Saturday, March 25, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-56-10ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-56-10ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

10ம் பாவாதிபதி நின்ற பலன்கள்(10th House in Astrology ) 

10ம் பாவாதிபதி (10th House in Astrology ) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அறிவாளியாகவும், புகழ் பெற்றவர், கவிஞர், சிறுவனாக இருக்கும்போது நோய்களை அடைவார். பின்னர் மகிழ்ச்சியாக இருப்பார். அவருடைய செல்வம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
 
10ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் செல்வந்தராகவும், நல்ல குணநலன்களுடனும் , அரசால் மதிக்கப் பெற்றவராகவும், கருணையுள்ளம் கொண்டவர், தந்தையிடம் இருந்தும் மற்றவர்களாலும் மகிழ்ச்சியை அனுபவிப்பார்.
 
10ம் பாவாதிபதி(10th House in Astrology ) 3ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எப்போதும் மகிழ்ச்சியில் இருப்பார். மகிழ்ச்சியை சகோதரர்களிடமிருந்தும்  வேலைக்காரர்களிடமிருந்தும்  பெறுவார். தைரியமாகவும்,நல்ல குணம் உள்ளவராகவும்,பேச்சாற்றல், உண்மையுள்ளவராகவும் இருப்பார்.
 
10ம் பாவாதிபதி 4-ம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சி ,எப்போதும் தாயின் உடல்நலத்தில் அதிக விருப்பம்.ஜாதகர் வாகனம் ,நிலங்கள் ,வீடுகள் ,நல்ல குணங்கள் ,செல்வந்தராகவும் இருப்பார்.
 
10ம் பாவாதிபதி(10th House in Astrology ) 5ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் பலவிதமான கல்விகளையும்  பெற்றிருப்பார். செல்வந்தராகவும், சந்தோஷம் மகன் மூலம் பெற்றவராகவும் இருப்பார்.
 
10ம் பாவாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் பெற்றோர்களின் ஆனந்தத்தை பறிகொடுத்தவர் ஆக இருப்பார். திறமைசாலியாக இருக்கலாம், செல்வம் பறிகொடுத்த வராகவும் இருப்பார். எதிரிகளின் தொல்லையால் துன்பப்படுவார் 
 
10ம் பாவாதிபதி ஏழாம்(10th House in Astrology ) இடத்தில் இருந்தால் ஜாதகரின் மனைவி மூலம் மகிழ்ச்சியை பெறுவார். நுண்ணறிவு மிக்கவர், நல்ல குணநலன்களும், நேர்மையானவராகவும் , பேச்சாற்றல் உடையவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் இருப்பார்.
 
10ம் பாவாதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நல்ல காரியங்களை செய்யாதவராகவும் , நீண்டநாள் வாழ்பவராகவும்  மேலும் அடுத்தவர்கள் மீது பழிபோடும் நோக்கம் கொண்டவராகவும் இருப்பார்.
 
10ம் பாவாதிபதி 9 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அரண்மனையில் பிறந்திருந்தால் அரசனாக முடியும். ஆனால் ஜாதகர் அரசனுக்கு சமமாக வர முடியும். இந்த மாதிரியான இடம் செல்வத்தையும், சந்ததியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
 
10ம் பாவாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எல்லா வேலைகளிலும் திறமைசாலியாகவும் இருப்பார். தைரியமாகவும், நேர்மையாகவும், முதியவர்களிடம் பக்தியுடனும் இருப்பார்.
 
10ம் பாவாதிபதி  11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சம்பத்து, மகிழ்ச்சி, மகன்கள் மூலம் பெறுவார். அவருடைய நல்ல குணங்கள், நேர்மையான குணம்,  எப்போதும் சந்தோஷமாக இருப்பார்.
 
10ம் பாவாதிபதி 12ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகன் அரசனைப் போல் செலவு செய்வார். எதிரிகளிடமிருந்து பயம் உண்டாகி, திறமையாக இருந்தாலும் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular