ராசி | பலன் |
மேஷம்  | எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள். |
ரிஷபம்  | இன்று எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற கூடுதல் முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். இது நாள் வரையில் இருந்து வந்த மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பெண்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். உத்யோகஸ்தர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு வழக்கமான நாளே! |
மிதுனம்  | இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு வருத்தம் தரும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் சஞ்சலம் ஏற்படும். |
கடகம்  | சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். மற்றவர்களுடன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும். |
சிம்மம்  | எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள். |
கன்னி  | உங்களின் பேச்சில் அனுபவ அறிவுவெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர் கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள். |
துலாம்  | சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். |
விருச்சிகம்  | இன்றைய தினத்தை பொறுத்தவரையில் செலவுகள் அதிகரிக்கும் தினம். எனினும் அனைத்தும் பெரும்பாலும் தேவையான செலவுகளாகத் தான் இருக்கும். சிலர் ஆபரணங்களை கூட வாங்கி மகிழ்வார்கள். இந்த நாள் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். அலைச்சல் இருந்தாலுமே கூட முயற்சிக்கு தக்க பலன் உண்டு |
தனுசு | இன்று உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். பெரும்பாலும் தீமைகள் அகலும் நாள். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்காமல் போகாது. பண விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும். |
மகரம் | இன்று காலையில் சற்று மந்தமாக இருந்தாலும் பிற்பகுதியில் திடீர் பணவரவு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப் பெறும். மதியத்திற்கு மேல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மை உண்டு. மதியத்திற்கு மேல் அலைச்சல் இருந்தாலும் கூட சென்ற காரியம் வீண் ஆகாது. எனினும் காலை பொழுதில் நிதானம் தேவை.. |
கும்பம் | சிலருக்கு இருந்து வந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள். |
மீனம் | மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். மொத்தத்தில் திறமையால் சாதிப்பீர்கள். |