ராசி | பலன் |
மேஷம்  | உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். |
ரிஷபம்  | குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். |
மிதுனம்  | மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். |
கடகம்  | பழைய நிகழ்ச்சிகளை சிலர் அசை போடலாம். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். பயணத்தின் போது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். |
சிம்மம்  | வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாத படி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். |
கன்னி  | வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட இடம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் எப்போதும் போல் நடைபெறும். |
துலாம்  | இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். பண வரத்து ஓரளவே திருப்தி தரும். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், அவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். |
விருச்சிகம்  | இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சிலர் அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். |
தனுசு | பெண்களுக்கு குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் முயற்சி செய்தால் தாய் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு உண்டு. |
மகரம் | இன்று குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்ட நாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பணம் கேட்டு நச்சரிக்கலாம். பொறுமையுடன் அதனைக் கையாளவும். மொத்தத்தில், கோபத்தைக் குறைத்து நிதானமாக வெற்றி அடைய வேண்டிய நாள். |
கும்பம் | எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். மாலையில் திடீர் என நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படலாம். அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். |
மீனம் | இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். அக்கம் – பக்கம் வீட்டாரை அனுசரித்துச் செல்ல வேண்டி வரலாம். மொத்தத்தில் பொறுமையால் சாதிக்க வேண்டிய நாள். |