கிரக அவஸ்தை
அவஸ்தை 5 வகைப்படும்
1.பால்ய அவஸ்தை-குழந்தைப்பருவம்
2.கௌமார அவஸ்தை- விளையாட்டுப் பருவம்
3.யெளனவ அவஸ்தை-வாலிபப்பருவம்
4. விருத்தாஅவஸ்தை-முதுமைப்பருவம்
5. மரண அவஸ்தை-இறப்புநிலை
இந்த ஐந்து நிலைகளில் ஒரு கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
இதில்
சனி, ராகு,கேது-விருத்தா அவஸ்தையில் இருக்கக்கூடாது
சுக்கிரன்-கௌமார, மரண அவஸ்தையில் இருக்கக்கூடாது.
புதன், குரு, சூரியன்-மரண அவஸ்தையில் இருக்கக்கூடாது
சந்திரன்-பால்ய அவஸ்தையில் இருக்கக் கூடாது
இது தவிர மற்ற அவஸ்தைகளில் இருக்கும் பொழுது தர வேண்டிய பலனை சிறப்பாக தரும். யெளனவ அவஸ்தையில் இருக்கும் கிரகம் தம் பலனை முழுமையாக செய்யும்.
அவஸ்தை காணும் முறை:
ஆண் ராசிக்கு ஒருவரிசை கிரகமாகவும், பெண் ராசிகளுக்கு அதே வரிசை தலைகீழாக மாறியும் வரும்.
ஆண் ராசி(ஒற்றை ராசி): மேஷம், மிதுனம், சிம்மம் ,துலாம் ,தனுசு, கும்பம்
💜1° முதல் 6°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-பால்ய அவஸ்தை.
💜7°முதல் 12° க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-கெளமார அவஸ்தை.
💜13° முதல் 18° க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-யெளனவ அவஸ்தை.
💜19° முதல் 24°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-விருத்தா அவஸ்தை
💜25° முதல் 30° க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-மரண அவஸ்தை
பெண் ராசி (இரட்டைப்படை): ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்
💜1°முதல் 6°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-மரண அவஸ்தை
💜7° முதல் 12° ஒரு கிரகம் இருப்பின் அது-விருத்தா அவஸ்தை.
💜13°முதல் 18°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-யெளனவ அவஸ்தை
💜19°முதல் 24°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது கௌமார அவஸ்தை
💜25° முதல் 30°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது பால்ய அவஸ்தை.
நன்றியுடன்!
சிவா.சி
✆9362555266