Wednesday, March 22, 2023
Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- மேஷ ராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- மேஷ ராசி

ASTRO SIVA

google news astrosiva

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- மேஷ ராசி

மலர்ந்த முகத்துடன் வந்தவரை உபசரித்து உதவும் குணமும், ராஜதந்திரமும் உடைய மேஷ ராசி அன்பர்களே!!!

 உங்களுக்கு இந்த பிலவ வருடம் எப்படியான பலன்களைத் தர உள்ளது என பார்ப்போம். உங்கள் ராசியிலேயே சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால்
  •  தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்
  •  குடும்பத்தில் அமைதி நிலவும்
  • கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்
  • குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்
  • குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்
  •  உடல் நலத்தில் சற்று கவனம் தேவை
  • உறவினர் மற்றும் நண்பர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்
  •  வெளியூர் பயணங்கள் மனநிறைவு தரும்
  • முன் கோபத்தை தவிருங்கள்
  • சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
  • மகனுக்கு நல்ல மணப்பெண் அமையும்
  •  வேலை வாய்ப்புகள் தேடி வரும்
  • சித்திரை ஆடி மாதங்களில் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்
  • பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முற்படுவீர்கள்
  • அம்மாவுடன் கருத்து மோதல்கள் வந்தாலும் நெருக்கடி நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வீர்கள்
  • கார்த்திகை மாதம் முதல் எதிலும் வெற்றி பெறுவீர்கள்
  • பணவரவு சரளமாக இருக்கும் செலவுகளை சமாளிப்பீர்கள்
  •  சொந்தபந்தங்கள் வியக்கும்படி முன்னேற எண்ணுவீர்கள்
  • ஆடை ஆபரணம் சேரும்
  • மன உளைச்சல் அகலும் , தன்னம்பிக்கை துளிர்விடும்
  • மார்கழி பங்குனி மாதங்களில் வீடு மனை வாங்குவீர்கள் சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கொள்வார்கள்
  •  சகோதர சகோதரிகளின் ஆதரவு பெருகும்
  • நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்
  • புது நண்பர்கள் அறிமுகமாவார்கள்
  • வெளிநாட்டுக்குச் செல்லும் முயற்சி சாதகமாகும்
  • வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்
பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- மேஷ ராசி

 செல்ல வேண்டிய ஆலயம் 

மேஷ ராசி அன்பர்கள் சென்னை நங்கநல்லூரில் அருளும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்கி வாருங்கள்.

 இயலாதவர்கள் சுவாதி தினத்தன்றும் , சனிக்கிழமைகளிலும் வீட்டுக்கு அருகிலுள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பானகம் சமர்ப்பித்து ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரலாம்.
❝மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்காளைப்  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
 தக்கானை கடிகைத்  தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே❞
 எனும் பாசுரம் படித்து தினமும் வழிபட தடைகள் நீங்கும். முன்னேற்றம் உண்டாகும்.
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular