Saturday, December 2, 2023
Homeஇன்றைய ராசி பலன்பஞ்சாங்கம் -ராசி பலன்(25.05.2021)

பஞ்சாங்கம் -ராசி பலன்(25.05.2021)

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

பஞ்சாங்கம் -ராசி பலன்(25.05.2021)

தமிழ் தேதி /கிழமை/வருடம் வைகாசி -11/செவ்வாய்/5123 பிலவ
ஆங்கில நாள் 25.05.2021
இன்றய சிறப்பு வைகாசி -விசாகம்
சூரியன் உதயம் 05.50AM
சூரியன் அஸ்தமனம் 06.31PM
ராகு காலம் 03.30PM -04.55PM
குளிகை காலம் 12.10PM -01.45PM
அபிஜித் முகூர்த்தம் 11.45AM -12.35PM
எம கண்டம் 09.00AM -10.35AM
திதி 07.56PM வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி
நட்சத்திரம் விசாகம்
சந்திராஷ்டமம் அஸ்வினி
யோகம் மரணயோகம்
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
ராசி பலன்

ராசி பலன்-25.05.2021

ராசி பலன்
மேஷம் MESHAMஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கெளரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும்.
ரிஷபம் RISHABAMதிடீர் யோகத்தால் தனவரவுகள் உண்டாகும். பங்காளிகளால் ஏற்பட்ட வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம் MITHUNAMதொழில் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவிகளால் தொழிலில் மேன்மை உண்டாகும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.
கடகம் KADAGAMதீர்ப்புகளில் சாதகமான எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.
சிம்மம் SIMMAMபணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
கன்னி KANNIகுடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். கால்நடைகளின் மூலம் லாபம் உண்டாகும்.
துலாம் THULAAMபோட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம் VIRUCHIGAMஉயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எடுத்த செயலை முடித்து காட்டுவதன் மூலம் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்பீர்கள்.
தனுசுTHANUSU மனதில் புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்துவந்த பணச்சிக்கல்கள் நீங்கும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள்
மகரம்MAGARAM குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சங்கீத இசைக் கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்KUMBAM எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத் தேடல் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்புகள் உயரும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்MEENAM உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் பேசும்போது கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். எண்ணங்களின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular