Saturday, April 1, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -55-9ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -55-9ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

9ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

 
9ம் பாவாதிபதி (9th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டம் பெற்றவர், அல்லது அபிவிருத்தி அடைவார் . அரசு  மரியாதை கிடைக்கும். நல்லகுணம், கல்விமான், மக்களிடம் மரியாதை, வசீகரமானவர்
 
9ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மேதைகளாகவும், அறிவளியாகவும் இருப்பார். எல்லோரிடமும் அன்பாக இருப்பார். செல்வம் மற்றும்  புலன்களை தாக்குகின்ற விஷயங்களைப் பற்றி பேசுதல், மனைவி மகன்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் 
 
9ம் பாவாதிபதி3ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சகோதரத்தன்மையும் ,செல்வத்துடனும் ,நல்ல ஒழுக்கம் ,குணத்துடன் தன்மையுடன்  கூடிய படிப்பு போன்றவற்றை பெறுவார் .
 
9ம் பாவாதிபதி(9th House in Astrology) நாலாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் வீடுகள், வாகனங்கள் மூலம்  மகிழ்ச்சிகளை பெறுவார். எல்லா விதமான செல்வங்களும் சொத்துக்களும் பெறுவார்  தாயாரிடம் பக்தியும் இருக்கும்.
 
9ம் பாவாதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மகன்களையும், செழுமையும், மூத்தவர்களிடம் பக்தி, தைரியம், கருணையும்  கல்வியையும் பெற்றவராக இருப்பார்
 
9-ம் பாவாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் குறைவான அபிவிருத்தியும், மகிழ்ச்சி இல்லாமலும், தாயாரின் சொந்தங்கள், உறவுகள் மற்றும்   எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருக்கும்.
 
9-ம் பாவாதிபதி(9th House in Astrology) 7ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கல்யாணத்திற்குப் பின் மகிழ்ச்சியாகவும், நல்ல குணம் புகழுடன் இருப்பார்.
 
 9-ம் பாவாதிபதி எட்டாமிடத்தில் இருப்பின் ஜாதகர் அபிவிருத்தி அடைய மாட்டார். மூத்த சகோதரர் இருந்தும் மகிழ்ச்சியாய் இருக்க மாட்டார்.  சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டார்
 
 9-ம் பாவாதிபதி  9 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அபரிவிதமான அதிர்ஷ்டங்களை பெற்றிருப்பார். நல்ல ஒழுக்கம், குணம் ,அழகு, கூடப் பிறந்தவர்களுடன் அதிகம் மகிழ்ச்சியாய் இருப்பார் 
 
 9-ம் பாவாதிபதி  பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அரசர் போல அல்லது அவருக்கு சமமாக அல்லது அமைச்சராக அல்லது ராணுவ தலைமை அதிகாரியாக  நல்லொழுக்கம் ,நற்குணங்களும் நிறைந்து இருக்கும் . எல்லோரிடமும் அன்பாகவும் இருப்பார்.
 
 9-ம் பாவாதிபதி(9th House in Astrology)  பதினோராம் இடத்தில் இருப்பின் ஜாதகர் நீதிமான் மூலம் லாபம் நாளுக்குநாள் பெறுவார். முதியவர்களுடன் பக்தியுடன் இருப்பார். நல்ல குணங்கள், மெச்சத்தக்க செயல்கள் மூலம் பயன் பெறுவார்.
 
 9-ம் பாவாதிபதி  12ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டத்தை இழப்பதற்கு உள்ளாவார். எப்பொழுதும் அனுகூலமான செயல்களுக்கு செலவு செய்வார். அதனால் மேலும்  ஏழையாய் போய்விடுவார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular