ராசி | பலன் |
மேஷம்  | குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். |
ரிஷபம்  | எந்த விஷயத்தையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி எளிதாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்தியளிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர். மனைவி விரும்பிய பொருளை சிலர் வாங்கித் தரலாம். மொத்தத்தில் ஆடம்பரங்கள் இல்லாத ஒரு அமைதியான நாள்… இந்நாள். |
மிதுனம்  | உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலரது முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தரலாம். பிள்ளைகளின் விருப்பத்தை சிலர் நிறைவேற்றுவீர்கள். மாலையில் மகிழ்ச்சியான தகவல்கள் சிலருக்கு வந்து சேரலாம். . அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை சிலருக்கு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். |
கடகம்  | நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். பணியிடத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன பயணம் சம்பந்தமாக நல்லதோர் முடிவு கிட்டும். வியாபாரிகளுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். |
சிம்மம்  | எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். |
கன்னி  | புதிய முயற்சிகளை கவனமாகச் செய்யவும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் சிலருக்கு கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் நிதானத்துடன் ஈடுபடவும். |
துலாம்  | கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். அக்கம் – பக்கத்தில் உள்ளவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். கைமாற்றாக பணம் கொடுப்பதை தவிர்க்கவும். |
விருச்சிகம்  | எடுத்துச் செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். எனினும், எடுத்துச் சொல்லி புரிய வைத்து விடுவீர்கள். வீட்டிலும் – வெளியிலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி அலைச்சலுக்குப் பின் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். |
தனுசு | துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடனான பிரச்சனையை சிலர் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து போராடி வெல்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள். |
மகரம் | இன்று மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல் நிலையில் ஓரளவே முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை படிப்படியாகத் தென்படும். |
கும்பம் | கணவன் – மனைவி இடையே பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மனசாட்சிப் படி செயல்படும் நாள். |
மீனம் | சுபநிகழ்ச்சிகளுக்காக செலவுகள் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதியும், குதுாகலமும் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முன்னர் செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும். |