Thursday, April 25, 2024
Homeஜோதிட தொடர்தசாபுத்தி பரிகாரங்கள்-குரு தசை-சனி தசை

தசாபுத்தி பரிகாரங்கள்-குரு தசை-சனி தசை

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

தசாபுத்தி பரிகாரங்கள்

குரு மகா திசை 

குரு திசையின் காலம் 16 வருடம் ஜாதகத்தில் குரு நீசமாக இல்லாவிடில் குரு திசை ஓரளவு நல்ல பலன்களைத் தரும். பொதுவாக குரு திசை பாதுகாப்பாகவே அமையும். இஷ்ட தெய்வ, குலதெய்வ வழிபாடு, சிவ வழிபாடு நன்மை தரும். சித்தர்களை வணங்குவது நன்று. உங்களுக்கு தெரிந்த மந்திர ப்ரயாணம் நன்று.
 வியாழக்கிழமைகளில் பரிகாரம் செய்யவும்
குருதிசை-குருபுத்தி(2வருடம் 9 மாதம் 18 நாட்கள்)
 காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் பசுக்களுக்கு தீவனம், கோசாலைகளுக்கு சேவை மற்றும் காணிக்கை தருவது நல்லது.
குரு தசை-சனி புத்தி(2 வருடம் 6 மாதம் 12 நாள்) 
பகல் 12:00 மணி முதல் 6:00 மணிக்குள் பசுவுக்கு மஞ்சள், வாழைப்பழம் யாருக்காவது பலாப்பழம் மற்றும் பசு தொழுவ பழுது செலவு போன்றவை ஏற்புடையது
குரு தசை-புதன் புக்தி(2 வருடம் 3 மாதம் 6 நாள்)
10:00மணி முதல் 11:00 மணிக்குள் படிக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் பழம் வாங்கிக் கொடுக்கவும். அல்லது பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிபவர்களுக்கு மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் ஏதேனும் கொடுக்கவும்
குரு தசை-கேது புத்தி(11 மாதம் 6 நாட்கள்)
வியாழக்கிழமையில் எந்த நேரத்திலும் வயதான ஆசிரியர்கள், வைத்தியர்கள், பிள்ளையார் கோவில் அர்ச்சகர்கள் என யாருக்கேனும் ஆடை தானம் செய்யுங்கள். அருகில் சித்தர் கோவில் இருப்பின் அங்கு அன்னதானம் செய்வது சிறப்பு.
குரு தசை-சுக்கிர புத்தி(2வருடம் 8 மாதம்) 
காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் விசேஷ தானமாகும்.
குரு தசை-சூரிய புக்தி(9 மாதம் 18 நாட்கள்)
 காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் மஞ்சள் அல்லது சோளம் தானம் செய்யவும்
குரு தசை-சந்திர புத்தி(1 வருடம்4மாதம்) 
காலை 11மணி முதல் 12 மணிக்குள் வயதானவர்களுக்கு மருந்து தானம் நல்லது.
குரு தசை-செவ்வாய் புக்தி (11 மாதம் 6 நாட்கள்)
காலை 6:00 மணி முதல் 8:00 மணிக்குள் காளை அல்லது பசு மாட்டுக்கு தீவனம் தரவும் அல்லது பால் கொண்டு வருபவருக்கு ஏதேனும் தொகை கொடுக்கவும்
குரு தசை-ராகு புத்தி(2வருடம்4 மாதம் 24 நாட்கள்)
 1:30மணி முதல் 3:00 மணிக்குள் பிற மத இன வழிபாட்டுத்தள குருமார்களுக்கு உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வாங்கிக் கொடுங்கள் அல்லது ஆடுகளுக்குத் தீவனம் கொடுக்கவும்

 

சனி மகா தசை

சனிதசை காலம் 19 வருடங்கள் சனி உங்கள் ஜாதகத்தில் யோகாதிபதியாக இருந்தால் மிக நல்ல பலன் தரும். நல்ல உத்தியோகம்-தொழில் சிறப்பும் கிடைக்கும். நான்காவது சனி தசை நடந்தால் சற்று கவனமாக இருத்தல் அவசியம். சனி தசையின் காலத்தில் சனீஸ்வர வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, பைரவர் மற்றும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும். சனி தசையில் சந்திர புத்தியின் போது கவனம் தேவை.
சனி தசை-சனி புத்தி(3 வருடம்3நாட்கள்)
சனிக்கிழமை காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் இரும்பு பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரம் தானம் செய்யவும் அதில் கொஞ்சம் எள் மிட்டாய் ,எள் பர்பி வைத்துக் கொடுங்கள். சனிக்கிழமை தான் இதை செய்ய வேண்டும்.
 
சனி திசை-புதன் புத்தி(2 வருடம் 8 மாதம் 9 நாட்கள்)
 காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் உங்கள் வீட்டில் வேலை செய்யும் நபர்களின் குழந்தை நவதானியம் அல்லது நவதானியக் கஞ்சி பாக்கெட் கொடுக்கவும்
சனி தசை-கேது புத்தி(1வருடம் 9 மாதம் 9 நாட்கள்)
 சனிக்கிழமை எந்த நேரத்திலும் செடி விதைகள் அல்லது கிழங்குகளை யாருக்காவது கொடுக்கவும்
சனி திசை-சுக்கிர புத்தி (3 வருடம் 2 மாதம்)
 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் கீழ்நிலை ஊழியர்களுக்கு இனிப்பான தின்பண்டம் கொடுங்கள் அதில்  எள் சேர்ந்து இருந்தால் சிறப்பு
 
சனி தசை-சூரிய புத்தி(11 மாதம் 12 நாட்கள்)
 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் வேலைசெய்யும் மனிதர்களுக்கு மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வாங்கிக் கொடுக்கவும். மற்றும் கேழ்வரகு தானம் நல்லது.
சனி தசை சந்திர-புத்தி (1 வருடம்7 மாதம்)
 இந்த காலகட்டத்தில் ஜாதகர்கள் கவனமாக இருக்கவேண்டும் ஏதேனும் இழப்பை சந்திக்க நேரும் எனவே பரிகாரங்களை பக்குவமாக செய்யவும் சனிக்கிழமை பகல் 12:00 மணி முதல் 1:00 மணிக்குள் தயிர் சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது நெய் சேர்த்த உணவு ,பால் தானம், குடிப்பதற்கு மோர் ,பசுவுக்கு தீவனம், கோசாலைக்கு உதவிஸ் எருமை மாட்டிற்கு புண்ணாக்கு என எந்த தானம் உங்களால் முடிகிறதோ அத்தனை கண்டிப்பாக செய்துவிடுங்கள் சனிக்கிழமை தோறும் மதிய நேரத்தில் யாராவது ஒருவருக்காவது ஏதோ ஒன்றை கொடுத்து விடுங்கள்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும். காகத்திற்கு தினமும் சாதம் வைக்கவும்.
சனி தசை-செவ்வாய் புத்தி (1 வருடம்1 மாதம் 9 நாட்கள்)
 காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் சனிக்கிழமைகளில் ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் கொஞ்சம் துவரம் பருப்பை போட்டு தோட்டவேலை செய்பவர்கள் கொடுக்கவும் .வயலில் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் நல்லெண்ணெயும் எருமை மாட்டிற்கு புண்ணாக்கும் கொடுக்கவும்
சனி திசை-ராகு புத்தி (2 வருடம் 10 மாதம் 6 நாட்கள்)
 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் எருமை மாட்டிற்கு கண்டிப்பாக ஏதாவது கொடுத்தே ஆக வேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மாடு வளர்ப்பவர் அல்லது மாட்டு தொழுவத்தில் உள்ளவர்களிடம் பேசி முன்னரே பணமோ தீவனம் கொடுத்து சனிக்கிழமைதோறும் எருமை மாட்டிற்கு கொடுக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். வேறு வழியில்லை சனி ராகு சம்பந்த காலத்தில் எருமை பரிகாரம் மட்டுமே உள்ளது. சிவனையும் பைரவரையும் வழிபட வேண்டும்.
சனி தசை-குரு புத்தி (2 வருடம் 6 மாதம் 12 நாட்கள்)
 சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கூடம் சத்துணவு கூடத்தில் ஆயா வேலை பார்ப்பவர்களுக்கு மஞ்சள் புடவை கொடுக்கவும். சனி தசை பரிகாரம் சனிக்கிழமைகளில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular