ராசி பலன் -பஞ்சாங்கம்-(09.06.2021)
தமிழ் தேதி /கிழமை/வருடம் | வைகாசி -26/புதன் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 09.06.2021 |
இன்றய சிறப்பு | இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி பிறந்த தினம் |
சூரியன் உதயம் | 05.52AM |
சூரியன் அஸ்தமனம் | 06.28PM |
ராகு காலம் | 12.00PM -01.30PM |
குளிகை காலம் | 10.30AM -12.00PM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 07.30AM -09.00AM |
திதி | சதுர்த்தசி மாலை 3.00மணிக்கு மேல் அமாவாசை |
நட்சத்திரம் | ரோகினி |
சந்திராஷ்டமம் | விசாகம் |
யோகம் | சித்த யோகம்-அமிர்தயோகம் |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
ராசி | பலன் |
மேஷம் ![]() | இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிக்கவும். |
ரிஷபம் ![]() | ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். எனினும் எதையும் எதிர் நீச்சல் போட்டு இறுதியில் வெல்வீர்கள். கவலை வேண்டாம். |
மிதுனம் ![]() | இன்றைய தினத்தில் உங்கள் தேவைகள் நல்ல விதங்களில் பூர்த்தியாகும். மகத்தான காரியங்களை இன்று நீங்கள் செய்து மகிழ்வீர்கள். அலைச்சல் இருந்தாலும் கூட முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைக்கப் பெறும். மொத்தத்தில் சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் நாள் இந்த நாள். |
கடகம் ![]() | எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். |
சிம்மம் ![]() | கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். |
கன்னி ![]() | பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள் |
துலாம் ![]() | சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குறை, நிறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள். |
விருச்சிகம் ![]() | குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தைரியம் கூடும் நாள். |
தனுசு![]() | தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்ய வேண்டி வரும். |
மகரம்![]() | வரவும் செலவும் அடுத்தடுத்து வரும். தந்தையின் தேவையை நிறை வேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். |
கும்பம்![]() | சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவல கத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். |
மீனம்![]() | முன்னர் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவார். புதிய திட்டங்களை சிறப்பாக வடிவமைப்பீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். |