Sunday, October 1, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-73-பரணி நட்சத்திர பலா பலன்கள்

அடிப்படை ஜோதிடம்-73-பரணி நட்சத்திர பலா பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

பரணி நட்சத்திர தகவல்கள் :

இந்திய பெயர் பரணி
அரபுப் பெயர் அல்புனடன்
கிரேக்க பெயர் அரிஸ்டிஸ் (அ)முஸ்கேஸ் Ariestis (or)Muscace
அதிதேவதை யமதர்மன்
சீன பெயர் ஓஸு(OSI )
தெய்வம் ஆதித்யன்
பூதம் பிரிதிவீ -மண்
கோத்திரம் விசுவாமித்திரம்
யோனி யானை
பட்சி காக்கை
விருட்சம் நெல்லி மரம்
கணம் மனித கணம்
சூனிய மாதம் சித்திரை
நட்சத்திர ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திர அதிபதி சுக்கிரன்
சரீரத்தின் பாகம் நெற்றி

உடலமைப்பு:

 • நடுத்தர உடலமைப்பு
 • மயிர் அடர்த்தியாக இல்லாவிட்டாலும் சுருண்ட மயிர்.
 • பெரிய உயர்ந்த நெற்றி
 • அழகான வெண்மையான வரிசை பற்கள்
 • உயர்ந்த கழுத்து,
 • நண்பகல் பிறப்பானால் உயர்ந்த நெடிய தோற்றம்
 • தலை முன் நெற்றி அகன்றும் கீழ் உதட்டில் படிப்படியாக குறுகியும் இருக்கும்.
 • அடர்ந்த புருவம், சிவந்த நிறம்

குணம்:

 • பரணியில் பிறந்தவனை நல்ல மனசு காரணமாக எல்லோரும் விரும்புவார்கள்.
 • தன் கருத்துகள் பிறரை மதிக்கும் என்ற கவலை சிறிதும் இன்றி வெளியிடுபவர்.
 • சரியோ, தப்போ தன் மனசாட்சிபடியே நடப்பவன்.
 • கருத்து வேற்றுமைகளால் சில சமயம் எல்லோரையும் எதிர்த்து கொள்ள (அல்லது )பகைத்துக்கொள்ள வேண்டி வரும்.
 • ஆனால் சுட்டிக் காட்டப்பட்டால் தன் தவற்றை உணர்ந்து மீண்டும் நட்பை மேற்கொள்வார்.
 • (பரணிக்கு சுக்கிரன் அதிபதி) சுக்கிரன் பெண் கோள்.
 • நயமானவன் ஆதலால் மேற்கண்டவை பெரிதும் பொருந்தாது.
 • மாறாக தன் நடத்தை, அழகு ,உருவ பாதிப்பு இவற்றால் எல்லோரையும் தன்பால் இழுத்துக் கொள்வான்.
 • இவன் பிறரை பாதுகாக்க கூடுமானாலும் இவனை பார்த்துக்கொள்ள வேறு நபர் வேண்டும் என்பதே உண்மையே.

கல்வி வருவாய் மூலம்-தொழில்

 • இவனுக்கு கல்வி நிறைய உண்டு
 • இருப்பினும் வாழ்க்கையில் 33 வயதிற்கு மேல் தான் முன்னேற்றம் உண்டாகும்
 • வாசனைப் பொருள் வியாபாரம், ஜவுளி நாகரீக அழகுக்கலை சாதனங்கள் வியாபாரம், பெரிய உணவகம் வைத்து நடத்தி முன்னேறல், நுண்கலை, நடிப்பு, திரைப்படத் துறை போன்றவற்றில் நல்ல லாபம் வரும்.
 • பரணி பிறந்தான் தரணி ஆள்வான் என்ற பழமொழிப்படி இவனுக்கு பெருத்த ராஜயோக வாழ்க்கை அமையும்.

குடும்பம்:

 • இளம்வயதில் திருமணம்.
 • அன்யோன்ய அதி சுகமான தாம்பத்திய வாழ்க்கை.
 • இவன் மனைவி உணவிலிருந்து அந்த உணர்வு வரை நிரப்பி நன்றாக இவனை சுகமாக வைப்பாள்.
 • முதல் அல்லது இரண்டாம் பாதத்தில் பிறந்த இருந்தால் தகப்பன் இளமையில் மரணம் ஆகலாம்.
 • இவன் வீட்டுக்கு வெளியே இருக்க விரும்ப மாட்டான்.
 • குடும்பத்தின் மேல் பாசம் அதிகம்

உடல் நலம்:

 • சுகபோக உல்லாசன்.ஆகையால் பால்வினை நோய் வரலாம்.
 • நீரழிவு ,உடல்வலி முக்கியமாக காணப்படும்.
 • இவனுக்கு நீர் கண்டம் உண்டு
 • முன்நெற்றியில் தாக்கப்படலாம்
 • தொடர்ந்து புகை பிடிக்கும் கெட்ட பழக்கம் உண்டு எனவே இதயநோய் வரலாம்.
பரணி

பரணி நட்சத்திர பெண்கள்

 • பரணி பெண்கள் அமைதியான குணம்,
 • அழகிய சுண்டிக்கவரும் நளின தோற்றம்,
 • தன் கருத்துப் படியே நடப்பாள் சிறிது வணங்காமுடி.

கல்வி தொழில் :

 • தன் வாழ்க்கைக்கு தானே தேவையானவற்றை சம்பாதிப்பாள்
 • நல்ல முதிர்ந்த மறுவற்ற பண்பு
 • தனக்கு மூத்தவர்கள், பெற்றவர்கள் இவர்களிடம் நல்ல மரியாதை ,பணிவுடன் நடந்து கொள்வாள்.
 • குடும்ப வாழ்க்கை
 • 23 வயதில் திருமணம்-குடும்பத்தில் இவள் கை ஓங்கியிருக்கும்.
 • தன் கணவனின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாம் இவளுக்கே உரிமையாகும்.
 • கணவர் குடும்பத்தினரால்(மாமியார், நாத்தனார்) போன்றவர்களால் பெரிதும் தொல்லைகளுக்காளாகலாம் .
 • இரண்டாவது பாதத்தில் பிறந்தவலானாள் மாமியார் இறக்க நேரலாம்
 • தன் குடும்பத்தைப் பற்றி அதிகம் பெருமைப்படுவார்.
 • தான் விரும்பும் ஆண் ஒருவருக்கே அடங்கி போவாள்
 • தன்னைவிட அந்தஸ்து குறைவான கணவனானால் அவனை அடக்கி ஆட்சி செலுத்துவாள்

ஆரோக்கியம்

 • பொதுவாக நன்றாக இருக்கும் அடிக்கடி மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம்.
பரணி நட்சத்திரத்தின் இதர காரகங்கள்:

நோய்கள்: தலையில் அடிப்படல், அதிக சம்போகத்தால் வெக்கை நோய்,(சூட்டினால் ஏற்படுவது),சளி, இருமல், ரத்த நாள குறைபாடு, அடைப்பு, உணவில் ருசியின்மை, அதிக உணர்ச்சி, வேகப் படல் முதலியன.

 • இந்த நட்சத்திரம் முதல் பாதத்தில் நோய் கண்டால் மூன்று நாட்களில் தீரும்
 • இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் 7 நாட்களில் தீரும்
 • மூன்றாம் பாதத்தில் நோய் தோன்றினால் 15 நாட்களில் தீரும்
 • நான்காம் பாதத்தில் நோய் தோன்றினால் 15 நாட்களில் தீரும் திராவிட 16வது நாள் மாரகம்(மரணம்) பண்ணும்.
 • பரணிக்கு அதிதேவதையே காலனாகிய யமன். ஆகையால் இதில் நோய் கண்டால் தீருவது கடினம் ஆகும்.
நோய் பரிகாரம் :

பரணி நட்சத்திரத்தில் நோய் கண்டால் ஐந்து நாளில் தீராவிடில் எள் சாதம் செய்து நோயாளியின் தலையை சுற்றி ஊருக்கு வெளியே மாடு மந்தை மடக்கும் இடத்திற்கு அப்பால் நாற்சந்தியில் வைத்துவிட்டால் அந்த நோய் நீங்கும் என்பதாம்.

 • நண்பகலில் இந்த நட்சத்திரத்தில் மேகம் தோன்றினால் 16 தினங்களில் மழை உண்டாகும்.
 • பங்குனிமாதம் சூனியம்
 • புதன்கிழமை இதனுடன் சப்தமி சேர்ந்தால் விஷ யோகம
 • பரணி மட்டும் புதன்கிழமையில் வந்தால் விஷயோகம்
 • ஞாயிறு சேர்ந்தால் எமகண்ட நாள்
 • இதன் கடைசி அம்சம் மரண யோகம் அல்லது தின மிருத்யு எனப்படும்.
பரணி

பரணி நட்சத்திரத்தில் செய்ய தக்கவை:

கத்திரருக்க, மாடு வாங்க, ஆயுதப் பிரயோகம், மூலிகை உபயோகிக்க, மருந்து உண்ண, அடுப்பு வைக்க, தானியம் களஞ்சியத்தில் சேர்க்க, வியாதியஸ்தர் குளித்தல் போன்றவற்றிற்கு நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular