளிப்படுத்திய ஞானிகளுக்கும், யோகிகளுக்கும், சித்தர்களுக்கும் பிறவிப் பிணியை நீக்கி முக்தி எனும் கனியை வழங்கும் இறைவனும் ஒரு மாபெரும் மருத்துவரே!
ஒருவன் மருத்துவ ஞானம் பெற்று மகத்தான சாதனை புரிய வேண்டுமெனில் அவனது ஜாதகத்தில் மருத்துவ கிரகங்களான சூரியன், செவ்வாய், கேது மூவரும் பலம் பெற வேண்டும். இவர்கள் பலவீனம் அடைய கூடாது. இவர்கள் மூவருக்கும் பவர் தரக்கூடிய சந்திர பகவான் பலம் பெற்று திகழ வேண்டும்.
ஒருவருக்கு மருத்துவ ஞானம் மட்டும் தரக்கூடிய கிரக நிலைகளையும் மருத்துவத்துறையில் தன் தொழிலாக, ஜீவனாக கருதி அதில் வெற்றி பெறுவதற்கு உரிய கிரக நிலைகளையும் காண்போம்:
மருத்துவ ஞானம் தரக்கூடிய கிரக நிலைகள் 
  • ஒருவரின் ஜாதகத்தில் சந்திர பகவான் லக்னத்திற்கு 3, 5 ,7 ,11 ஆகிய இடங்களில் நின்று அவர் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் அவருக்கு மருத்துவத்துறை ஞானம் சிறப்பாக வரும்.
மேலும் சந்திர பகவான் நின்ற வீட்டோனும் சந்திரனுக்கு வீடு தந்தவரும் பலம் பெற வேண்டும். மேற்படி குறிப்பிட்ட ஸ்தானங்களில் சந்திர பகவான் வலிமையாக அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகனுக்கு மருத்துவத் துறையில் நுழைவதற்கு மருத்துவ சீட் தகுதியின் அடிப்படையில் கிடைத்துவிடும்.
  • ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி ஆகவோ அல்லது உச்சமாகவோ அமர்ந்து இருக்க வேண்டும் அல்லது பத்தாம் இடத்தில் சூரிய பகவான் சாரம் பெற்று அமர்ந்து இருக்க வேண்டும் அல்லது கேது பகவான் சாரம் பெற்று அமர்ந்து இருக்க வேண்டும்.
மேலும் செவ்வாய் பகவானுடன் கேதுவும் சேர்ந்து பத்தாம் இடத்தில் இருக்கவேண்டும். பலம் பெற்ற செவ்வாய் பகவான் ஒருவருக்கு மருத்துவத் துறையில் பெரும் ஞானத்தை தருவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
  • ஒருவரின் ஜாதகத்தில் சூரிய பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சமாக அமர்ந்து இருக்க வேண்டும். அல்லது பத்தாம் இடத்தில் செவ்வாய் சாரம் பெற்று அமர்ந்து இருக்க வேண்டும். அல்லது கேது பகவான் சாரம் பெற்று பத்தாம் வீட்டில் அமர்ந்து இருக்க வேண்டும்.
மேலும் சூரிய பகவான் கேதுவுடன் சேர்ந்து பத்தாம் இடத்தில் நிற்க வேண்டும் சூரிய பகவான் நீசம் பெறாமல் பலம் பெற்று அமர்ந்து அவருக்கு எந்த விதத்திலாவது கேது, செவ்வாய் தொடர்பு இருந்து விட்டால் ஒருவருக்கு மருத்துவத் துறையில் சிறந்த அறிவை அள்ளித் தருவார் என்பது அனுபவத்தில் உணர்ந்த ஆனித்தரமான உண்மை.
  • ஜாதகத்தில் கேது பகவான் பத்தாம் இடத்தில் அமர்ந்து அந்த வீட்டோன் சூரிய பகவான் ஆகவோ அல்லது செவ்வாய் பகவான் இருக்க அவர்கள் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ நாளில் அமர்ந்து பத்தாம் இடத்தை பார்த்தால் அவருக்கு மருத்துவ ஞானம் வரும்
மேலும் 10 ஆம் வீட்டில் கேது பகவான் அமர்ந்து அவர் நின்ற சாரம் சூரியபகவான் ஆக வந்தாலும் அல்லது செவ்வாய் பகவானாக வந்தாலும் அல்லது கேதுபகவான் தன் சுய சாரத்தில் அமர்ந்து அவரை சூரியன் செவ்வாய் பார்த்தாலும் ஒருவருக்கு மருத்துவ அறிவு மலைபோல் உயர்ந்து இருக்கும்
  • ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி சுக்கிரன் ஆகவோ அல்லது புதனாகவோ வந்து பத்தில் அமர்ந்தால் அல்லது நாளில் அமர்ந்து பத்தாம் இடத்தைப் பார்த்தாலும் இவர்களுடன் சூரியன், செவ்வாய், கேது தொடர்பு எந்தவிதத்திலாவது இருந்துவிட்டால் அவருக்கு மருத்துவ ஞானம் வரும்
  • ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி குருபகவான் அல்லது சனி பகவான் வந்து பத்தில் அமர்ந்தால் அல்லது 4-இல் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்த்தாலும் இவர்களுடன் சூரியன் செவ்வாய் கேது இணைவு அல்லது சாரம் இவை சம்பந்தப்பட்டால் அவருக்கு மருத்துவ அறிவு மிகுந்து இருக்கும்
  • ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒருவராக வந்து அவருடன் சூரியன் செவ்வாய் கேது தொடர்பு இருந்துவிட்டால் (பார்வை இணைவு சாரம்) அவருக்கு மருத்துவ ஞானம் இயற்கையாகவே இருக்கும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular