- Advertisement -
ராசி பலன் –பஞ்சாங்கம்-(28.05.2021)
தமிழ் தேதி /கிழமை/வருடம் | வைகாசி -14/வெள்ளி /5123 பிலவ |
ஆங்கில நாள் | 28.05.2021 |
இன்றய சிறப்பு | முகூர்த்த நாள் ![]() |
சூரியன் உதயம் | 05.50AM |
சூரியன் அஸ்தமனம் | 06.31PM |
ராகு காலம் | 10.30AM -12.00PM |
குளிகை காலம் | 07.30AM -09.00AM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 03.00PM -4.30PM |
திதி | துவிதியை மதியம் 12.30 மேல் திரிதியை |
நட்சத்திரம் | மூலம் |
சந்திராஷ்டமம் | கிருத்திகை,ரோகிணி |
யோகம் | அமிர்தயோகம் |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | வெல்லம் |

ராசி பலன்-28.05.2021
ராசி | பலன் |
மேஷம் ![]() | எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். |
ரிஷபம் ![]() | மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். தெளிவாகப் பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். |
மிதுனம் ![]() | பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். தொழிலில் புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். காதலில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் தேவை. |
கடகம் ![]() | வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளை வழங்கி நல்ல பெயர் எடுப்பீர்கள். |
சிம்மம் ![]() | தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.. |
கன்னி ![]() | எதிர்பார்க்கும் காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் உங்களது முயற்சி வீண் போகாது. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலர், தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். எனினும் அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். |
துலாம் ![]() | தாமதமான செயல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுகிறது. மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொள்வர். வாகன வகையில் சிறிய செலவினங்கள் ஏற்படலாம். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்பு உண்டு. வருமானம் ஓரளவே திருப்தி தரும். மொத்தத்தில், அலைச்சல் இருந்தாலும் கூட உங்களது முயற்சி வீண் போகாது. |
விருச்சிகம் ![]() | நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். பணவரவு தேவைகளை நிறைவேற்றும் படியாக இருக்கும்.சிலருக்கு மனைவி வழியில் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. |
தனுசு![]() | கணவன் மனைவி ஒற்றுமையில் சிறிய அளவிலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு தடைகள் ஏற்பட்ட பிறகே நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். திருமணம் பற்றிய முயற்சிகள் அலைச்சலுக்குப் பிறகே வெற்றி தரும். |
மகரம்![]() | இன்று எதிர்ப்புகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். அரசு காரியங்கள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருந்து வெற்றி அடைய வேண்டிய நாள் இந்த நாள் |
கும்பம்![]() | உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவர். தொழில் வியாபாரம் செழிக்க அதிக நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். |
மீனம்![]() | கனவு இல்லம் நனவாகக் காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு மாமனார், மாமியார் முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பார்கள். பணியாளர்களுக்கு மேலிடத்தில் சிறு அதிருப்தி தெரிவிக்கப்படும். |
- Advertisement -