- Advertisement -
ராசி பலன் -பஞ்சாங்கம்-(05.06.2021)
தமிழ் தேதி /கிழமை/வருடம் | வைகாசி -22/சனி /5123 பிலவ |
ஆங்கில நாள் | 05.06.2021 |
இன்றய சிறப்பு | தத்தாத்ரேய ஜெயந்தி ,உலக சுற்றுசூழல் தினம் |
சூரியன் உதயம் | 05.52AM |
சூரியன் அஸ்தமனம் | 06.28PM |
ராகு காலம் | 09.00AM -10.30AM |
குளிகை காலம் | 06.00AM -07.30AM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 01.30PM -03.00PM |
திதி | தசமி காலை 7.55 மணிக்கு மேல் ஏகாதசி |
நட்சத்திரம் | ரேவதி |
சந்திராஷ்டமம் | உத்திரம் |
யோகம் | மரணயோகம் |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
ராசி பலன்-05.06.2021
ராசி | பலன் |
மேஷம் ![]() | புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். |
ரிஷபம் ![]() | கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனசாட்சிபடி செயல்படும் நாள். |
மிதுனம் ![]() | உற்சாகமான நாளாக அமையும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும் |
கடகம் ![]() | இந்த நாளை பொறுத்தவரையில் நாளின் முற்பகுதி சுபச் செலவுகளை தந்தாலும் கூட பிற்பகுதியில் நன்மைகள் கூடும். அனைத்து விதத்திலும் ஏற்றம் தரும் நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். எதிரிகளின் பலன் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். பெண்கள் பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் – வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். மொத்தத்தில் நாளின் இறுதியில் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பீர்கள். |
சிம்மம் ![]() | புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனையும் சுமாராகத்தான் இருக்கும். |
கன்னி ![]() | சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். |
துலாம் ![]() | புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். |
விருச்சிகம் ![]() | பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். எனினும் சாதுர்யமாக எதிர்கொண்டால் சமாளித்து விடலாம். |
தனுசு![]() | குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள். |
மகரம்![]() | இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.. |
கும்பம்![]() | கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள். |
மீனம்![]() | உறவினர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். தொழிலில் வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். சிலருக்கு எதிர் காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பெரும்பாலும் குடும்பத்தின் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி சிலருக்கு வந்து சேரும். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர். |
- Advertisement -