Friday, July 26, 2024
Homeஜோதிட தொடர்உங்கள் கஷ்டங்கள் தீர்க்கும் இஷ்டதெய்வம்

உங்கள் கஷ்டங்கள் தீர்க்கும் இஷ்டதெய்வம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

உங்கள் கஷ்டங்கள் தீர்க்கும் இஷ்டதெய்வம்


போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஒருவர் வாழ்வில் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு அறிவு மனோ பலம் பண பலம் ஆயுள் பலமும் துணைபுரிகின்றன இத்தனை சிறப்பாக கிடைக்க வேண்டுமெனில் ஒருவருக்கு பூர்வ புண்ணிய பலமும், இஷ்ட தெய்வத்தின் அருளும் அவசியமாக அமைய வேண்டும். 

 ஒருவரின் கஷ்டங்களை தீர்க்கும் இஷ்டதெய்வத்தை தெரிந்து கொள்வதற்கும் அதன் பலத்தை கூட்டி கொள்வதற்கும் நமது ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

ஜாதகத்தில் அவருடைய பூர்வ புண்ணிய பலத்தை அறிந்து கொள்வதற்கும் அவரின் இஷ்ட தெய்வத்தை தெரிந்து கொள்வதற்கும் 5ம் இடத்தையும் 5ம் அதிபதியின் பலத்தையும் காண வேண்டும்

நமது ஜோதிட சாஸ்திரத்தை  உருவாக்கிய ஜோதிட ஞானிகள் நவக்கிரகங்களுக்கு உரிய அதி தேவதைகளை நமக்கு அடையாளம் காட்டி சென்றுள்ளனர்.

சராசரி மனிதர்களின் சங்கடங்கள் தீரவும், தோல்விகளை தொடர்ந்து சந்திக்கும் மனிதர்கள் வெற்றிகளை பெறவும் மன கவலைகள் தீர்ந்து மகிழ்வுடன் வாழவும் அதி தேவதைகளின் அருளும், ஆசீர்வாதமும் வேண்டும் என்பது மகான்களின் மகத்தான நோக்கமாக இருக்க வேண்டும். வேறு என்னவாக இருக்க முடியும்.

இஷ்டதெய்வம்

 இனி நவ கிரகங்களின் அதிதேவதை யார் என்று பார்ப்போம்

  • சூரியனுக்கு -சிவன்
  • சந்திரனுக்கு-பார்வதி
  • செவ்வாய்க்கு-சுப்பிரமணியர் 
  • புதனுக்கு-மகாவிஷ்ணு
  • குருவுக்கு-தக்ஷிணாமூர்த்தி 
  • சுக்கிரனுக்கு-லட்சுமி
  • சனிக்கு-சாஸ்தா, ஆஞ்சநேயர்
  • ராகுவுக்கு-காளி
  • கேதுவுக்கு-விநாயகர் 
ஒவ்வொரு லக்னத்திற்கும் உரிய இஷ்ட தெய்வம் யார் என்று பார்ப்போம்

மேஷம்

மேஷ லக்னத்துக்கு 5-ம் அதிபதி சூரியன் இவர் 5ம் இடத்தில் ஆட்சி பெற்றாலும், லக்னத்தில் பலம் பெற்றாலும் 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் சிவபெருமானை இஷ்ட தெய்வமாக வணங்கி வரலாம்.அதனால் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் ,பெருகும்

ரிஷபம்

ரிஷப லக்கினத்திற்கு 5-ம் அதிபதி புதன் இவர் ஐந்தாமிடத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும், மகா விஷ்ணுவை வணங்கி வரலாம். அதனால் தொழிலில் மேன்மையும், சிறப்பும் வந்து சேரும்

மிதுனம்

மிதுன லக்கினத்திற்கு 5-ம் அதிபதி சுக்கிர பகவான். இவர் 5ல் ஆட்சி பெற்றாலும், 10ல் உச்சம் பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் மகாலட்சுமியை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம். அதனால் அறிவில் தெளிவும், செயலில் உறுதியும், நிலைப்படும்.

கடகம்

கடக லக்னத்திற்கு 5ஆம் அதிபதி செவ்வாய் பகவான். இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், ஏழில் உச்சம் பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் சுப்பிரமணியரை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம். அதனால் ஞானம்,புகழ்,செல்வம், கந்தன் அருள் பெருகும்.

இஷ்டதெய்வம்

சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு 5-ம் அதிபதி குருபகவான். இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் தட்சிணாமூர்த்தியை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் வாழ்வில் பொருளாதார மேன்மை, நினைத்ததை நிறைவேற்றும் தன்மை இரண்டும் வலிமை பெறும்.

கன்னி

கன்னி லக்னத்திற்கு 5-ம் அதிபதி சனி பகவான்.இவர் 5ல் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் சாஸ்தாவை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் மன உறுதி, மனத்தெளிவு, வெற்றி மனப்பான்மை உண்டாகும்.

துலாம்  

துலாம் லக்கினத்திற்கும் 5-ம் அதிபதி சனி பகவான் ஆக வருகிறார் இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், நாளில் நின்றாலும்ஸ்  லக்னத்தில் உச்சம் பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் ஆஞ்சநேயரை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் ஆன்மபலம், ஆற்றல், மனோ சக்தி பெருகும், எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்

விருச்சிக லக்னத்திற்கு 5-ம் அதிபதி குருபகவான் இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் தட்சிணாமூர்த்தியை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் சாதுக்கள் தரிசனம், சித்தர்கள் வழிபாடு, கிடைப்பதுடன் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.

இஷ்டதெய்வம்

தனுசு

தனுசு லக்னத்திற்கு 5-ம்அதிபதி செவ்வாய் பகவான். இவர் 5ல்ஆட்சி பெற்றாலும், இரண்டில் உச்சம் பெற்று 5ஐ பார்த்தாலும் கந்தவேளை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம். அதனால் இவரின் வார்த்தைகள் மந்திரமாகும், வாழ்க்கை தவமாகும், நினைத்தது நிறைவேறும் ,செல்வம், புகழ்ஸ் ஞானம் பெருகும்.

மகரம்

மகர லக்னத்திற்கு 5-ம் அதிபதி சுக்கிர பகவான் இவர் 5ல் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் மகாலட்சுமியை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம். அதனால் தன விருத்தியும் ,செல்வ செழிப்பும் பெருகும்.

கும்பம்

கும்ப லக்னத்திற்கு 5-ம் அதிபதி புதன் பகவான். இவர் 5ல் ஆட்சி பெற்றாலும்,5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் மகாவிஷ்ணுவை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் நுணுக்கமான அறிவு, சமயோஜித புத்தியும், பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெருகும்.

மீனம்

மீன லக்னத்திற்கு 5-ம் அதிபதி சந்திர பகவான். இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் பார்வதியை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம்.அதனால் உடல் வலிவு, மனத்தெளிவுஸ் தொழில் மேன்மை உண்டாகும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular