ராசி | பலன் |
மேஷம்  | இன்று மன சஞ்சலம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. வீண் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கோபத்தைக் குறைத்து நிதானத்தால் வெல்ல வேண்டிய நாள். சிலருக்கு வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் தென்படும். மொத்தத்தில் நாளின் இறுதியில், சோதனையை சாதனை ஆக்குவீர்கள். |
ரிஷபம்  | கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள். |
மிதுனம்  | புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள். |
கடகம்  | அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கவனக் குறைவினால் ஏமாற்றத்துக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். |
சிம்மம்  | தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். |
கன்னி  | எதிர்பார்த்த பணம் கைக்கு வர சற்று காத்திருக்க வேண்டி வரலாம். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் ஓரளவே அனுகூலமாக முடியும். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு பல முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. குறிப்பாகப் பெரிய தொகையை தகுந்த சாட்சியம் இன்றி நம்பி யாரிடத்திலும் தர வேண்டாம். |
துலாம்  | இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். |
விருச்சிகம்  | சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம்புரியாத பயம் – கவலை வந்து போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள் இந்நாள். |
தனுசு | எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, நகைகளின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறுவதற்கான சூழல் உருவாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். |
மகரம் | கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள். |
கும்பம் | தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். உழைப்பால் வெற்றி அடையும் நாள். |
மீனம் | இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம்… சிலருக்கு உத்தியோக மாற்றம் கூட உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட இடம் உண்டு. எனினும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்பட்டு விலகலாம். முடிந்த வரையில் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் மனதறிந்து நடப்பது நல்லது. இது ஒரு சுமாரான நாள். |