ராசி | பலன் |
மேஷம்  | மனதில் இனம் தெரியாத குழப்பத்திற்கு இடம் தராதீர்கள். புதிய முயற்சிகளை நன்கு திட்டமிட்டு நிதானமாக யோசித்துச் செய்யவும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள் தான். சிலர் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். |
ரிஷபம்  | பேச்சு, செயலில் விவேகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி காண்பீர்கள். லாபம் ஆறுதல் தரும். சிலர் குடும்பத்தில், சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நற்செயல் கண்டு மகிழ்வர். ஆடை, ஆபரணம் சேரும். |
மிதுனம்  | மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்க வேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். |
கடகம்  | குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்களில் நல்லவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். |
சிம்மம்  | செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் செலவுகளிலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். |
கன்னி  | மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். போராடி வெல்வீர்கள். |
துலாம்  | சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள். |
விருச்சிகம்  | குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள் . |
தனுசு | மனம் பக்குவம் அடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இடம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க முயலுவீர்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சிலரது உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். சிலரது ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஓரளவு ஆறுதல் தரும். பல வித புதிய அனுபவங்களை உள்ளடக்கிய நாள். |
மகரம் | இன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும். |
கும்பம் | இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். |
மீனம் | கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். |