Friday, March 31, 2023
Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-மிதுன ராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-மிதுன ராசி

ASTRO SIVA

google news astrosiva

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-மிதுன ராசி 
மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் பண்பும், யார் மனதையும் புண்படுத்தாத உள்ளமும், ஆன்மீகம், தத்துவம், அறிவியல் என அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் மிதுன ராசி அன்பர்களே!!!
 உங்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்
உங்களின் லாப ராசியில் இந்த வருடம் பிறப்பதால்
  • அதிரடி முன்னேற்றங்கள் உண்டு
  • சொல்ல முடியாத அளவுக்கு இழப்பு மற்றும் எதிர்ப்புகளை சந்தித்து வந்த உங்களுக்கு  இந்த வருடத்தின் துயரங்கள் யாவும் தொலையும்
  • புரட்டாசி மாதம் முதல் புரட்சிகரமான முடிவுகள் எடுப்பீர்கள்
  • உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்
  • குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும் இனி வீட்டில் அமைதி தங்கும் வாழ்க்கை துணைவருடன் சண்டை சச்சரவுகள் நீங்கும் அவர் வழி உறவினர்களுடன் இருந்த சங்கடங்கள் நீங்கி உறவு பலப்படும்
  • பிள்ளைகள் இனி உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள்
  • தடைபட்ட கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும்
  • இதுவரை தொழில் தொடங்கலாம் என முயன்றபோது தடைகளும் தாழ்வுமனப்பான்மையும் தானே வந்தன இனி நீங்கள் எதையும் தகுந்த முன் யோசனையுடன் செய்வீர்கள்
  • கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும், ஆரோக்கியம் அதிகரிக்கும் அழகு கூடும், முகமலர்ச்சி அடையும்
  •  உங்கள் மகனுக்கு வேலை கிடைக்கும்
  • கார்த்திகை மாதம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
  • மகளுக்கு நல்ல வரன் அமையும் அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள்
  • அஷ்டமத்துச் சனியால் ஏற்படும் தீமைகள் விலகி மனம் தெளிவுபெறும்
  •  உங்களின் கனிவான பேச்சால் சண்டை சச்சரவுகள் குறையும்
  • வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம் ஆனி ஆவணி மாதங்களில் சிறப்பாக முடியும்
  • சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும்
பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-மிதுன ராசி
செல்ல வேண்டிய ஆலயம் 

மிதுன ராசி அன்பர்களுக்கு ஸ்ரீ சொர்ண கால பைரவர் வழிபாடு நன்மை வழங்கும். சிவாலயங்களுக்குச் சென்று பைரவரை வழிபடுவது விசேஷமான பலன்களை பெற்றுத்தரும்.

 குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் அழிவிடைதாங்கியில்  அருளும் ஸ்ரீ சொர்ண கால பைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள் சகலமும் நலமாகும்.
 இயலாதவர்கள் வீட்டிலேயே தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கேற்றி வைத்து பைரவரை தியானித்து
ஒளிமயமாக விளங்குபவரும் 
உலகை காப்பவரும் 
பாவிகளுக்க பயங்கரரும் 
ஷேத்திர பாலகருமான 
பைரவரை வணங்குகிறேன் 
என்று வழிபட்டால் சகல சுபிட்சங்களும் கூடி வரும் இன்னல்கள் நீங்கும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular